Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி Profile picture
Apr 15, 2022 16 tweets 4 min read
புறக்கணிக்கப்பட்ட தொல்தமிழ்ப்பழங்குடி மக்களின் இன்னல்களை, கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதல்வர், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவர அவர்கள் சார்பில் இத்தகவல்களை முன்வைக்கிறோம். (1/17) அண்ணலின் பிறந்தநாளையொட்டி இவர்களுக்கான தீர்வுகளை தரவேண்டுமென கோரிக்கையை முன்வைக்கிறோம்.

அண்ணலின் பிறந்த நாளில் பொள்ளாச்சி ஆனைமலை பகுதி பகுதிகளில் சுரண்டப்படும் பழங்குடி மக்களின் கிராமங்களுக்கு மக்கள் விடுதலை முன்னனி இயக்கத்தின் தலைவர் தோழர் மாரிமுத்து, சிவன்குட்டி, (2/17)
Mar 18, 2022 8 tweets 2 min read
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் அடிப்படையே அதன் ராணுவமும், சிங்கள இனவெறியும். தமிழருக்கு எதிராக தயாரிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிங்கள ராணுவத்தினால் சிதைக்கப்பட்ட தமிழ்நிலம், தமிழரின் பொருளாதாரத்தை சிதைந்தது. தமிழீழத்தின் மீது கிட்டதட்ட 25 ஆண்டுகளாக சிங்களம் பொருளாதார தடை 1/8 விதித்து தமிழர் வாழ்வை அழிக்க முனைந்தது. கடல் சூழ்ந்த அந்த நிலத்தின் பிறபகுதியை சிங்களப்படை சூழ்ந்து வேட்டையாட முயன்ற போது போராளிகளே இப்பொருளாதார நெருக்கடியை வென்று ஈழத்தினை முன்னேற்றினார்கள். சிமெண்ட், பெட்ரோல்,டீசல், மருந்துகள், உணவு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்தும் 2/8
Mar 17, 2022 8 tweets 2 min read
கடந்த வாரம் ஒரு நெருங்கிய இளம் தோழனை இழந்தேன். அவனது உற்சாகம் பொங்கும் முகம் தூக்கத்தை தொலைக்கச்செய்கிறது. என் நண்பர் என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் தனது நண்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்திகேட்டு விரைந்தவன் விபத்தில் நொடியில் மறைந்துபோனான். தன் நெருங்கிய 1/8 நண்பன் மீதான நேசத்தில் அதிகாலையில் சென்றவன், திரும்பி வரவில்லை. நண்பரின் மகன் என்பதைவிட சமூகம் பற்றி அக்கரைகொண்ட ஒரு இளம் தோழனாகவே அவனுடனான என் தோழமை இருந்திருக்கிறது. சந்திக்கும் போதெல்லாம் தான் வாசித்த நூல்கள், கட்டுரைகள் குறித்து பேசுவான். எழுத முயலும் கட்டுரை 2/8
Mar 11, 2022 11 tweets 2 min read
பாஜக-இந்துத்துவ ஆட்சி உருவாக்கும் அரசியல்-பொருளாதார-சமூக நெருக்கடிகளை முற்போக்கு 'கொள்கை’ தளத்தில் எதிர்கொண்டு, மக்கள் திரள் இயக்கங்களும், போராட்டங்களும் உருவாகவில்லையெனில் ஹத்ராஸ், உன்னாவ், உழவர் போராட்ட நிகழ்வுகள் தேர்தல் களத்தில் மாற்றத்தை கொண்டுவராது. இந்துத்துவ அரசியல் 1/11 இருதளங்களிலும் செயல்படுகிறது. இப்படியான இரண்டடுக்கு செயற்தளத்தை தமிழகத்தில் பாஜக உருவாக்காமல் தடுக்கும் போராட்டத்தையே இயக்கங்கள் நடத்திவருகின்றன.
