Sivakumar (tn2point0.com) Profile picture
தமிழ்நாடு 2.0 = தமிழகத்தில் மாற்று அரசியல் | ஆக்கப்பூர்வ பதிவுகளும் ஆரோக்கிய விவாதங்களும் மட்டுமே 👍
May 2, 2023 17 tweets 4 min read
Based on suggestion from a twitter friend, here's the English version of my thread on "August Coup" of Andhra.

Rajinikanth, the special guest at NT Rama Rao's (NTR) centennial celebrations in Andhra recently, praised Chandrababu Naidu, leader of the Telugu Desam Party. (1/n) The ruling YSR Congress was enraged by this. YSR Congress ministers and legislators have verbally attacked Rajini.

One of the criticizing remarks made by the YSR party is, "Chandrababu backstabbed NTR politically. Rajini stood by him then. Now both are praising him". (2/n)
May 2, 2023 17 tweets 3 min read
சமீபத்தில் நடந்த NT ராமராவ் (NTR) நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினி, தெலுகு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசியது அங்கேயுள்ள ஆளுங்கட்சியான YSR காங்கிரஸுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. (1/n) YSR காங்கிரஸிலுள்ள மந்திரி, எம்எல்ஏக்கள் ரஜினியை கடுமையாக தாக்கி பேசிவருகிறார்கள்.

அத்தகைய பேச்சுகளில் முக்கியமான ஒன்று - "அரசியல் ரீதியாக NTR முதுகில் குத்தியவர் சந்திரபாபு. அதற்கு துணை நின்றவர் ரஜினி. இப்போது இவர்கள் NTRஐ புகழ்வது ஏற்கமுடியாது". (2/n)
Apr 28, 2023 4 tweets 1 min read
PTR Tapes குறித்த தன்னிலை விளக்க வீடியோவில் நிதியமைச்சர் PTR சந்தடி சாக்கில் ஒரு விஷயம் சொன்னார் - "கடந்த இரண்டு வருடங்களில் பெரும் நிதி சீர்திருத்தங்களை (Major Economic Reforms) கொண்டு வந்திருக்கிறோம்". உண்மையில், அப்படி எந்த பெரும் சீர்திருத்தமும் அமல்படுத்தப்படவில்லை. (1/4) இன்னொரு பக்கம், இந்த tapes குறித்த "சாணக்யா" வீடியோவில் ரங்கராஜ் பாண்டே "PTR வருவாய் பற்றாக்குறையை 35000 கோடி குறைத்தது சாதாரண விஷயமல்ல" என புகழ்ந்து தள்ளினார். ஆக, கொரோனா ஆண்டுடன் ஒப்பிட்டுக்கொண்டும், மத்திய அரசின் பங்களிப்பை மறைத்தும் PTR மற்றும் திமுகவினர் செய்யும் (2/4)
Apr 26, 2023 5 tweets 2 min read
முன்னாள் மத்திய நிதியமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் அசோஸியேஷனில் தலைவராக இருந்தபோது ஊழல் செய்ததாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி பிரச்சாரம் செய்தார். (1/5) வெகுண்டெழுந்த ஜெட்லி கெஜ்ரிவால் மீது 10 கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் (2015).

ஆரம்பத்தில் கெத்து காட்டி, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை வைத்து வழக்கை சந்தித்த கெஜ்ரிவால், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, தன் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை (unfounded) எனக் கூறி (2/5) ImageImage
Apr 4, 2023 12 tweets 2 min read
பத்து நாட்களுக்கு முன் ஒரு ரயில் நிலைய பார்க்கிங்கில் பைக் நிறுத்தினேன். வெள்ளி இரவு நிறுத்தினேன். அந்த பார்க்கிங்கில் 24 மணி நேரத்திற்கு பார்க்கிங் கட்டணம் ₹15. அட்வான்ஸ் தொகையாக ₹15 தரவேண்டும். தந்தேன். (பார்க்கிங்கை குத்தகை எடுத்து நடத்துவது தனியார் கான்ட்ராக்டர்)

(1/12) திங்கட்கிழமை காலை பார்க்கிங்கிலிருந்து பைக் எடுத்தேன்.

