RAMANATHAN KRISHNAN Profile picture
worked as senior consultant to media house. Active BJP member. where ever find fault open criticizer
Balaji Venkataraman Profile picture 1 subscribed
Oct 18, 2023 4 tweets 1 min read
தமிழ் நாட்டு கோவில்களில் அர்ச்சகர்கள் தீபாராதனை செய்து தட்டை காட்டும் போது பெறும்பாலோர் ₹10 ம் சில பேர் ₹20 ம் குறைந்த அளவில் ₹50 100 ம் போடுவதை பார்க்க முடிகிறது. (Fast Track ல் வருபவர் ₹100 போடுவார்கள்) அர்ச்சகர்கள் ₹10 போட்டவர்களுக்கு கூட தனிப்பட்ட முறையில் விபூதி குங்குமம்பிரசாதம்கொடுக்கிறார்கள்.
சில்லறைகள் போடுவது வெகுவாக குறைந்து விட்டது.

ஆனால் வடநாட்டில் குறிப்பாக பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் (ஜோதிர்லிங்கம்/காளிபாரி/காலபைரவர்) ₹100 க்கு குறைந்து போட்டால் கவணிப்பதே இல்லை.
Oct 18, 2023 4 tweets 1 min read
திராவிட மாடல் காற்றில் பறந்தது

தமிழகத்தில் சுபமுகூர்த்த நாட்களில் அதிக அளவு பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இன்று ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினம் என்பதால், பத்திரப்பதிவு அலுவலகங்களில் வழக்கத்துக்கு மாறாக பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.இதை கருத்தில் கொண்டு ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டது. இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தது.அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் .
Oct 18, 2023 5 tweets 1 min read
மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் பாஸ்கரன் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், 'கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி தரப்பினர் தாக்கியதாக மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2020-ம் ஆண்டு மதுரை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் செல்வாக்கை
Oct 17, 2023 4 tweets 1 min read
திருப்பதி:சிங்கரா என அழைக்கப்படும் பழுப்பு நிற மான்கள் இந்திய விண்மீன் என்று அழைக்கப்படுகிறது.இந்த வகை மான்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் உட்பட தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது. இந்தியாவில் இந்த பழுப்பு நிற மான்கள் ராஜஸ்தான் மற்றும் கர்நாடக காடுகளில் அரிதாக Image உள்ளன.இந்த வகை மான்கள் கடந்த சில ஆண்டுகளாக அழிந்து வருகிறது. ஆந்திர மாநிலம் நல்லமலா வனப்பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு தென்பட்டன. அதற்குப் பிறகு இந்த மான்கள் நடமாட்டம் இல்லை.இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் நல்ல மலா வனப்பகுதியில் பாலூட்லா
Oct 14, 2023 6 tweets 1 min read
சிவபூஜாதிகார வினாவிடை

1. சிவபூசை என்பது என்னை? மனவாக்குக்கு எட்டாத பரமசிவத்தை அவைகளுக்கு எட்டியதாக ஒன்றில் பாவித்துப் பூசித்தல்.
2. அச்சிவபூசை எத்தனை வகைப்படும்? ஆன்மார்த்தம், பரார்த்தமென இரு வகைப்படும். ஆன்மார்த்த பூசை யென்பது என்னை? அது பக்குவமுள்ள சீடன் ஆசாரியராற் பாணலிங்க முதலிய வற்றிற் சிவபெருமானை விதிப்படி ஆவாகனஞ் செய்து கொடுக்கப் பெற்றுப் பூசிப்பது. அது பூசிப்பவனுக்கு மாத்திரம் பலனைக் கொடுப்பதனால் ஆன்மார்த்தமெனப்படும். 4. பரார்த்த பூசையென்பது என்னை? சுயமாக
Oct 14, 2023 4 tweets 1 min read
சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தின் தென்கரையில், சோழர் காலத்தைச் சேர்ந்த ஜேஷ்டா தேவி என்ற மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், தாய் தெய்வ வழிபாடு மிகவும் பழமையானது. ஆறாம் நுாற்றாண்டு முதல், 11ம் நுாற்றாண்டு வரை கட்டப்பட்ட கோவில்களில் மூத்த தேவி சிற்பங்கள் இருந்தன.