தமிழகத்திற்கு இயக்க அரசியல் கட்டமைப்பினை திராவிட-தமிழ்த்தேசிய-அம்பேத்கரிய-மார்க்சிய இயக்கங்களும், அவர்களோடு பங்கெடுக்கும் தேர்தல் 2/11
Feb 26, 2022 19 tweets 3 min read
யுக்ரென் பலியாக்கப்படுவதாக மட்டுமே செய்தியை ஊடகங்கள் பரப்புவதை பார்க்கமுடிகிறது.
இந்நிலையில் மேலதிக தகவல்கள் நமக்கு சூழலை புரிய உதவும்.
யுக்ரேனின் கிழக்குப்பகுதியின் டான்பாஸ், லுகான்ஸ்க் பகுதி பெரும்பான்மை ரசிய இனமக்களைக் கொண்டது. இப்பகுதியிலிருந்து அதிபரானவரை 2014ல்...1/19 அமெரிக்கா சார்பு, நாஜிக்குழுக்கள், பாசிஸ்டுகள், மேற்குலக ஆதரவு ஆற்றல்கள் பெரும்போராட்டங்களை நடத்தி வெளியேற்றினார்கள். மேலும் ரசிய இனமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு 14,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் 2015ல் உக்ரேன் அரசுடன்.. 2/19
Oct 24, 2021 13 tweets 2 min read
கொலையுண்ட மீனவர் ராஜ்கிரண் நேற்று புதைக்கப்பட்டார். அவரது உடல் வந்து சேர்ந்த 1 மணி நேரத்திற்குள்ளாக இது நடந்தது. அவரது வீட்டிற்கு இறுதிமரியாதைக்காக எடுத்துசெல்வது போலீசால் தடுக்கப்பட்டது. அவரது முகம் காட்டப்படவில்லை. சவபெட்டியில் இருப்பது அவர் உடல்தானா என எவருக்கும் தெரியாது.1/13 உடலை கரை சேர்க்கும்பொழுது சட்டத்துறை அமைச்சர் இருந்தார். போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் எப்படி உடல் புதைப்பதற்கு அனுமதித்தார் என்பதை அவர் விளக்கவேண்டும். இலங்கையின் பிணக்கூறாய்வின் அறிக்கையை திமுக அரசு அப்படியே ஏற்றுகொள்கிறதா? ராஜ்கிரண் கடலில் விழுந்தார் என இலங்கை சொல்வதை ஏன்..
2/13
Sep 28, 2021 6 tweets 2 min read
கொரொனா காலத்தில் ஒப்பந்த ஊழியர்களாக்கப்பட்ட செவிலியர்களின் பணியை நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளோடு 700+ செவிலியர்கள் சென்னை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறார்கள். இரவும் போராட்டம் தொடர்கிறது. கொரொனோ காலத்தில் மக்களை காத்தவர்களை காப்பது நம் கடமை..1/6 கொரொனோ காலத்தில் 3000+ மேற்பட்ட செவிலியர்களை MRB மூலமாக தேர்வானவர்களை கொரொனோ பணிக்கு ஒப்பந்த ஊழியர்களாக ஒன்றரை வருடங்களுக்கு முன் அதிமுக அரசு சேர்த்தது. இவர்களை நிரந்தரம் செய்வதாக திமுக வாக்குறுதி கொடுத்ததாக போராடும் செவிலியர்
தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இவர்களை நிரந்தரம்..2/6
Jul 26, 2021 6 tweets 1 min read
அன்பான @chennaicorp சென்னையை அழகுபடுத்துவதென்பது சுவரொட்டிகளை அகற்றுவதல்ல. சுவரொட்டிகளே எளிய மக்களின் கோரிக்கைகளை, செய்திகளை மக்களுக்கு கொண்டு சென்ற அரசியல் வடிவங்கள். சுவரில் சித்திரம்-சிற்பம் உருவாக்குவோம் என்பதை செய்யும் முன்னர் சென்னையிலிருந்து அகற்றப்பட்டு செம்மஞ்சேரி.. 1/6 பெரும்பாக்கம், கண்ணகிநகர் என புறநகர் பகுதியில் குப்பையை போல ஒதுக்கப்பட்ட சென்னையின் பூர்வகுடிகளை சென்னைக்குள் குடியமர்த்துவதே சென்னையின் அழகு. சுவரொட்டிகள் அகற்றுவது எனும் பெயரில் அரசியல் நீக்கம் செய்தலும், அழகு எனும் பெயரில் எளியவர்கள் புறக்கணிக்கப்படுதலும் கடந்த காலத்தில்.. 2/6
