உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு இன்றைக்கு இராஜபாளையம் தோப்புப் பட்டி தெருவில் ஒரு இலவச சிறப்பு மருத்துவ முகாம், நெசவாளர் முன்னேற்ற கழகம் ஏற்பாடு செய்து இருந்தாங்க.
நூறு பேர் வந்து கலந்துகிட்டாங்க. இதுல ஒருவருக்கு மஞ்சள் காமாலை பி பாசிடிவ் வந்தது.
ஆனால் எதிர்பாராத விதமாக இரத்த சர்க்கரை அளவு சரியாக வந்தது ஒற்றைப் படையில் மட்டும் தான்.
வந்தவங்களுக்கு 90 சதவீதம் பேர் சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பு நோயாளிகளாக இருந்தாங்க. வந்தவங்களை பார்த்தா யாருக்கும் சர்க்கரை வருவதற்கான அதீத எடை மாதிரியான risk factors எல்லாம் இல்லை.
Nov 12, 2021 • 11 tweets • 2 min read
Fatty liver
சில கேள்விகள்
1) Fatty liver என்றால் என்ன?
கல்லீரலில் அளவுக்கு மிஞ்சிய கொழுப்பு சேர்தல் Fatty liver எனப்படும்
2) இதனால் வரும் அறிகுறிகள் என்ன?
90% கல்லீரல் பாதிப்பு வரும் வரை அறிகுறிகள் எதுவும் இருக்காது. பரிசோதனைகள் மூலமாக மட்டுமே கண்டறிய முடியும்.
Jun 8, 2021 • 22 tweets • 3 min read
இவர் வந்து சேர்ந்த இரண்டாம் நாள் நல்லா இருந்தார். நாலாவது நாள் மூச்சுத் திணறல் வந்தது ஆக்சிஜன் வச்சு சரி ஆச்சு. அதுக்கு பிறகு இரண்டு நாள் கழித்து பயங்கர irritability restless ஆக இருந்தாங்க. Non cooperation for treatment. எப்படியோ சமாதானம் செய்து இன்னும் இரண்டு நாள் இருக்க வச்சோம
அப்புறம் நான் நல்லா இருக்கேன் வீட்டுக்கு போறேன் னு சண்டை போட்டு போயிட்டாங்க. ஆக்சிஜன் லெவல் எல்லாம் நார்மல்.. அதனால் சரின்னு வீட்டுக்கு அனுப்பி ஆச்சு. இன்னைக்கு ஒரு வாரம் கழித்து ரிவியூ வந்தாங்க.
வந்த போது தான் கண்ணு சிவந்து இருக்கு தண்ணீர் வருது னு சொன்னாங்க.
May 14, 2021 • 11 tweets • 2 min read
இன்னைக்கு வந்த இந்த updated கோவிட் ப்ரோட்கால் கொஞ்சம் விஷேசமானது. எங்க ஊர் மாதிரி இருக்கும் இடத்தில் என்ன செய்வது என்று தெளிவாக கொடுத்து இருக்காங்க. அதாவது வீட்டில் இருக்கிறவங்க என்ன செய்யனும்? அரசு ஆரம்ப சுகாதார நிலையம் / கொரானா கேர் சென்டர்ல இருக்கிறவங்க என்ன செய்யனும்?
டெடிகேட் கோவிட் ஹாஸ்பிடல் வரைக்கும் guidelines இருக்குது
இந்த கைடுலைன்ஸ் சரியா நடைமுறை செய்தாலே கொரானா தீவிர தன்மை அடையாமல் பாதுகாக்கலாம். நல்லா பார்த்தீங்கன்னா இதுல inj Ramedesvir இல்லை. இது மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் ல உள்ள பேஷண்ட் க்கு மூன்றாவது நிலையில் உள்ளவர்களுக்கு தான்
May 14, 2021 • 4 tweets • 1 min read
" ஒவ்வொரு புத்தகத்துக்குள்ளேயும் ஒரு வெளிச்சம் இருக்கிறது.. அது வாசிப்பவனின் கண்களுக்கு மட்டுமே புலப்படுகிறது." விழியன்
கானாபிரபா பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு புரியும். அவர் இன்னும் வெள்ளவத்தையில் தான் வசித்து கொண்டு இருக்கிறார் என்பது.
அவரிடம் இருந்து வியந்த பண்புகளில் சில நேரந் தவறாமை. சிட்னியில் காலை வணக்கம், அதன் பிறகு உடற்பயிற்சி, காலை உணவு போட்டோ, நடுவில் இசையைத் தேடி முந்தின நாள் பதிவுகள் பற்றிய மீம்ஸ், இளையராஜா சோலோ குவிஸ், மாலை ஐந்து மணி லைவ், இது போக நடுவே வேலை, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது
இவங்களுக்கு பத்து நாள் முன்பு பிரச்சனை ஆரம்பம் ஆகி இருக்குது. இப்ப இரண்டாவது வாரம் தீவிரமா தான் இருக்கனும்.
ஆக்சிஜன் லெவல் 69 தான் இருக்காம் மேடம்.
இந்த லெவல் இருக்கும் ஆக்சிஜன் போது ஆக்சிஜன் கொடுத்து 99 கொண்டு வரணும்னா ஒரு மணி நேரத்துக்கு ஒரு சிலிண்டர் மாத்துற மாதிரி இருக்கும். அந்த அளவுக்கு இப்போதைக்கு ஆக்சிஜன் இருக்கிறது மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான். .