பைக் நிறுத்தி 72 மணி நேரத்திற்கு குறைவாக இருந்தது. என்றாலும், 72 மணி நேர கணக்குப்படிதான் (மூன்று நாள்) கட்டணம் வாங்குவார்கள். அது பிரச்சினை இல்லை. ஆனால், கட்டணம் வசூலிப்பவர் நான்கு நாள் என கணக்கு போட்டு பணம் கேட்டார். (2/12)
Apr 2, 2023 12 tweets 2 min read
கடந்த 50+ ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆட்சிகளில் தமிழ்நாட்டில் வளர்ச்சியே இல்லை என பேசும் தரப்பில் நான் இல்லை. அதே சமயம், 1967ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது இங்கே உருவாக்கப்பட்டிருந்த அரசு நிர்வாக கட்டமைப்பை காமராஜரைப் போன்ற அர்ப்பணிப்போடு இரண்டு கழக அரசுகளும் முன்னெடுத்து (1/n) சென்றிருந்தால் இன்றைக்கு தமிழ்நாடு ஒரு சிங்கப்பூர் போல் மாறியிருக்கும். மாறாக, அப்பொழுதே பின் தங்கியிருந்த மாநிலங்களுடன் இன்றும் தமிழ்நாட்டை ஒப்பிட்டு உவகை அடையும் நிலையில்தான் நாம் இன்னும் இருக்கிறோம். (2/n)
Apr 1, 2023 10 tweets 2 min read
திமுகவினர் திமுகவை பதினெட்டு வருடங்கள் திட்டித் தீர்த்த பெரியாரை உயர்த்திப் பிடிக்கும் அளவிற்கு, திமுகவை தோற்றுவித்து அதே பதினெட்டு ஆண்டுகள் அரும்பாடுபட்டு வளர்த்து ஆட்சியில் அமரவைத்த அண்ணாவை போற்றிப் பெருமைப்படுத்துவதில்லை. அதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, (1/10) Image பல திராவிட தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய எழுத்தாளர் பி.சி.கணேசன் எழுதிய புத்தகம் ஒன்றில் தெளிவான பதில் இருக்கிறது.

பி.சி. கணேசன் முரசொலி மாறன் நடத்திய "Rising Sun" என்ற பத்திரிக்கைக்கு பொறுப்பாசிரியராக இருந்தவர். அவர் 1980ல் எழுதிய "நான் சந்தித்த மனிதர்கள்" என்ற (2/10)
Apr 1, 2023 8 tweets 2 min read
அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் கஸ்டடி விவகாரத்தில் தகவல்கள் வெளிவந்தது போல் இப்போது அம்பாசமுத்திரம் விவகாரத்தில் தகவல்கள் வரவில்லை என்பதே கவனிக்கத்தக்க விஷயம்.

பொதுவாக போலீஸ் கஸ்டடியில் மனித உரிமைகளை மீறும் வகையில் விசாரணை இருக்கக்கூடாது என சொல்லப்பட்டாலும், (1/8) Image பொதுமக்களான நாமே இரண்டு விதமான அளவுகோல்கள் வைத்திருக்கிறோம் என்பதே நிதர்சனம். சிக்கியவர் குற்றவாளி என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டால் "போலீஸ் என்கவுண்டரில் போட வேண்டியதுதானே, கையை காலை உடைக்கணும், உள்ளே வச்சு நாலு காட்டு காட்டாம என்ன பண்றாங்க" என பேசுவோம்; அதுவே (2/8)
Mar 23, 2023 9 tweets 2 min read
தமிழக பட்ஜெட் 2023 - பதிவு #3

