டீ Profile picture
Aug 4, 2023 9 tweets 1 min read
சென்ற மாதம் வட மாநிலங்களில் இருந்து வந்த பேராசிரியர்களுடன் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு. சில கல்லூரிகளுக்கு மதிப்பீட்டுக் குழுவுடன் செல்ல வேண்டியிருந்தது. அங்கே ஆவணங்களை பரிசோதிக்கும் போது, எல்லோரும் அடையும் அதிர்ச்சி நமது தமிழ்நாட்டின் ரிசர்வேஷன் பாலிசி. அவர்கள் இன்னும் ஓபிசி 27 சதவிகிதம், பட்டியலின வகுப்பினர் சேர்த்து 19 சதவிகிதம் என்ற நிலைப்பாட்டிலேயே இங்கே 69 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதன் பிறகும் மீதமுள்ள 31% பொது ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட,மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இருப்பதையும்
Jun 9, 2023 10 tweets 1 min read
National Institutional Ranking Framework (NIRF) தற்போது பேசு பொருளாக உள்ளது. ஒன்றிய அரசின் இந்த தரவரிசைப்படி தமிழ்நாட்டில் பல கல்லூரிகள் நல்ல இடத்தை பிடித்துள்ளன. இதன் பேராமீட்டர்கள் பற்றி கேள்விப்படாதவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம். மொத்தம் ஐந்து பாரா மீட்டர்கள். Teaching learning and Resources (30%)
Research and professional practice (30%)
Graduation outcome (20)
Outreach and inclusivity (10% )
Peer perception (10%)

இந்த தரவரிசை பட்டியலை வெளியிடுவதற்கு NIRF கல்லூரிகளுக்கு வராது. அவர்கள் வெப் போர்டலில் கல்லூரிகள் அளிக்கும் விவரங்களை
Jun 6, 2023 8 tweets 2 min read
இந்தியாவில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட மடங்கள் சிருங்கேரி, பூரி, துவாரகா, வடக்கே பத்ரி மடம். இந்த மடங்களில் இருக்கும் சங்கராச்சாரியார்கள் தான் ஒரிஜினல் சங்கராச்சாரியார்கள் என்று வடக்கில் உள்ளோர் நம்புகிறார்கள். இப்போதைய காஞ்சிபுரம் சங்கர மடம் என்பது கும்பகோணம் சங்கர மடத்தின் கிளை என்றுதான் சொல்லப்படுகிறது. கும்பகோணம் சங்கரமடம் ஆனது சிருங்கேரி சாரதா சங்கர மடத்தின் கிளை. எனவே காஞ்சி சங்கர மடத்திற்கு தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு சார்ந்த மக்களைத் தவிர பெரிய ஆதரவு இருக்காது. சந்திரசேகர் சுவாமிகள் இருக்கும் வரை காஞ்சி சங்கர மடத்திற்கு என ஒரு மிகப்பெரும் மதிப்பு
Jun 4, 2023 4 tweets 1 min read
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடிவாரத்தில் இருக்கும் வத்தலகுண்டு ஊருக்கு நீண்ட இலக்கிய பரிச்சயம் உண்டு. தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் வந்த சில ஆண்டுகளில் வெளியான கமலாம்பாள் சரித்திரம் என்னும் நாவலை எழுதிய பி ஆர் ராஜம் ஐயர் இந்த ஊரைச் சார்ந்தவர் தான். Image வாடிவாசல் நாவல் எழுதிய சி சு செல்லப்பா வத்தலகுண்டை சேர்ந்தவர் தான். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மிக ஆக்டிவாக இருந்த ஊர்களில் வத்தலகுண்டும் ஒன்று. லியோனி அவர்களை முதன்முதலாக பட்டிமன்ற மேடையில் ஏற்றி அழகு பார்த்தது வத்தலகுண்டு தான். தொட்டுத் தொடரும் இலக்கிய பாரம்பரியமாக
Jun 2, 2023 10 tweets 2 min read
தமிழ்நாட்டில் மிகப் பழமையான ஆதீனம் திருவாடுதுறை ஆதீனம். சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற மற்றும் உசா கண்டடைந்த எல்லா நூல்களின் மூலப் பிரதியும் திருவாடுதுறை ஆதீனத்தில் தான் இருக்கிறது. காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில்‌ இன்று வரை காலை பூஜை திருவாடுதுறை ஆதீனத்தின் உபயம் தான். திருவாடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள், பள்ளிகள் கல்லூரிகள் கட்டளைதாரர்களாக உள்ள கோவில்கள் வணிக வளாகங்கள் வீடுகள் கடைகள் இவை எல்லாவற்றிலும் சென்று கணக்குப் பார்த்துவிட்டு ஒருமுறை வந்தால் அரை ஆண்டு கழிந்து விடும். அவ்வளவு சொத்துக்கள் உள்ளன.