இந்த சிற்பங்கள், பல்லவர் காலம் முதல் சோழர் காலம் வரை கட்டப்பட்ட கோவில்களில் பரிவார தேவதைகளாக வைக்கப்பட்டன. பின், அந்த இடங்களில் நவகிரகங்களும், பைரவர் உள்ளிட்ட சிற்பங்களும் வைக்கப்பட்டன.
Oct 7, 2023 4 tweets 1 min read
புதுக்கோட்டை மாவட்டத்தில் விரல் ரேகை பதிவு காவல் உதவி ஆய்வாளராக சுந்தர்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இவர் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் உள்ள பாரில் மது அருந்தியு ள்ளார்.பின்னர் மது போதையில் அங்கு பணியாற்றும் ஊழி யர்ளுடன் Image தகராறில் ஈடு பட்டுளளார்.இச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் வந்திதா பாண்டே வுக்கு புகார் வந்துள்ளது.புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அவர், காவல் உதவி ஆய்வா ளர் சுந்தர்ராஜை பணியிடை நீக்கம் செய்ய திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவனிடம் பரிந்துரை
Oct 6, 2023 4 tweets 1 min read
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகைக்கடை பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்த வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நடராஜன் சாலையோரம் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் விலை கூடிய வெள்ளி பொருட்கள் இருந்துள்ளது. உடனடியாக சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார். அதேநேரம் சங்கரன்கோவில் பகுதியில் 4 கிலோ பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்த மதுரையை சேர்ந்த வெள்ளி வியாபாரி முத்துக்குமார் வெள்ளி பொருட்களை காணவில்லை என புகார் அளிக்க போலீஸ் நிலையத்தில் நின்றுள்ளார். நடராஜன் கொண்டு வந்து
Sep 22, 2023 5 tweets 1 min read
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரிநாடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், அதே பகுதியைச் சேர்ந்த தம்பதி, பிறந்து, 75 நாட்களான தங்கள் மகளுக்கு தடுப்பூசி செலுத்த வந்தனர். அங்கிருந்த நர்ஸ் ஷீபா, குழந்தைக்கு ஊசி செலுத்தியுள்ளார். அப்போது தான், சிரிஞ்சில் மருந்தில்லாததை குழந்தையின் தாய் பார்த்து, நர்சிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில் ஊசி செலுத்தி முடிக்கப்பட்டுவிட்டதால் குழந்தையின் உடலுக்குள் காற்று சென்றது. ஆனால் மருந்து நிரப்ப மறந்து விட்டதாக நர்ஸ், அலட்சியமாக கூறிவிட்டு சென்றுவிட்டார். இது
Aug 2, 2023 6 tweets 1 min read
ஸ்ரீதர் வேம்பு.. உலகப் புகழ் பெற்ற 18000 கோடி டாலருக்கு சொந்தமான “ஸோஹோ கார்ப்பரேஷனின் (Zoho Corporation ) ”, தலைமை நிர்வாக அதிகாரி ( C E O) .

ஏதோ, இந்த மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் இப்போது இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். Image அங்கு தான் இருந்தது.

அதன் தலைமையகத்தை, 2019ஆம் ஆண்டு அக்டோபரில், தென்காசிக்குப் பக்கம் இருக்கும் “மத்தளம்பாறை” என்னும் தன் கிராமத்துக்குக் கொண்டு வந்து விட்டார் இந்த மஹாமனிதர்.

இப்போது, ஒரே வருஷத்தில், இந்த நிறுவனம், சுமார் 3410 கோடி டாலர் லாபம் அடைந்ததைக் கண்டு,
Aug 1, 2023 6 tweets 1 min read
கிறித்தவ கலாட்டா மீடியா சார்பாக அண்ணன் அண்ணாமலையை பேட்டி கண்டவர் ஈரோடு மகேஷ் என்கிற டுகேஷ்.

இந்து விரோத தேசவிரோத விஜய் டி.வி. ப்ராடக்ட் இவன். மேலும் தீவிர மோடி எதிர்ப்பாளன்...