பட்ஜெட் சமர்ப்பித்தது முதல் இன்று வரை PTRம் திமுகவினரும் பெருமை அடிப்பது "அதிமுக அரசு 2021ல் 62,000 கோடி வருவாய் பற்றாக்குறை வைத்தது. நாங்கள் அதை 30,000 கோடியாக குறைத்துவிட்டோம்" என்பதுதான். (1/9) Image முதலில், நிதி நெருக்கடி மிகுந்த கொரோனா காலமான 2020-21 நிதியாண்டின் வருவாய் பற்றாக்குறையுடன் ஒப்பிவிடுவதே சரியான பார்வை அல்ல. அதற்கு முந்தைய நிதியாண்டில் (2019-20), வருவாய் பற்றாக்குறை சுமார் 36,000 கோடி அளவில் இருந்தது. அதற்கும் முன்பு 2018-19ல் சுமார் 23,500 கோடி இருந்தது. (2/9) Image
Mar 22, 2023 6 tweets 2 min read
தமிழக பட்ஜெட் 2023 - பதிவு #2

PTRம் சரி, பத்திரிக்கைகளும் சரி அரசின் கடன் பற்றி பெரிதாக பேசவில்லை. போன அதிமுக ஆட்சியில் "இவ்வளவு கடன் சுமை ஏற்றிவிட்டார்கள்" என ஆக்ரோஷமாக கொதித்தவர்கள் இப்போது அமைதியின் பேருருவமாய் இருக்கிறார்கள். (1/6) 2021 அதிமுக ஆட்சி முடிவில் 4 லட்சத்தி 80 ஆயிரம் கோடியாக இருந்த கடன் இப்போது (2022-23 திருத்த மதிப்பீட்டின் படி) 6 லட்சத்தி 34 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்த நிதியாண்டு முடிவில் கடன் 7 லட்சத்தி 26 ஆயிரம் கோடியாக இருக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. (2/6)
Mar 21, 2023 10 tweets 3 min read
தமிழக பட்ஜெட் 2023 - பதிவு #1

PTRன் பட்ஜெட்டை நுணுக்கமாக கவனிக்காமல் போனால் "ஆஹா, ஓஹோ" என்ற மயக்க நிலையிலேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான். இந்த வருட பட்ஜெட்டை பார்ப்பதற்கு முன், போன வருட பட்ஜெட்டில் சொன்னதை எவ்வளவு செய்திருக்கிறார்கள் என பார்ப்போம். (1/8) 2022 மார்ச் சமர்ப்பித்த 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டில் பென்ஷன் தொடர்பாக செலவு செய்யப்போவதாக சொன்ன தொகை (Budgeted Estimate) 39,508 கோடி. ஆனால், திருத்த மதிப்பீட்டின் படி (Revised Estimate), செலவு செய்த தொகை 31,950 கோடி. சொன்னதை விட 7,558 கோடி குறைவாகவே செலவு செய்துள்ளார்கள். (2/8)
Mar 19, 2023 4 tweets 1 min read
தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையின் இன்றைய பேட்டியின் மூலம் அவர் பிஜேபி நிர்வாகிகள் கூட்டத்தில் "திமுக, அதிமுக கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்காவிட்டால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்" என சொன்னது உறுதியாகிறது. (1/4) Image அண்ணாமலையின் தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கு மத்திய பிஜேபி தலைமையோ, இங்குள்ள மூத்த தலைவர்களோ இணங்குவார்களா என்பது தெரியவில்லை. அது போக, அப்படிப்பட்ட நிலைப்பாடு 2024 & 2026 தேர்தல்களில் பிஜேபிக்கு சிறிதளவேனும் வெற்றியை தர வாய்ப்பிருக்கிறதா என்பதும் விவாதத்துக்கு உரியதுதான். ஆனால்,(2/4)
Mar 16, 2023 8 tweets 1 min read
தமிழ் யூடியூபர்கள் Sting Operationல் சிக்கியிருக்கிறார்கள். Sting Operation எவ்வளவு முழுமையானது என்பதில் சந்தேகம் இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் யாரும் வீடியோக்களில் உள்ள சந்திப்புகளையோ பேச்சுகளையோ மறுக்கவில்லை. வீடியோ வெளியான பிறகு ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் தருகிறார்கள். (1/8) Image பொதுவாக புரிவது என்னவென்றால், இந்த யூடியூபர்கள் தாங்கள் ஒரு நபருக்கோ கட்சிக்கோ சார்பாக கருத்துகளை வெளியிட பணம் பெறுகிறார்கள். (2/8)
Oct 6, 2022 4 tweets 1 min read
"ராஜராஜ சோழன் இந்து மன்னன் அல்ல", "ராஜராஜன் காலத்தில் இந்து மதம் என இல்லை" என சொல்பவர்களுக்கு இன்றைய இந்து மதத்தில் பிடிப்போ அன்றைய சைவ மதத்தில் அக்கறையோ இல்லை.