May 21, 2023 10 tweets 2 min read
மே -21 1991 தமிழ்நாட்டு மக்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள். அன்றுதான் தமிழ்நாட்டிற்கு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களை விடுதலைப்புலிகள் இயக்கம் தனு என்கின்ற மனித வெடிகுண்டை பயன்படுத்தி படுகொலை செய்தது. ராஜீவ் காந்தி அவர்களுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 அப்பாவிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள். அதில் நிறைய போலீஸ் அதிகாரிகளும் அடங்குவார்கள். அப்பொழுது இப்போது போல சமூக வலைத்தளங்கள் இல்லாத காலம். தொலைக்காட்சியும் ரேடியோ மட்டுமே வேகமான செய்தி தொடர்புக்கு ஆதாரம். அவை எல்லாவற்றிலும் இருந்த பார்ப்பனர்களாலும் நவ
May 20, 2023 4 tweets 1 min read
1997ல் ராமன் அப்துல்லா பட பாடல்கள் வந்தபோது உன் மதமா என் மதமா பாடல் மட்டும் விரும்பி கேட்டேன். அந்தப் பாடலால்தான் பெப்சி பிரச்சனையே வந்தது. ஆனால் மற்ற பாடல்கள் அவ்வளவாக இருக்கவில்லை. அந்த வருடம் ரகுமான் தேவாவின் வருடம். இருவர் மின்சார கனவு என ரகுமான் வருட ஆரம்பத்திலேயே சிக்ஸர்கள் அடிக்க தேவாவும் பாரதி கண்ணம்மா, நேருக்கு நேர் என, ஹிட்டான பாடல்கள் கொடுக்க யுவன் சங்கர் ராஜா அரவிந்தன் மூலமும் ரஞ்சித் பரோட் விஐபி மூலமும் கவனம் இருக்க ராமன் அப்துல்லா படமும் சுமாராகவே இருக்க அந்தப் படப் பாடல்களை அப்போது அதிகம் கேட்கவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து இன்னமும்
May 18, 2023 4 tweets 1 min read
கூட்டுக் குடும்பங்கள் இருந்தவரை வயதானவர்களுக்கு பெரிய பிரச்சனைகள் இல்லை. ஆனால் கூட்டு குடும்ப அமைப்பு என்பது பெண்களிடம் கடுமையான உழைப்பு சுரண்டலை நிகழ்த்தியது. ஏமாந்து போகும் ஆண்களின் தலையில் மிளகாய் அரைத்தது. அந்த சிஸ்டம் இனிமேல் சரி வராது. தற்போதைய சூழலுக்கு நியூக்ளியஸ் ஃபேமிலிகள் தான் எல்லோருக்கும் சம உரிமை கொடுத்து மன அமைதியாக வாழ வழி வகுக்கிறது. 60 வயதை கடந்தவர்களுக்கு முன்னேறிய நாடுகளில் உள்ளது போல சோசியல் செக்யூரிட்டி சிஸ்டம் இங்கேயும் தேவைப்படுகிறது. முதியோர் இல்லங்கள் நார்மலைஸ் செய்யப்பட வேண்டும். நிச்சயமாக பத்து வருடங்களில்
Mar 29, 2023 7 tweets 1 min read
ஊர் பக்கம் சொல்வார்கள். அக்ரஹார பசங்க என்ன படிக்கிறாங்கன்னு பாரு. அத அப்படியே ஃபாலோ பண்ணு என்று. நமக்கு முன்னே அவர்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்புகள், உருவாக்கிக் கொண்ட நெட்வொர்க், பகிர்ந்து கொள்ளப்படும் ஒட்டுமொத்த அறிவு அவர்களை பல படி முன்னேற்றத்திலேயே வைத்திருக்கும். அவர்கள் தான் முதலில் ஷார்ட் ஹேண்ட் டைப் ரைட்டிங் இந்தி என்று ஒரு பேக்கேஜ் பிடித்தார்கள். டெல்லி செக்ரட்டரியத்திலும் மும்பை பெரும் நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளில் அமர்ந்தார்கள். அடுத்த செட் பிகாம் பிகாம் என்றது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இன்று பெரும்பாலும் அவர்கள் தான்.
