நேற்று இரண்டு செய்திகள் சில சங்கிகளாலும் , அடிமைகளாலும் , தரங்கெட்ட ஊடகங்களால் பரப்பப்பட்டது.
அதை நன்கு படித்து உணரும் சிலரே நம்பியதுதான் பொய்யின் வலிமை.
1. பழை ஓய்வு ஊதிய திட்டத்தை செயல் படுத்த முடியாது - நிதி அமைச்சர் PTR. (இது பொய் செய்தி)
உண்மை செய்தி - பழைய ஊதிய திட்டத்துக்கு மாறுவதில் இருக்கும் சட்ட சிக்கலைப் பற்றி பேசுகிறார்.அதன் பின் அவை முன்னவரும் , முதல்வரும் எடுக்கும் முடிவை நான் செயல்படுத்துவேன் என்கிறார்.
Sep 17, 2021 • 11 tweets • 3 min read
பெரியாரை இழிவு செய்வதாக நினைத்து சங்கிகளும் , நூலிபான்களும் , நாம் ஜோம்பீஸூம் , சில புலம்பெயர் இலங்கையரும் எடுக்கும் அவதூறு மணியம்மை - பெரியார் திருமணம்.
"வயதான பிறகு திருமணம் செய்தார், திருமணம் நடந்த போது பெரியார் வயது 70 - மணியம்மை வயது 32 , வளர்ப்பு மகளையே திருமணம் செய்தார்"
என வாட்ஸ் அப் இல் தின்ற வாந்தியை கழிந்துக் கொண்டிருப்பார்கள்.
திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட சங்கதி என்றாலும்,
மணியம்மை பெரியாரை திருமணம் செய்த கொண்ட போது 32 வயது , அவராக முடிவெடுத்துதான் திருமணம் செய்து கொண்டார்.
Sep 15, 2021 • 9 tweets • 3 min read
தமிழ்நாட்டு அரசின் பெண்களுக்கு 40% அரசு பணிகளில் ஒதுக்கீடுக்கு எதிராக பேசுபவர்கள் வைக்கும் வாதம் , ஏற்கனவே தமிழ்நாட்டில் 68%-76% பணியிடங்களை பெண்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்பது.
ஆதாரமாக , அவர்கள் காட்டுவது ஒரு வாட்ஸ் அப் வாந்தியை.
ரொம்ப நோண்டினால் , TNPSC இணையதளத்தில் இருக்கு பார்த்துக்கோ என்கிறார்கள்.
இணைப்பு 1 அவர்கள் பகிர்ந்தது , 317 பணி இடங்களில் 240 பணி இடங்கள் பெண்களுக்கும் , 77 பணி இடங்கள் ஆண்களுக்கும் சென்றிருக்கிறது.
பார்த்த உடன் , அட ஆமாம்ல இவர்களின் வாதம் சரிதானே எனத் தோன்றும்.
Sep 14, 2021 • 10 tweets • 3 min read
தமிழ்நாடு அரசு அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30% இல் இருந்து 40% சதவீதமாக உயர்த்தப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை தொடர்ந்து,
சங்கிகள் ,
தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசு பணிகளில் 60% பெண்கள்தான் , இந்த அறவிப்பின் மூலம் ஆண்கள் இனி அரசு பணியை நினைக்கவே முடியாது.
ஆண்கள் இனி வீட்டு வேலை செய்துக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டியதுதான் , பெண்களால் மெரிட்டில் வரமுடியுமா? என இப்படி பெண்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை WhatsApp லும் வேறு சமூக ஊடகங்களிலும் ஆரம்பித்துவிட்டார்கள்
[இணைப்பில் Times of India செய்தியில் comments சில & Twitter Post]
Sep 3, 2021 • 4 tweets • 1 min read
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் (Reliance Naval) நிறுவனம் ₹ 12,429 கோடி வங்கி கடன் வைத்திருக்கிறது.
இப்போது இந்த நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தை இப்போது வாங்க ஆர்வம் தெரிவித்து இருப்பவர்கள், ₹ 12,429 கோடிக்கு பதிலாக ₹ 2000 கோடியை மட்டுமே கட்டமுடியும் , அதுவும் இப்போது ₹ 700 கோடியும் ₹ 1300 கோடி பின்னரும் என தெரிவித்து இருக்கினார்கள்.
மாராத்தி மொழியில் சேனல் ஆரம்பிப்பது என்பது @SunTV சன் டிவியின் 11 ஆண்டு கனவு , 2010 ல் அறிவிக்கப்படாலும் பல காரணங்களால் தள்ளிப்போனது.
2019 இல் உதயா நியூஸ் , ஜெமினி நியூஸ் சேனல்களை மூடிய போது அந்த லைசன்ஸ்களை கொண்டு வங்காள மொழியிலும், மராத்தி மொழியிலும்
சேனல் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் , வங்க மொழி சேனல் இலாபத்தில் இயங்க ஆரம்பித்த பின்தான் மராத்தி மொழி சேனல் தொடங்கப்படும் என்று அறிவித்தார்கள் அப்போதே.
தாமதமாக ஆரம்பித்தாலும் , போட்டிகளை கடந்து நல்ல இடத்தை வங்காள மொழியில் இடம் பிடித்துவிட்டது @SunBanglaTV
Sep 2, 2021 • 7 tweets • 2 min read
News J சேனலை Polimer Samachar என பெயர் மாற்றம் செய்ய பாலிமர் குழுமத்துக்கு அனுமதி வழங்கி இருக்கிறது ஒளிபரப்பு துறை அமைச்சகம்.
News J அதிமுக சேனல் , அதுக்கும் Polimer க்கும் என்ன சம்பந்தம் என குழப்பிக் கொள்ள வேண்டாம்.
அதிமுகவில் இருந்து TTV தினகரன் பிரிந்த போது , Jaya TV சசிகலா குடும்பத்தினர் வசம் இருப்பதால் அதிமுகவுக்கு சேனல் இல்லாமல் போனது.
அப்போது , சேனல் உடனடியாக ஆரம்பிக்க நினைத்த போது அதிமுகவுக்கு உதவிக்கு வந்தது பாலிமர்.
Sep 1, 2021 • 5 tweets • 1 min read
உங்களின் வருமானம் 2019 இல் ரூ 100 என வைத்துக் கொள்வோம்.
அது சில பல காரணங்களால் 2020 இல் 24.4% குறைக்கபட்டு ரூ 75.6 ஆகிறது.
2021 இல் 2020 ஐ விட ரூ 15.20 அதிகமாக்கி வருமானம் ரூ 90.8 ஆகிறது என்றால் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றமா?
இல்லை , ஆனால் 2020 உடன் ஒப்பிடும்போது சதவீத கணக்கில் 20.1% அதிகமாக தெரியும்.
இதை வைத்துதான் GDP 20.1% வளர்ச்சி என கம்பி கட்டிக் கொண்டிருக்கிறார்கள் சங்கிகள், ஆனால் உண்மையில் 2019 ஐ அல்ல 2018 இன் நிலையை கூட நாம் எட்டவில்லை.