இந்த பிரச்சாரத்திற்கு அடிப்படையான காரணம் ஆரிய (பிராமண) எதிர்ப்புதான்.

(1/4) Image அதாவது, தமிழர்களின் சைவ மதத்தை ஆரியமயப்படுத்திவிட்டார்கள் (Aryanization) என்பது.

ஆனால், இவர்கள் வசதியாக மறைக்கும் ஒரு செய்தி என்னவென்றால் - தீவிர சிவ பக்தனாகிய ராஜராஜ சோழனே பிராமணர்களை ஏற்றுக்கொண்டான் என்பதுதான்.

ராஜராஜ சோழன் ஆட்சியில், கோவில்களில் ஆகமமுறை பூஜைகள்

(2/4)
Oct 5, 2022 4 tweets 1 min read
மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என பேசுபவர்கள்தான் அதிகமாக மத அரசியலை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது.

வெற்றிமாறன் "ராஜ ராஜ சோழன் இந்து மன்னன் அல்ல" என்கிற வகையில் வைத்த கருத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ட்வீட் (1/4) வெளியிட்டிருக்கிறார்.

திருமாவின் ட்வீட் சொல்லும் கருத்து இதுதான் - "ராஜ ராஜ சோழன் சைவத்தை பின்பற்றிய மன்னன். அந்த காலத்தில் சைவம், வைணவம் என பிரிவுகள் இருந்தன. இந்து என்கிற பெயர் பிற்காலத்தில் வந்தது. இன்றைய பெயரை வைத்து அன்றைய மன்னனை அடையாளப்படுத்தலாமா?" (2/4)
Sep 19, 2022 10 tweets 2 min read
"நவீன தமிழகத்தின் தந்தை" என கலைஞரை உருவகப்படுத்தும் முயற்சியில் திமுக சில வருடங்களாகவே கவனம் செலுத்தி வருகிறது.

அப்படி திமுக சொல்லும் விஷயம்- சென்னையில் டைடல் பார்க் வைத்து ஐடி காரிடர் (IT Corridor) உருவாகக் காரணமானவர் கலைஞர். மேம்போக்காக பார்த்தால் இது உண்மைதான். ஆனால், (1/n) தமிழ்நாட்டில் தனியாக ஒரு ஐடி நகரமே உருவாக இருந்த வாய்ப்பை தவறவிட்டு வெறும் ஐடி காரிடர் அளவில் நிறுத்தியதுதான் திராவிட மாடல் என்பது இந்த மாடலின் சறுக்கலை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

இதனை புரிந்துகொள்ள சற்று பின்னோக்கி போவோம். 1996ல் மத்தியில் தேவே கவுடா தலைமையிலான (2/n)
Sep 13, 2022 8 tweets 1 min read
திமுகவின் ஆ.ராசா பேசிய "இந்து என்றால் விபச்சாரியின் மகன், பஞ்சமன்" பேச்சை சித்தாந்த ரீதியிலேயே அணுகுவோம்.

"கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மற்ற மதங்கள் இல்லாத அனைவரையும் இந்து என உச்சநீதிமன்றம் அழைக்க சொல்கிறது; ஆனால் இந்துமதம் பாகுபாடு காட்டுகிறது" என்பது அவர் வாதம். அவருக்கு (1/8) சில கேள்விகள் -

1. 73 வருடமாக அரசியலில் இருக்கும் கட்சி திமுக. அதில் 18 வருடங்கள் மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்திருக்கிறது. மற்ற மதமும் வேண்டாம், இந்து மதமும் வேண்டாம் என்பவர்களை வேறு ஏதேனும் பிரிவில் வைக்க திமுக முன்வைத்த ஆக்கப்பூர்வமான யோசனைகள் என்ன? மத்தியில் (2/8)
Sep 12, 2022 6 tweets 2 min read
நண்பர் @doomangolee விருப்பத்திற்கிணங்க அவரது ட்வீட் threadஐ பகிர்கிறேன்.

