அரசுப் பள்ளி மாணவர்கள் பாவம், MBBS சீட் கிடைக்கவில்லை என்ற பரப்புரை நுணுக்கமான திராவிட எதிர்ப்புப் பிரச்சாரம். இதற்கான தரவுகளை ஏன் எல்லோரும் 2006ல் இருந்து தொடங்குகிறார்கள்? அப்போது தான் கலைஞர் நுழைவுத் தேர்வை ஒழித்தார் என்பதாலா?
அதற்கு முன் இருந்த TNPCEE மூலம் யார் MBBS பெற்றார்கள்? 2006 - 2020 காலக்கட்டத்தில் GER எந்த அளவு உயர்ந்துள்ளது? 49% GERல் எத்தனைப் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள்? MBBS படிப்பவர்களில் எத்தனைப் பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள்? இதை எல்லாம் கணக்கில் எடுத்தால்,
அரசுப் பள்ளிகளின் முழுமையான வெற்றி தெரியும். எத்தனையோ பேர் அரசுப் பள்ளியில் படித்து IT வேலைகளில் சேர்ந்து இலட்சக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அதை எல்லாம் மறைத்து விட்டு திராவிட ஆட்சியில் ஏழைகள் பாவம், அரசுப் பள்ளி மாணவர் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்ற ஓலம் ஏன்?