அன்பு Profile picture
Dravidian. No one gives it to you. You have to take it !
Aug 9, 2022 21 tweets 4 min read
GPS - A Thread

நீங்கள் Uber,OLA,Swiggy போன்ற செயலிகள் பயன்படுத்துபவராய் இருந்தால்,உங்கள் ஓட்டுனர் வந்து கொண்டிருக்கும் இடத்தையோ,உணவு கொண்டு வரும் நபரின் இடத்தையோ துல்லியமாக செயலியில் பார்க்க முடிகிறதல்லவா?அதன் பிண்ணணியில் இருக்கும் GPSஐ பற்றி தெரிந்து கொள்ளலாம்.1/20 பூமியில், ஒரு பொருள் அல்லது நபரின் இடத்தை தெரிந்து கொள்ள GPS எனப்படும் Global Positioning System பயன்படுகிறது.அமெரிக்கப் பாதுகாப்புத் துறையால் navigationக்காக உருவாக்கப்பட்டு, 2000த்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.2/20
Aug 2, 2022 13 tweets 3 min read
Flaps in an Aircraft - A Thread.
விமானப் பயணத்தின் போது, இறக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் சன்னல் இருக்கையில் அமர்ந்து நீங்கள் பயணம் செய்திருந்தால், இறக்கையின் மீது இருக்கும் flap-களை பார்த்திருக்கலாம்.அதன்பின் இருக்கும் அறிவியலை இந்த இழையில் தெரிந்து கொள்ளலாம்.1/12 விமானம் ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பும் போதும், தரையிறங்கும் போதும் அந்த flap-கள் வேலை செய்யும்.இது மேலெழும்பும் முன் எடுக்கப்பட்ட ஒரு காட்சி.2/12
Jul 26, 2022 13 tweets 3 min read
QR Code - A Thread

Paytm, Google pay தொடங்கி, ஹோட்டல் மெனு வரை இன்று உபயோகத்தில் இருக்கும் QR code-ல் QR என்பது Quick Response-ஐ குறிக்கும். சுருக்கமாகச் சொன்னால்,இது தகவலை குறியாக்கம்(encode) மற்றும் குறிவிலக்கம்(decode) செய்யும் ஒரு முறை.1/12 QR Code ஒரு தகவலை கருப்பு வெள்ளைக் கட்டங்களாக மாற்றி சேமிக்கும்.QR code-ஐ புரிந்துகொள்ளும் ஒரு scanner இந்த கருப்பு வெள்ளைக் கட்டங்களை scan செய்யும் போது,அதில் மறைந்துள்ள தகவலை decode செய்ய முடியும்.அந்தத் தகவல்,ஒரு எண்ணாகவோ, ஈமெயிலாகவோ,ஒரு வலைதள முகவரியாகவோ இருக்கலாம்.2/12
Jul 25, 2022 14 tweets 3 min read
Rain Fade - A Thread.

நீங்கள் உங்கள் வீட்டில் Tata Sky, Airtel போன்ற DTH சேவைகளை பயன்படுத்தியிருந்தால், மழை நேரங்களில் தொலைக்காட்சி தடைப்பட்டு, இது போன்றதொரு திரையைக் கண்டிருக்கலாம். இந்த இழையில், இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.1/13 Image Dishஐ பயன்படுத்தும் தொலைக்காட்சி சேவைகள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வேலை செய்கிறன்றன. ஒரு base stationல் இருந்து சேனல்கள் செயற்கைக்கோளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து நம் வீட்டிலிருக்கும் dishகள் வழியாக, தொலைக்காட்சியில் stream செய்யப்படுகின்றன.2/13
Jul 24, 2022 12 tweets 3 min read
Port Side & Starboard Side - A Thread.

ஆங்கிலப் படங்களில், கப்பல் சார்ந்த காட்சிகள் வரும்போது “hard to starboard” என்ற வசனம் வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். Pirates of the Caribbeanல் வரும் இந்தக் காட்சியை ஒருமுறை பார்த்துவிடுங்கள். 1/11 ஜாக் ஸ்பாரோ டேவி ஜோன்ஸை கிண்டல் செய்யவும், ஆத்திரமடைந்த ஜோன்ஸ்,தன்னுடைய கப்பலில் இருக்கும் பீரங்கிகளை ஜாக் ஸ்பாரோவின் கப்பலை நோக்கி திருப்பச் சொல்கிறார்.ஜாக் ஸ்பாரோ பதட்டமாகி, “Hard to starboard” என்று சொல்லவும், கிப்ஸ் கப்பலின் ஸ்டியரிங்கை வேகமாக வலதுபுறம் திருப்புகிறார்.2/11
May 11, 2020 15 tweets 3 min read
1.திமுகவை ஊழல் கட்சி என்பார்கள்.அதனால் ஆதரிக்க மாட்டேன் என்பார்கள்.ஆனால் இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் பதவி இழந்த முதல் முதல்வர் ஜெயலலிதா என்பதை வசதியாக மறந்து விடுவார்கள். 2.பொய்க் குற்றச்சாட்டை உடைத்து நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று நிரூபித்து,முடிந்தால் கைது செய் என்று சவால் விட்ட ஆ.ராசாவை 2ஜி ஊழல்வாதி என்பார்கள்.ஒரு வழக்கை18 ஆண்டுகள் அலைக்கழித்து,