கூடவே, என் அதிமுக்கிய விமர்சனங்களை வைக்கிறேன் -

1. மாற்று அரசியல் விரும்பும் யாருமே "Rome was not built in a day" என்பதை உணர்ந்தவர்கள்தான். ஆனால், மநீமவில் கட்டுமானப் பணிகளே பெயரளவில்தான் நடக்கின்றன.(1/6) மக்களிடம் மாற்றத்தை உண்டாக்க அந்த கட்சியின் தலைவர் மக்களை சந்திக்க வேண்டுமே? கடந்த 1.25 வருடத்தில் தேர்தல் பிரச்சாரம் தவிர கமல் எத்தனை முறை மக்களை சந்தித்திருக்கிறார்? 2006-11ல் விஜயகாந்தும், 2014க்கு பிறகு சீமானும் அவர்கள் கட்சியை வளர்க்க அயராது மக்களை சந்தித்தார்களே? (2/6)
Sep 8, 2022 14 tweets 3 min read
நம் சமூக அமைப்பு பொதுவாகவே தொழில் ரீதியில் அனுபவத்தில் மூத்தவர்களுக்கு (Seniority) முக்கியத்துவம் கொடுப்பதாகவே இருந்தது; இன்றும் பெருமளவுக்கு இருக்கிறது. 1991ல் இந்தியா உலகமயமாக்கல் பொருளாதாரத்தை தழுவிய பிறகு இங்கே உலகளாவிய நிறுவனங்கள், குறிப்பாக IT நிறுவனங்களின் (1/n) வளர்ச்சியில்தான் "அனுபவத்தில் மூத்தவர்" என்பதை விட "திறமையில் சிறந்தவர்" என்பதற்கு ஓரளவிற்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

அதாவது, திறமை பெரிய அளவில் இல்லாமல், பணி ரீதியில் அதிக வருடங்கள் அனுபவம் இருக்கிற காரணத்தாலேயே ஒருவர் வளர்ந்துவிட முடியாது என்கிற சூழல் (2/n)
Sep 7, 2022 5 tweets 1 min read
எவ்வளவு பெரிய வல்லரசு நாடாக இருந்தாலும் வலுவான எதிர்க்கட்சி இருப்பது அவசியம். அமெரிக்காவிலும் கூட பல அரசியல் பிரச்சினைகளுக்கு மத்தியில் டெமோக்ரட், ரிபப்ளிக் கட்சிகள் வலுவாகவே இருக்கின்றன. (1/5) இந்தியாவைப் பொறுத்தவரை "காங்கிரஸ் முக்த் பாரத்" என்பது பிஜேபிக்கு விருப்பமானதாக இருக்கலாம். ஆனால், அது இந்திய தேச நலனுக்கு ஆரோக்கியமானதல்ல. அந்த வகையில், காங்கிரஸின் சமீபகால பெரும் வீழ்ச்சியை ஆக்கப்பூர்வமானதாக எடுத்துக்கொள்ள முடியாது. (2/5)
Aug 23, 2022 11 tweets 2 min read
"திமுக மட்டும்தான் மிகவும் புத்திசாலித்தனமான, சாதுர்யமான கட்சி என நினைத்துக்கொள்ள வேண்டாம்" என சொன்ன தலைமை நீதிபதிக்கு முன் சமர்ப்பிக்க விரும்பும் சில ஆதாரங்கள் இங்கே ஒரு பதிவாக.

யுவர் ஆனர் - நீங்கள் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தாலும் உங்களுக்கு (1/n) Image உரிய தகவல்கள் கிடைக்காமல் மறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதனால் உங்கள் முன் சில வாதங்களை சமர்ப்பிக்கிறோம்.

1. "என் அப்பா ஆட்சிக்கு வந்தால் நகைக்கடன்களை தள்ளுபடி செய்துவிடுவார், அதனால் இன்றே போய் நகைகளை அடகு வையுங்கள்" என்று திமுக சார்பில் இன்றைய முதல்வரின் மகன் (2/n)