இவனைப் போன்ற கெட்ட எண்ணம் பிடித்தவர்கள் பேட்டி கொடுக்கும் எதிர் சிந்தனையாளரை எப்படி Image சிக்க வைக்கலாம் எனத் தன்னோடு ஒத்த கருத்துள்ள பாதிரிகள் திருமணம் கடந்த உறவுக்காரன்களுடன் கலந்தாலோசித்தே வருவான்கள்.

அதன்படி அண்ணாமலையை டிரேப் செய்ய இரண்டு விஷயங்களைச் செய்தான்.

அதில் ஒன்றாக

திடுதிப்பென ஓர் ஆட்டைக் கொண்டு வந்து நிறுத்தி அவரை ட்ரோல்
Jul 21, 2023 4 tweets 1 min read
சாலையின் நடுவே பிறந்தநாள் கேக் வெட்டியதைத் தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் சென்னை அம்பத்தூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

வியாழக்கிழமையன்று அம்பத்தூரைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். சாலையின் நடுவே Image பெரிய கேக் ஒன்றை, நண்பர்கள் புடைசூழ அவர் வெட்டினார்.

அப்போது, அவ்வழியே சென்ற ஆட்டோ ஓட்டுநர் காமேஷும் அவரது நண்பர் சதீஷும் இதைக்கண்டு கோபமடைந்தனர். இதையடுத்து அஜய், அவரது நண்பர்களிடம் இவ்வாறு செய்வது சரிதானா, போக்குவரத்து பாதிக்கப்படாதா என்று
May 26, 2023 6 tweets 1 min read
எனது வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெறவில்லை'', என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். மேலும், சோதனை எங்களுக்கு புதிது அல்ல எனவும் கூறியுள்ளார்.

சென்னையில் தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை. இந்த சோதனை எங்களுக்கு புதிது அல்ல. சட்டசபை தேர்தலுக்கு முன்னரே எனது வீட்டில் சோதனை நடந்தது.

இன்று எனது தம்பி, நண்பர்கள், வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடக்கிறது. இன்று சோதனை நடக்கும் வீடுகளில் உள்ளவர்கள் முறையாக வரி செலுத்துபவர்கள்.
May 26, 2023 4 tweets 1 min read
படத்தில் இருப்பவர் பெயர் ஸத்யைந்திர ஜெயின். தில்லி ஆம் ஆத்மி கட்சி அரசின் முன்னாள் சுகாதார மந்திரி. ஹவாலா வழியில் பண மோசடி செய்த குற்றத்திற்காக ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருக்கும் இவருக்கு 35 கிலோ உடல் எடை குறைந்துள்ளது. Image ஜெயின் சமூகத்தினர் தங்கள் மத வழக்கப்படி வெளியில் உணவருந்த மாட்டார்கள். இரவில் உணவருந்த மாட்டார்கள்.
எனவேதான் எடை குறைந்து உள்ளது என்று புலனாய்வு மையம் கொடுத்த கருத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

ஒருவருக்கு 35 கிலோ உடல் எடை குறைகிறது என்றால் அது மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் தான்.
May 26, 2023 6 tweets 1 min read
அமுல் - ஆவின் உண்மை என்ன:

இங்கேயே பாலக்காடு மாவட்டத்தின் ஓரம் தமிழக பகுதியில் கேரளா தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலை ஒரு லிட்டர்க்கு சரசரியாக
39 &40 ரூபாய் தந்து கொள்முதல் செய்கிறது வாரம் ஒரு முறை வங்கி கணக்கில் பணம் செலுத்திய கொண்டு இருக்கிறார்கள்... அமுல் நிறுவனம் இப்போது தான் இங்கே பால் கொள்முதல் செய்ய கட்டமைப்பு ஏற்படுத்துகிறது
அவர்கள் 40ரூபாய் வரை தந்து பால் கொள்முதல் செய்வார்கள்...
சரசரியாக விலை என்று 36என்று சொல்லி விட்டு பால் தரத்தின் அடிப்படையில் 40ரூபாய் வரை தரலாம்..
May 26, 2023 5 tweets 1 min read
சென்னை: 'கேந்திரிய வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளிலும், தமிழ் பாடத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கும் சட்டம், 2015 - 16ம் ஆண்டில் முழுமையாக அமலுக்கு Image வந்தது. ஆனால், 8ம் வகுப்பு வரை மட்டும் அது அமலானது; வரும் கல்வி ஆண்டில், 9 மற்றும் 10ம் வகுப்புக்கும், தமிழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், தமிழகத்தில் செயல்படும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் ராணுவ துறையின்
May 26, 2023 5 tweets 1 min read
சண்டிகரில் நடக்கும் வைகாசி திருவிழாவில், தமிழகத்தைச் சேர்ந்த கிராமிய கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு சண்டிகர் மக்கள் வியந்தனர்.