May 31, 2021 10 tweets 4 min read
பத்திரிக்கை செய்திக்குறிப்பு:
இலங்கையின் தெற்குபகுதியில் உள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் வசம் இலங்கை அரசு ஒப்படைக்கும் தீர்மானத்தை மே20,2021இல் நிறைவேற்றியதால் தமிழ்நாட்டில் காவல்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என 31-05-2021 ’தி இந்து’thehindu.com/news/national/… 1/10 ஆங்கில நாளிதழின் 4ம் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளது .இதனால் தமிழ்நாட்டில் உள்ள சீனா மற்றும் இலங்கை தூதரகங்களின் முன் போராட்டத்தினை (நாடுகடந்த தமிழீழ அரசு எதிர்ப்பினை அடுத்து) தமிழர் அமைப்புகள் சீனாவின் நிறுவனங்களை குறிவைத்து போராட்டத்தை நட்டத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக 2/10
May 22, 2021 10 tweets 2 min read
FamilyMan எனும் படம் தமிழீழ போராளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்துகிறது. ’மெட்ராஸ்கபே’ படம் போல பல படங்களில் ஈழப் போராட்டம் கொச்சைப்படுத்தப்படுகிறது. ‘புலிப்பார்வை’ போன்ற படங்கள் போராளிகளை மலினப்படுத்துகிறது. இவ்வகை தமிழர் விரோத படங்கள் தங்குதடையின்றி உருவாகி..1/10 வெளியாகின்றன. இவை எவ்வகையிலும் கலை சார்ந்த படைப்புகள் அல்ல. இந்தியாவின் தேசிய இனங்களின் சுயமரியாதையை இழிவு செய்யும் வகையிலான பிரச்சாரங்கள். இவை எதேச்சையாக எடுக்கப்படுவதில்லை. 7 தமிழர் விடுதலையை பேசும்பொழுது இந்து நாளிதழ் ‘ராஜீவ் கொலை-வி.புலிகள் வீழ்ச்சி’ என அரைப்பக்கத்தில்.. 2/10
Apr 23, 2021 5 tweets 1 min read
கடந்த வருடம் மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய Pressure Swing Adsorption oxygen generator வசதியை மோடி அரசு செய்திருந்தால் இன்று நெருக்கடி மோசமாகியிருக்காது. ரூ201 கோடியில் 162 வசதிகளை ஏற்படுத்துவதாக சொல்லிவிட்டு 8 மாதமாக டெண்டர்களை அறிவிக்கவில்லை. இத்தனை நாட்கள் 1/5 கடந்த பின் 162 மருத்துவமனைகளில் 33ல் மட்டுமே நிறுவப்பட்டிருக்கிறது. இவைகளும் குறைந்த அளவில் ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றன. இத்தனை நாட்கள் மிககுறைந்த விலையில் சாத்தியப்படுத்திருக்கக் கூடிய உற்பத்தியை செய்ய தவறியது ஏன்? நெருக்கடி உருவான பின் ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு 2/5
Apr 19, 2021 5 tweets 1 min read
இந்தியாவிற்குள் சிறிய மாநிலம் வளர்ச்சி அடைவது உண்மையெனில் புதுச்சேரி இன்னொரு சிங்கப்பூராகி இருக்கவேண்டும். திரிபுரா சுவிசர்லாந்தாகியிருக்க வேண்டும். அஸ்ஸாம், அயர்லாந்தாகிருக்க வேண்டும்.
