Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee
Dec 19, 2021 • 6 tweets • 2 min read
வில்லிவாக்கம், கொளத்தூரை இணைக்கும் மேம்பால கட்டுமான கட்டுமான திட்டத்திற்கு தேவையான இடங்களை பொதுமக்களே தர முன்வந்தப் போதிலும் மண்டலம் 6 சென்னை மாநகராட்சி இரவோடு இரவாக நோட்டீஸ் ஒட்டு மொத்த குடியிருப்பு வாசிகளின் கட்டடங்களை இடிக்கும் வேலையை தொடங்கியுள்ளது.
இப்பகுதியான அவ்வைநகர் முதல் தெருவில் 60 வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 120 குடும்பங்கள் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
எந்தவிதமான இழப்புடும் நிவாரணமும் அறிவிக்காமல் மின்சாரத்தை துண்டித்து 7 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
Feb 28, 2020 • 22 tweets • 4 min read
முளையிலேயே விளையும் விதம் காட்டிய உண்மையான மாண்புமிகு நீதிபதி எஸ்.முரளிதர்.
அநேகமாக அது 90களின் ஆரம்பம். அப்போது நான் ஸ்பிக்கில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலை கிணறு என்கிற கிராமத்தில் இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலை பயன்படுத்திக் கொண்டு
காவல்துறை தலித் மக்கள் மீது கடுமையான வன்முறை வெறியாட்டத்தை ஏவிவிட்டது.
இதன் மீது செய்யப்பட்ட எந்த முறையீடுகளையும் அப்போது ஆட்சிப் பொறுப்பிலிருந்த செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசாங்கம் செவி சாய்க்க மறுத்துவிட்டது. வேறு வழியின்றி அந்த மக்கள் அந்த ஊருக்கு அருகே பரமன்குறிச்சி என்கிற