சாய் லட்சுமிகாந்த் பாரதி Profile picture
மருத்துவர்| Arakkan | Belongs to the Dravidian Stock🖤❤️ zero tolerance towards sanghis and NTK zombies.
Apr 9 9 tweets 1 min read
Gold winner அழிந்த கதை-

உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது ஏன் என்று என் பலசரக்குக் கடை நண்பரிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். எல்லாம் குஜராத் சேட்டுங்க தான் காரணம் என்றார் அவர். கடந்த பத்து ஆண்டுகளில் அவர்கள் மொத்த வியாபாரத்தை கையில் எடுத்துவிட்டார்கள். அதன் பிறகு பதுக்கல் செய்து விற்பதுதான் அவர்கள் தொழில் என்றாகிவிட்டது. அதனால் அவர்கள் சொல்வது தான் விலை என்றார்.

நம்மூர் கோல்ட் வின்னர் போன்ற சமையல் எண்ணெய்கள் சந்தையில் இருப்பதிலேயே குறைந்த விலையில் இருந்தது.
Feb 11 8 tweets 1 min read
ஜவுளி தொழில் வீழ்ச்சிக்கு காரணமாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதில் ஒரு அதிமுக்கிய காரணம் 11% SLF tax என்கிற ஸ்டெபிள் லென்த் ஃபைபர் பஞ்சுக்கான இறக்குமதி வரி. இந்த வரியை மத்திய அரசு விதித்து 1 வருட எட்டு மாதம் ஆயிற்று. 1/8 Image இந்த வரியினால் ஃபை கவுண்ட் ஜவுளி ஆர்டர்கள் நம் நாட்டுக்கு வருவது முற்லும் நின்று போயிற்று ஆகவே இந்த வரியை நீக்குங்கள் என்று மத்திய அரசிடம் கரடியாய் கத்தி பாத்தாயிற்று. ஆனால் மத்திய அரசு எங்கள் குரலை கண்டுகொள்ளவேயில்லை.
Jul 11, 2023 19 tweets 2 min read
திமுக ஆட்சிக்கு வந்த 1967ல் இருந்து பெண்கள் முன்னேற்றத்தில் திமுகவின் பங்கு.
Thread 👇

*அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் சுயமரியாதை திருமண சட்டம்.

1967 வரை பரவலாக சுயமரியாதை திருமணங்கள் நடந்து வந்தாலும் அவை சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட பெண்கள் தங்களுக்கோ அத்திருமணத்தின் வழியாக பிறந்த தங்கள் குழந்தைகளுக்கோ கணவனிடம் இருந்து சட்டரீதியாக பெறக்கூடிய உரிமைகள் பறிக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.

பெண்களின் உரிமைகளை அச்சட்டம் பெற்று தந்ததோடு அவர்களின் சுயமரியாதையையும் காப்பாற்றியது.
Jan 31, 2023 13 tweets 5 min read
திமுக அரசு கொண்டு வந்த "ஸ்டாலின் பஸ்" என்று மக்களால் அழைக்கப்படும் இலவச பேருந்து பயணம் திட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வறிக்கை மாதில திட்டக்குழுவால் வெளியிடப்பட்டள்ளது. அதன் சாராமசங்களை பார்ப்போம். இரண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஒன்று சென்னை மாநகரத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கும் 3 வழித்தடங்களில் இந்த ஸ்டாலின் பஸ்ஸில் பயணிக்கும் பெண்களிடமும் (மஞ்சள் நிறம்),மூன்று வெவ்வேறு பொருளாதார நிலையில் உள்ள நாகை, மதுரை, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு (நீல நிறம்) மேற்கொள்ளப்பட்டுளது.
Jan 16, 2023 10 tweets 3 min read
RSSஇன் முன்னெடுப்பில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் நிடைவிடம் அமைக்கப்பட்டது.

இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியிலும் காவிக் கொடி பறக்க வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்ட இந்நினைவு சின்னத்தில் தற்போது வரை தேசியக்கொடி பறக்கவிடபடுவதில்லை. காவி கொடியே அங்கு பிரதானம். இன்று வரை RSSஇன் கட்டுப்பாட்டில் தான் அந்நினைவுச் சின்னம் இருக்கிறது.

இந்த சூழச்சியை முறியடிக்க 1975ம் ஆண்டு கலைஞர் அவர்களால் அப்பாறைக்கு அருகில் உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை அமைக்க முற்பட்டார்.
Jan 16, 2023 8 tweets 3 min read
தூசி படிந்து, கால ஓட்டத்தில் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட திருக்குறளை உலகிற்கு எடுத்துக்காட்டியது ஒரு வெள்ளையரான Lord Ellis.

அவரிடம் திருக்குறள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை கொடுத்தவர் Lord Harrington. தன்னிடம் திரு.கந்தசாமி (அயோத்திதாசரின் பாட்டனார்) கொடுத்த நூலை எல்லீஸிடம் வழங்கினார் Lord Ellis தான் முதலில் திருவள்ளுவரின் உருவத்தை (கற்பனை) நாணயமாக வடித்தார்.

அவரே திருக்குறளுக்கான ஆங்கில உரை எழுதி ஆங்கிலத்தில் மொழியாக்கமும் செய்தார்.
Feb 18, 2022 5 tweets 1 min read
என் கிளினிக்கிற்கு செக் அப்க்காக வந்த ஒரு போலீஸ் உயர் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு அப்படியே தமிழ் நாட்டு நிலவரம் அரசியல் பக்கம் திரும்பியது. காவிகளின் அராஜகம் குறித்து பேச்சு வந்த போது அவரிடம் கேட்டேன் "என்ன சார் ஊருக்கு நாலு பேர இல்லாத கட்சிக்காரனை எல்லாம் ஆடவிடுறீங்க" என்று.

மனுசன் புலம்ப ஆரம்பித்துவிட்டார். எங்க சார் கடந்ந பத்து வருடமா inch by inchஆ எல்லாத்துறைகளிலும் அவர்கள் ஆட்களை கொண்டுவந்துவிட்டார்கள்.
Nov 4, 2021 9 tweets 2 min read
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இன்றைய அறிக்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளேன். பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும்👇🏽 Upholding social justice and self respect of every single marginalised people is the mission of the Dravidian Movement.

My sister Ashwini was denied of her dignity not food (as it was portrayed in the media) few days back.
Nov 4, 2021 6 tweets 1 min read
Very powerful statement from our CM👇🏽

சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி!

சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு. அதனைத்தான், "நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்.

திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால் காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே!
Nov 1, 2021 7 tweets 1 min read
1956
வி.கே.கிருஷ்ணமேனன்
வி.பி.மேனன்
கே.பி.எஸ்.மேனன்
இலட்சுமி மேனன் ஆகியோர் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவோடு தானிருக்க வேண்டும் என்று பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைக்க, நேரு காமராஜரிடம் கருத்துக் கேட்க, தமிழ்நாட்டில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, நம்ம பெருந்தலைவர் காமராசரோ, குளமாவாது?
மேடாவது?
எல்லாம் இந்தியாவிலதானே இருக்குன்னேன்!
அவங்க எடுத்துக்கட்டும்னேன்!!
நீ வாயை மூடுன்னேன்!!!
என்று தாராளமய தேசியவாதம் புரிந்தார்.