Jan 9, 2023 7 tweets 1 min read
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளைத் திறந்து செயல்பட ஒன்றிய அரசு வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி உலக தர வரிசையில் 500 இடங்களுக்குள் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்த நாட்டு தூதரகங்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரான படிப்புகளை நடத்தக்கூடாது. நேரடி வகுப்புகள் தான் நடத்த வேண்டும். வெளிநாட்டு பேராசிரியர்களையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் இந்திய பேராசிரியர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அதுபோல இந்திய மாணவர்கள் தவிர வெளிநாட்டு மாணவர்களும் இங்கு வந்து கல்வி பயிலலாம்.
Dec 17, 2022 7 tweets 1 min read
நாகர்கோவில் மாடல் அப்படிங்கறது வந்து ஒரு வாழ்வியல் வழி. பெரிய பேக்டரிஸ் எதுவும் நாகர்கோவில் பக்கம் இல்லை தொழில் அப்படின்னு பார்த்தா மீன்பிடித் தொழில் மட்டும்தான் ஆனா இந்த நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகள் அடைந்திருக்கிற வளர்ச்சி அருமையா இருக்கு ஒரு காரணம் உடனே தெரிகிறது அங்கு இருக்கிற கல்வி வளர்ச்சி, 1960 களிலேயே 10 கல்லூரிகள் அங்க இருந்திருக்கு 2006 டைமில் நாகர்கோவில் பகுதியில் 40 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இருந்தது. ஆரம்பத்திலிருந்து அங்கு இரு பாலரையும் படிக்க வைத்து வந்திருக்கிறார்கள்
Nov 2, 2022 5 tweets 1 min read
EWS கேட்டகிரியில் வரும் பிராமணர்கள் உள்ளிட்ட சில ஜாதியினர் தற்போது திமுகவிற்கு எதிராக வெறி கொண்டு களமாடத்துவங்கியுள்ளார்கள். காரணம் என்ன வெனில் திமுக இல்லாவிட்டால் ஒன்றிய அரசு பணிகளைப் போல தமிழ் நாட்டிலும் 10% இட ஒதுக்கீட்டைப் பெற்றுவிடலாம் என. தமிழ்நாட்டில் அவர்களின் பங்கு 3% தான். ஆனால் இட ஒதுக்கீடு 10%/கிடைக்கும். விண்ணப்பித்த எல்லோருக்கும் அவர்களுக்கு அரசுப்பணி கிடைக்கும். மற்ற BC/MBC/ SC/ST வெகுவாக பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் இவர்கள் open competition 31% ல் வலுவாக போட்டியிட்டு வென்று வருகிறார்கள். எங்கே இவர்கள் போகும் வேகத்தால் நம்மை
Oct 12, 2022 13 tweets 2 min read
டாக்டர் புருனோ வழக்கு பற்றி தெரியாத மக்களுக்காக.