May 8, 2021 • 11 tweets • 2 min read
Acute Corona infections மூன்று நிலைகளில் பாதிப்பு உருவாக்குகிறது. 1) viral response phase- 1-7 days
2)pulmonary phase - early /late-7-14 days
3)hyper inflammatory phase 14-21 days
1)viral response phase
நமது உடலில் வைரஸ் புகுந்த நாளில் இருந்து முதல் முறையாக அறிகுறி உணரும் நாள் day 1 என்று கணக்கில் கொள்ளப்படும்
முதல் நான்கு நாட்கள் உடம்பு வலி, தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்றவை ஏற்படும்.
Apr 17, 2021 • 24 tweets • 3 min read
தடுப்பூசி சில கேள்விகள்
Sabari
1)எனக்கு தடுப்பூசி பற்றி தெரியணும்.
Pressure, sugar இருக்கிறவர்கள் vaccanie எடுக்கிறதால் எதுவும் side effects வருமா
இதுவரை சுகர், பிரசர் இருக்கிறவங்களுக்கு என்று தனியாக side effects வந்தது இல்லை. அவங்க எல்லாம் போட்டுக் கொள்ளலாம்
Jayadevi Baskaran
2)கொரோனா ஊசியால் பயன் இல்லை என்று பிராச்சாரம் செய்பவர்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?
இந்த மாதிரி பிரச்சாரங்கள் உண்மையில் அறிவியலுக்கு எதிரானது. தடுப்பூசி ஒன்று மட்டும் இந்த நோயிலிருந்து மனிதர்களை காப்பதற்கு ஒரே வழி. நெகடிவ் எண்ணங்களை தவிருங்கள்
Apr 16, 2021 • 23 tweets • 4 min read
உண்மையில் அன்னைக்கு வன்ஸ் கேட்ட பிறகு தான் படிச்சேன்
அப்புறம் தான் புரிஞ்சது நாம உலகத்திலேயே அபாயகரமான வைரஸ் கிருமி இந்தியால பரவுவது.
Double mutant virus.
வேற எங்கேயும் இந்த mutation இல்லை. இப்ப தான் இங்கிலாந்துல இந்த இந்தியா வைரஸ் கண்டு பிடித்து சொல்லி இருக்காங்க.
இது dangerous virus என்பதற்கான எல்லா தகுதியும் பெற்று இருக்கிறது என்று சொல்லி இருக்காங்க
ஒரு நாளில் இரண்டு லட்சம் கோவிட் நோயாளிகள் இந்தியாவில் உருவாவதற்கு இந்த புதிய கொரானா வைரஸ் B 1617 தான் காரணம் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்காங்க.
Apr 15, 2020 • 23 tweets • 3 min read
Herd immunity
கொஞ்சம் அடிப்படை அறிவியல் தெரிந்து கொள்வோம்.
நமது இரத்தத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கிறது. 55%பிளாஸ்மா 45%உள்ள இரத்த அணுக்கள்
இந்த இரத்த அணுக்கள் மூன்று வகையானது
1)இரத்த சிவப்பு அணுக்கள் - இதில் உள்ள ஹீமோ குளோபின் ஆக்சிஜன் கொண்டு செல்லக் கூடியது
2)இரத்த வெள்ளை அணுக்கள்
3)இரத்தத் தட்டுகள் - (platelets) இது தான் டெங்கு போது குறைந்த அணுக்கள்.
Apr 12, 2020 • 27 tweets • 3 min read
Convalescent plasma therapy
சுருக்கமா பிளாஸ்மா தெரபி.
அதாவது தடுப்பூசி மருந்து கண்டு பிடிக்க லேட் ஆகுது என்ற காரணத்தால் உலகம் முழுவதும் ஏதாவது ஒரு முறை ஆராய்ச்சி பண்ணப் பட்டு இருக்கிறது. அதுல ஒரு ஆராய்ச்சி தான் இந்த பிளாஸ்மா தெரபி.
ஏற்கனவே ஹைட்ராக்சி குளோரோகுயின் பர்னிச்சர உடைச்ச ஊடகங்கள் இப்ப இந்த பிளாஸ்மா தெரபி கையில எடுக்க காரணம், கேரளா இந்த ஆராய்ச்சிக்கு அனுமதி கேட்டு இருக்கிறது என்ற தகவல் மட்டுமே தான். அதாவது குடிக்க தண்ணீர் கேட்டா, வெள்ளிச் சொம்பு கொடுத்தாத் தான் கல்யாணம் என்ற ரேஞ்சுக்கு போயாச்சு
Apr 9, 2020 • 10 tweets • 2 min read
Corona Antibody
நமது உடம்பில் புதிதாக நுழையும் எந்த ஒரு கிருமியும் Antigen என்று சொல்லப்படும்
இந்த கிருமியை அழிப்பதற்காக இரத்த வெள்ளை அணுக்கள் உருவாக்கும் பொருள் எதிர்ப்பு சக்தி Antibody எனப்படும்.
இந்த Antibody இரண்டு வகைப்படும்.
முதலாவது Ig M - இது கிருமி உள் நுழைந்த உடனடியாக உருவாவது. கிருமிகள் இருக்கும் வரை இது போராடும். எனவே இது இருந்தால் கிருமிகள் Active ஆக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளப்படும்.