யூனியன் பிரதேசமான சண்டிகரில், 4,00க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் உள்ளன. அவர்களின் சண்டிகர் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு, நேற்று துவங்கி 28ம் தேதி வரை, 'வைகாசி விழா' என்ற பெயரில் கலாசார விழாவை நடத்துகிறது.

விழாவின் துவக்க நாளான நேற்று, பாரதி பவன் பகுதியில் உள்ள 'கார்த்திகேய சுவாமி' எனும் முருகன் கோவில் கும்பாபிஷேகத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கின. தமிழ் பாடல்கள், மந்திரங்கள் ஒலித்தன.
May 25, 2023 4 tweets 1 min read
பாட்னா:பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியைக்கும், இரண்டு ஆசிரியைகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஆசிரியைகளில் ஒரு தரப்பினர் வகுப்பறையின் ஜன்னல்களை மூடுமாறு கூறி உள்ளனர். மற்றொரு தரப்பினர் அதற்கு மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தலைமை ஆசிரியை வகுப்பறையை விட்டு வெளியேறினார். ஆனால் அவரை துரத்தி வந்த இரண்டு ஆசிரியைகள், தலைமை ஆசிரியையை அங்குள்ள வயல்வெளியில் தள்ளி சரமாரியாக அடித்தனர். செருப்பாலும் தாக்கினர்.
May 25, 2023 4 tweets 1 min read
குடிகாரர்களுக்கு மாற்று பெயர் தற்போது மதுபிரியர்கள்.. அதேபோல்

சாதாரணமாக குடிப்பவர் - மதுஅன்பர்

குடித்துவிட்டு தகறாறு செய்பவர் - மதுவம்பர்

குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் - மதுஜம்பர்

குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் - மதுகம்பர் மது பங்க்கர் - எவருக்குந் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர்.

மது பந்தர் - குடித்துவிட்டு குரங்குச்சேட்டை செய்பவர்..

மது சிந்தர் - வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர்..

மது சித்தர் - உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர்

மது சிங்கர் - குடித்தால் மட்டும் பாடுபவர்..
May 25, 2023 5 tweets 1 min read
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயம் முக்கியத்தொழிலாக விளங்கி வருகிறது.மேலும் தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக காபி, ஏலக்காய் விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர ஆரஞ்சு, கொய்யா, சீதா, அத்தி, எலுமிச்சை உள்ளிட்ட பழ வகைகளும் Image பயிரிடப்பட்டுள்ளன.இந்த நிலையில் குன்னூா் மற்றும் மஞ்சூரில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்களில் அத்திப் பழங்கள் கொத்து கொத்தாக விளைந்துள்ளன.இதனை உள்ளூா் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.ஒருசில தோட்ட உரிமையாளா்கள் அத்திப்பழங்களை
May 25, 2023 4 tweets 1 min read
திருப்பூர்: 'கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட அளவில் மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், மாணவர்களை நிரப்ப முடியாமல், பள்ளி நிர்வாகங்கள் திணறுகின்றன.

இந்த சட்டத்தின் கீழ், அந்தந்த பள்ளிகளில் இருந்து ஒரு கி.மீ., தொலைவிற்குள் வசிக்கும் குழந்தைகள் மட்டுமே இணைய முடியும் என்ற நிலையில், கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களை ஒட்டிய ஊரகப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளிகளிலும், ஒரு கி.மீ., சுற்றளவில், மாணவர்களை சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.