புருனோ அவர்களது மனைவி மருத்துவர் அமலி அவர்கள் திருமணத்திற்கு முன் இருந்தே மன அழுத்தப் பிரச்சினை கொண்டவர். திருமணத்திற்குப் பின் அதற்குரிய சிகிச்சையும் பெற்றுக் கொண்டவர். தன் மருத்துவ மேற்படிப்பையும் சைக்ரியாட்ரி துறையிலேயே தேர்ந்தெடுத்தவர். இதற்கிடையே அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மன நல சிகிச்சைகளும் பெற்று வந்தார். மருத்துவர் ஷாலினி அவர்களிடமும் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இரண்டாம் குழந்தையை கருவுற்றிருந்த போது மன அழுத்தம் தாங்காமல் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Oct 7, 2022 4 tweets 1 min read
சுகாதார விழிப்புணர்வு, பெண் உரிமை கொடுத்தலில் தமிழ்நாடு எல்லா மாநிலங்களையும் விட முண்ணனியில் உள்ளது. கிட்டத்தட்ட 90% பெண்கள் (15-24 வயது) சானிடரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் 30% பெண்களும் (இதே வயதுக்குழுவில்), பீகாரில் 33%, மத்திய பிரதேசத்தில் 35%, குஜராத்தில் 49% பேர் தான் சானிடரி நாப்கின் உபயோகிக்கிறார்கள். ஏன் வளர்ந்த மாநிலங்களான கர்நாடகாவில் 55%, கேரளாவில் 60%, ஆந்திராவில் 67% 15-24 வயது பெண்கள் தான் உபயோகிக்கிறார்கள். இலவச நாப்கின் கொடுத்ததற்கு நாக்கின் மேல் பல்லைப் போட்டு பேசியவர்களே, மற்ற மாநிலங்களில் எல்லாம் இந்த
Sep 12, 2022 5 tweets 1 min read
உடன் பணியாற்றும் நண்பருக்கு நேற்று ஹார்ட் அட்டாக். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே 45-50 வயது bandல் இருப்பவர்களில் (உறவு/நட்பு) ஏழெட்டு பேருக்கு வந்து விட்டது. சிகிச்சைக்குப் பின் அவர்களிடம் நலம் விசாரித்து இயல்பாக்ச் பேசும் போது அவர்கள் சொன்னது இரண்டு காரணங்கள் தான். முதல் காரணம், இருக்கும் வேலையைக் காப்பாற்ற ஓடுவது, ஸ்ட்ரெஸ் ஆவது. இரண்டாவது வீட்டுப் பிரச்சினை. 50 வயது என்பது ஒரு ஆணின் பங்கு குடும்பத்திற்கு மிகத்தேவையான ஒன்று. பிள்ளைகளின் உயர் கல்விக்கு அலைய, வேலை கிடைக்கும் வரை சப்போர்ட் செய்ய, திருமணத்திற்கு என. அத்தகைய resource ஆக
Sep 11, 2022 5 tweets 1 min read
சின்னதம்பி படத்திற்குப் பின்
பி வாசு - பிரபு - குஷ்பூ காம்போவில் வந்த படம் கிழக்கு கரை. அதில் விஜயகுமார் கடத்தல் கும்பலில் சேர காரணமாக முதலில் நல்ல வேலையில் இருந்து பிள்ளைகளை சொகுசாக வளர்த்து வேலை போன உடன், அதை வீட்டில் சொல்ல முடியாமல் கடன் வாங்கி, பின் அதை அடைக்க வேலை கிடைக்காமல் கடத்தல் கும்பலில் சேர்வார். இப்படியெல்லாமா இருக்கும் என விமர்சனத்தில் எழுதினார்கள். ஆனால் இப்போது கேள்விப்படும் சம்பவங்கள் இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடும்படி இருக்கின்றன. ஒரு மத்திய அரசு ஊழியர் தன் மகள் திருமணத்தை கடன் வாங்கி ஆடம்பரமாக நடத்தி விட்டு வட்டி கட்ட
Sep 11, 2022 5 tweets 1 min read
நாலஞ்சு தலைமுறைகளாக ஆண்கள் சுகவாசியாக வாழ்ந்து விட்டார்கள். பெண்களுக்கு பொருளாதார விடுதலை இன்மை, பிறந்த வீட்டிற்கும் செல்ல முடியாத சூழலால் அத்தனையும் சகித்துக் கொண்டு இருந்தார்கள் பெண்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. அவர்களுக்கு கிடைத்த கல்வி, வேலை, வீட்டிற்கு திரும்பிச் சென்றாலும் கிடைக்கும் ரத்தின கம்பள வரவேற்பு, பெண்களுக்கான அடிமைத்தளையை உடைத்தெறிந்து விட்டது. ஒரு சராசரி ஆண் இப்போது பெண் கேட்கும் சம உரிமை, வேலைப் பங்கீடு, குழந்தை வளர்ப்பில் ஒத்தாசை இவற்றை செய்ய திணறுகிறான். அவனுக்கு இது புதிதாய் இருக்கிறது. எங்க அப்பா, தாத்தாலாம்