2014 பிரச்சாரத்திற்காக மோடி திருச்சி வந்தபோது மாநிலபிரிப்பு எனும் சூழ்ச்சி விவாதமானது 1/5 தேசிய இனங்களை சிறு சிறு மாநிலங்களாக உடைந்தால் அம்மக்களின் அரசியல் பலம் குறைந்து போகும், பொருளாதார வளர்ச்சி சிதையும்.ஒரு தேசிய இனம் தமக்குள்ளாக முரண்களை வளர்த்து சிதறுண்டுபோகும். அதிக எம்.பிக்களை கொடுக்கும் மிகப்பெரும் மாநிலமான உத்திரபிரதேசத்தின் இந்தி பேசும் மக்கள் 2/5
Apr 18, 2021 4 tweets 1 min read
சரஸ்வதி எனும் இளம்பெண் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். பெண்கள் மீதான வன்முறை அனைத்துச் சமூகத்தைச் சார்ந்த ஆண்களாலும் தங்குதடையின்றி நிகழ்த்தப்படுகிறது. பட்டியலினச் சமூகமாக இருந்தாலும் ஆண்களின் பெண் மீதான ஆதிக்கபோக்கு குறைந்துவிடவில்லை. சாதியப்படிநிலையில் அனைவரையும் விட கீழான நிலையிலேயே பெண்கள் வைக்கப்பட்ட இச்சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இன்றளவும் இருக்கிறது. தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறைக்கான வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வன்முறையாளர்கள் மீதான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுமில்லை
Apr 15, 2021 5 tweets 1 min read
நீண்டநாட்களுக்குப் பிறகு திரையரங்கில் குடும்பத்துடன் படம்பார்க்க சென்றது கர்ணனுக்காக. மாரிசெல்வராஜின் படைப்பு மிக நேர்த்தியாக அரச பயங்கரவாதத்தையும், அதன் முதுகெலும்பாக அமையும் இந்துத்துவ ஜாதிய வன்மத்தையும், சமூகமயமான சாதிய மனநிலையும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தீரா வன்மத்தோடு வேட்டையாடித் தீர்க்கும் இந்த சமூக-அரசியல்-அதிகாரவர்க்க ஜாதியப் போக்கை அப்பட்டமாக, ஒளிவுமறைவில்லாமல், அச்சப்படாமல் காட்சிப்படுத்தியதை எப்படி போற்றாமல் இருக்கமுடியும். பெருங்காமநல்லூரிலிருந்து வாச்சாத்தி, பரமகுடி, கூடன்குளம் வரை நீண்ட வரலாறு கொண்டது அரசின் பயங்கரவாதம். இந்த
Mar 24, 2021 5 tweets 1 min read
இலங்கை பற்றிய ஐ.நாவில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்பட்ட திர்மானம் தமிழர்களின் கோரிக்கையை உள்ளடக்கியதல்ல. அது ஐ.நா மனித உரிமை அவை முன்மொழிந்தவற்றை உள்ளடக்கியவையும் அல்ல, இலங்கையை கடுமையான நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானமுமல்ல. இப்படியாக நீர்த்துபோக செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தை கூட மோடி அரசால் ஆதரிக்க இயலாது என்பதே பாஜகவின் தமிழின விரோதத்திற்கு சாட்சி. ஆயிரம் தமிழர் கோவில்கள் உடைக்கப்பட்டதை கண்டுகொள்ளாத போலி கூட்டம், இனப்படுகொலைக்கு நீதிகிடைக்க எப்படி உடன்படும். காங்கிரஸ் கட்சிக்கு எவ்வகையிலும் வேறுபட்டதல்ல பாஜக. தனது பிராந்திய நலனை