1979

கேரளாவின் அச்சுத மேனன்
தமிழ்நாட்டின் ராமச்சந்திர மேனன்
ஒப்பந்தம்.
Oct 31, 2021 6 tweets 2 min read
1. Who ordered Meat shops to be closed
MGR in 1980 ( *same period when he brought in Creamy Layer, Same RSS agenda* )
as per As per the G.O.M.S No.122,R.D & L.A, Dated: 23.01.1980, 2. When were they closed
Three days
As per the G.O.M.S No.122,R.D & L.A, Dated: 23.01.1980, strict enforcement of no slaughter and sale of meat, beef, pork, chicken stall shops is observed on the followings three days which is ensured
Jul 20, 2021 5 tweets 3 min read
மாத வருமானம் மற்றும் விவசாய வருமானங்களை OBC non- creamy layer சான்றிதழ் வழங்க கணக்கில் எடுக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் ஏற்படும் நன்மைகள்- ஒன்றிய அரசின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் அதிக அளவில் இனி தமிழர்கள் இடம்பெற வாய்ப்பு.
May 4, 2021 7 tweets 2 min read
Regularisation of nurses timeline -

2015ல் இருந்து செவிலியர்கள் பணி நியமண ஆணை பெற்றவர்கள் எண்ணிக்கை 14000(ஜெயலலிதா ஆட்சி. விஜயபாஸ்கர் அமைச்சர்)

நியாயப்படி இவர்கள் 2 ஆண்டு முடிவடைந்தவுடன் பணி நிரந்தரம் செய்திருக்க வேண்டும்.
2017லேயே அதற்காக செவிலியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். scroll.in/article/859933…

2020 கொரொனா பெருந்தொற்றில் அதிக உழைப்பு செலுத்தியவர்கள் செவிலியர்களே.

பணி நியமன கோரிக்கையை முன்னிறுத்தி ஜனவரி 2021ஆம் ஆண்டு போராட்டம் மேற்கொண்டனர்.

m.timesofindia.com/city/madurai/t…
May 3, 2021 4 tweets 1 min read
Touring talkies மற்றும் இதர சினிமா சம்மந்தப்பட்ட youtube channelகளை பார்த்தால் தெரியும் கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாத்துறை கடந்த பத்தாண்டுகளில் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகியதுன்னு. கந்து வட்டி, தற்கொலை, தயாரிப்பு சிக்கல், அதிக வரி, etc etc என்று பல தொல்லைகள் சந்தித்திருக்கிறது அந்த துறை.

பத்தாண்டுகளுக்கு முன் வந்த படங்களின் எண்ணிக்கையும் தற்போது வெளிவரும் படங்களின் எணணிக்கையை ஒப்பிட்டு பார்த்தாலே உண்மை புரியும்.
Jan 2, 2021 6 tweets 2 min read
நல்ல வேளை அந்த அதிமுக பெண் திமுக கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக வந்தாங்க. இதுவே அதிமுக வில் அழையா விருந்தாளியா வந்த ஒரு பெண்ணுக்கு என்ன ஆச்சுனு ஒரு குட்டி கதை சொல்றேன் கேளுங்க... 1987 எம்ஜிஆர் இறந்து பிணமாக கிடக்கிறார் ராஜாஜி ஹாலில். அதுவரை அவரை incapable to be CM, அவரை தூக்கிட்டு என்ன முதலமைச்சர் ஆக்குங்கனு ராஜீவ் காந்திக்கு கடிதம் மேல் கடிதம் எழுதிய முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினரும், முன்னாள் கொ. ப. செவும் அந்த ஹாலுக்கு வந்தார்
Dec 27, 2020 7 tweets 1 min read
தமிழருவி மணியன், மதுவந்தி, லதா ரஜினிகாந்த் போன்றவர்களை தற்கொலைக்கு தூண்டிய வழக்கின் கீழ் கைது செய்ய சட்டத்தில் ஏதும் இடமுண்டா??