Sep 7, 2022 9 tweets 2 min read
பாபா படத்தில் இப்ப ராமசாமின்னு ஒரு வில்லன் கேரக்டர் இருக்கும். எதுவுமே இப்ப என்னும் படி. அதுவே பாஸிட்டிவ்வாக இருந்தால் அது தான் Most Urgent MKS . பொதுவாக அரசுத்திட்டங்கள் என்றால் ஒரு டெட்லைன் சொல்லி அனுப்புவார்கள். அந்த டெட்லைனுக்குப் பின் வந்ததை சரி பார்த்து யாரெல்லாம் அனுப்பவில்லையோ அவர்களுக்கு ரிமைண்டர் அனுப்புவார்கள். பின்னர் அது சரிபார்க்கப்படும். பின்னர் தவறு இருந்தால் திருப்பி கேட்பார்கள். இது தான் அரசாங்க நடைமுறை. ஆனால் இப்பவே ஸ்டாலின் ஆட்சியில் எந்த மெயில் வந்தாலும் Most Urgent என தான் வருகிறது. மாலை அனுப்புகிறார்கள். அடுத்த நாள்
Sep 5, 2022 4 tweets 1 min read
இதைவிட சிம்பிளான இஸ்லாமிய திருமணம் திருமங்கலத்தில் நடந்தது. மாப்பிள்ளை அதி தீவிர மார்க்கப்பற்று உள்ளவர். பெண் வீட்டார்க்கு மகர் கொடுத்து திருமணம் செய்தார். பெண் வீட்டார் இரண்டு ஷேர் ஆட்டோவில் வந்தனர். மாப்பிள்ளை வீட்டார் இரண்டு ஷேர் ஆட்டோ. மசூதியில் கையெழுத்திட்டு மணம் முடிந்ததும் வந்தவர்களுக்கு கேன் டீ. அவ்வளவு தான். ஆயிரம் ரூபாய்க்குள் முடிந்தது. (10 ஆண்டு முன்பு). தினமும் காலை அவர் ஒருவராகவே சிக்கன் பிரியாணி செய்வார். உடன் கத்தரி தொக்கு, தயிர் வெங்காயம் மட்டும். 100 பாக்கெட்டுகள் போட்டு ஒரு தள்ளுவண்டியில் கொண்டு வருவார். 12-1 எல்லாம்
Aug 12, 2022 5 tweets 1 min read
80 களில் இருந்து ஊடகங்கள், சினிமா, கதைப் புத்தகங்களை கவனித்து வருபவர்களுக்கு ஒன்று நன்றாக புலப்படும். எல்லோரையும் சென்றடையும் Main streamகளில் காமராஜர், எம்ஜியார் என்ற இரண்டு பெயர்கள் மட்டும் தான் இருக்கும். அண்ணா, கலைஞர் இருவரின் பெயர்களும் பரம ஏழையின் கல்யாணத்தில் போடப்படும் பொங்கலில் இருக்கும் முந்தரியைப் போல அரிதாகவே தட்டுப்படும். எம்ஜியார் என்பவர் மீடியா, திரை உலகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த உயர் ஜாதியினரின் status quo விற்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொண்டவர். சத்துணவு போடுவார், ரேசனில் அரிசி விலை ஏறாமல் பார்த்துக் கொள்வார். ஆனால்
Aug 12, 2022 4 tweets 1 min read
EWS அப்பவே கொண்டு வரணும்னு நினைச்சார் எம்ஜியார். அவர் ஆலோசகர்கள் அப்படி. கலைஞர் அதற்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி அதைத் தடுத்தார். இட ஒதுக்கீட்டின் அடிப்படை என்ன? என்பது பற்றியும் 2000 அண்டுகளாக கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்ததற்கும், ஒருவருக்கு எல்லா வாய்ப்புகள் இருந்தும் வசதி குறைவுக்கான காரணம் குறித்தும், ஒரு வருமான சான்றிதழை உயர்ஜாதியினர் எவ்வளவு எளிதாகப் பெற்று இந்த இட ஒதுக்கீட்டை சீர் குலைத்து விடலாம் என்பது பற்றியும் முரசொலியில் தினமும் பக்கம் பக்கமாக கட்டுரைகள் வரும். அது மற்ற நாளிதழ்களிலும் எதிரொலிக்கும். சட்டக்கல்லூரி மாணவர்