உங்கள் வீட்டில் வயது முதிர்ந்தவர் இருந்தால் அவரை சுரண்டி பிழைக்க நினைப்பீர்களா இல்லை ஓய்வெடுக்க சொல்வீர்களா?? அதுவும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்த ஒருவரை தங்கள் சுயலாபத்திற்காக படத்தில் நடிக்க வைப்பது, அது கூட பரவாயில்லை. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் மக்களை அனுதினமும் சந்திக்க வேண்டிய அரசியலில் ஈடுபட வைப்பீர்களா??
Dec 26, 2020 6 tweets 1 min read
நேற்றிலிருந்து உடன்பிறப்புகள் எல்லாரும் அக்கா Rekha Priyadharshini அவர்கள் 24 வயது இருக்கும் போதே மேயர் ஆனார் என்று பதிவுகளை பகிர்ந்திருந்தனர். அவர் ஒரு பட்டியலின சமூகம் என்று தனியாக குறிப்பிட வேண்டியதில்லை. Image அதில் பலர் குறிப்பிட மறந்த பெயர் அய்யா வீரபாண்டியார் உடையது. ஆம் அக்காவின் திறமைகளை இனம் கண்டு தலைவர் கலைஞரிடம் மேயர் பதவிக்கு பரிந்துரை செய்தவர் அவர்தான்.

இன்றும் அக்கா அய்யாவின் மாணவராக தான் தன்னை அடையாளப் படுத்திக்கொள்கிறார்.
Nov 6, 2020 4 tweets 1 min read
மநு தர்மத்தை எதிர்ப்பேன் என்பார்கள் ஆனால் மநு தர்மத்தை ஆதரிக்கும் கமல்ஹாசனை கண்டிக்க மறுப்பாளர்கள்.

அனு உலையை எதிர்ப்பார்கள் ஆனால் கூடங்குள அனு உலையை ஆதரிக்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களோடு உறவாடுவார்கள். ஏன் சில திமுக தலைவர்களிடம் கூட இவர்கள் குழைவார்கள். குறைந்தபட்சம் தங்களின் கொள்கையின்பால் நிற்க கூட முடியாமல் எல்லா பக்கமும் கம்பு சுற்றும் இவர்கள் திமுக வெறுப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் இணைவது ஒன்றும் தற்செயலானது அல்ல.
தமிழருவி மணியன் தொடங்கி பழ. கருப்பையா வரை இது நீள்கிறது. இன்னும் இது நீண்டு கொண்டே இருக்கும்.
Nov 4, 2020 6 tweets 1 min read
அர்னாப் கைது

- பிடி வாரன்ட் கொடுக்கப்பட்டது
- எந்த வழக்கில் அவர் கைது. செய்யப்படுகிறார் என்று தெளிவாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
-மருத்துவ உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. - காலை 6.45 மணிக்கு கதவை தட்டியிருக்கிறார்கள் போலீஸார்.. கதவை திறக்காமல் காவல்துறையினரின் பணிக்கு இடையூறு செய்ததோடு போலீஸார் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார் அர்னாப். அதன் பின்னே அவரை இழுத்து சென்றுள்ளது போலீஸ்.
Aug 26, 2020 5 tweets 2 min read
கவுன்டர் இன மக்களுக்கு திமுக கொண்டுவந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வைத்து தான் @annamalai_k PSGஇல் பொறியியல் படித்து பட்டதாரி ஆனார். விபி சிங் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக கொடுத்த அழுத்தத்தால் நிறைவேறிய மண்டல் குழு பரிந்துரை வைத்து தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் தான் IIMஇல் பட்டம் பெற்றார். IPS ஆனார். இத்தனையும் செய்தது திமுக.
Jul 29, 2020 7 tweets 2 min read
2035இல் எப்படி 50% இலக்கை அடைவார்கள்??

அதற்கு முதலில் GER என்றால் என்ன என்று பார்க்க வேண்டும்.

பள்ளி முடித்த எத்தனை பேர் கல்லூரிகளில் சேருகிறார்கள் என்பது தான் GER அல்லது Gross enrollment ratio. இப்போது கொண்டுவந்துள்ள NEP 2020ஆல் GERஐ எப்படி உயர்த்த போகிறார்கள் என்றால் 5,8 வது மாணவர்களுக்கு பொது தேர்வு அதில் இந்தி கட்டாய பாடம்.

அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்த வகுப்பிற்கு முன்னேற முடியாது.