அழகானவனின் தகப்பன் Profile picture
ரொம்ப நல்லவன்.. ஊர் சுற்றுபவன், சுற்றிக்கொண்டு இருப்பவன். சூடு, சொரணை இருப்பதால்,பிழைக்கதெரியா தமிழன்.புத்தகம்,திரைப்படங்களின் மீது காதலும் தேடலும் கொண்டவன்.
Jul 26 13 tweets 2 min read
கருப்பட்டி காப்பி கடை அய்யர் பேக்கரி மாதிரி ஊரெங்கும் பரவி விரவி கிடக்கிறது. ஆனா அந்த அளவுக்கு கருப்பட்டி உற்பத்தி இருக்கிறதா என கேட்டால் நான் சொல்கிற பதில் இல்லை என்பதே. 2000இல் இருந்து 2010 வரைக்கும் கருப்பட்டி விலை கிலோ 10ல் இருந்து 100 ரூபாய் கூட தொடவில்லை.சீனியின் விலை கருப்பட்டி கிலோ 10 விற்கும்போது 18ரூபாய் ஆனா 2010ல் 100ல் தொடங்கிய விலை புது கருப்பட்டி 450லும் பழசு 550இல் இருந்து 600 ரூபாயிலும் விற்கிறது. இது நேரடியாக கருப்பட்டி தயாரிக்கும் ஆளிடம் இருந்து பெறப்படும் விலை.(ஆள் தொழிற்சாலை அல்ல) இவ்ளோ விலைக்கு காரணம் பனை மரம் ஏற ஆள் இல்லை.
Dec 24, 2023 9 tweets 3 min read
இன்று நிறைய நல்ல சம்பவங்கள் நடந்தன. அதை மறக்கடிக்கும் விதமாக ஒரு மோசமான சம்பவமும் நடந்தது. நல்ல சம்பவங்களை நாளை சொல்கிறேன். மோசமான சம்பவத்தை இன்று சொல்கிறேன். வெகு நேர யோசனைக்கு பிறகு இந்தப் பதிவினை Celebration. கடந்து திங்கள் அன்று மதியம் ஒரு மணி அளவில் ஒரு ஏழை மனிதருக்கு
Image
Image
சிகிச்சைக்கு உதவி கேட்டு அமைச்சர் பெருமக்கள் மற்றும் சந்துலக நண்பர்களை குறிப்பிட்டு இருந்தேன்.அன்று கடுமையான மழை என்று எல்லாருக்கும் தெரியும்.எனவே அரசாங்கம் அந்த எளிய மனிதனுக்கு உதவி செய்யும் என்று தீர்க்கமாக நம்பினேன்.அந்த நம்பிக்கைக்கு ஏற்ற விதமாக ஆளும் கட்சியின் இணைய ஊடகத்தில்
Image
Image
Dec 22, 2023 7 tweets 1 min read
என்னுடைய பகுதியில் இருந்து சில பகுதிகளுக்கு உணவு கொண்டு போக முடியாத சூழ்நிலை இருக்கிறது..நிறைய இடங்களில் மடை உடைந்து வாகனம் செல்ல முடியாத நிலைமை.ஆனால் அந்த பகுதிகளுக்கு திருநெல்வேலியில் இருந்து உணவு வழங்க முடியும். எனவே அந்த பகுதிகளை இங்க குறிப்பிட்டு சொல்கிறேன்.. ஏற்கனவே பாலகிருஷ்ணன் எனும் தன்னார்வலர் ரெட்டியார்பட்டி வழியாக முனைஞ்சிப்பட்டி மூலக்கரைப்பட்டி சுற்றி உள்ள கிராமங்களில் உணவு வழங்க சென்று கொண்டு இருக்கிறார். அதேபோல் திருநெல்வேலியில் இருந்து உணவு தர ஆசைப்படும் அன்பு உள்ளங்கள் இந்த பதிவில் நான் குறிப்பிடும் ஊர்களுக்கு சென்று உதவுமாறு
Nov 24, 2023 11 tweets 2 min read
#சம்பவம் என் மனைவிக்கும் எனக்கும் 5 வருட காதலுக்கு பிறகு கல்யாணம் நடந்தது..கல்யாணம் ஆன ஒரு வாரத்தில் தெரிந்துவிட்டது.இருவரும் எங்களோட பலகீனங்களை வெளிய காட்டிக்காம இருந்து இருக்கோம் என.. தினமும் வீட்ல கலவரம் தான்.. நாங்க போடுற சண்டைல அவங்க அம்மா சென்னைக்கே போய்ட்டாங்க.. ஒவ்வொரு
Image முறை சண்டை வரும்போதும் எதாவது ஒரு விஷயம் அவங்கள பற்றியோ அல்லது என்னை பற்றியோ முழுமையாக அவங்களுக்கு தெரியவரும்..ஆக சண்டை வரும் ஒவ்வொரு முறையும் ஒருவருக்கொருவர் புரிஞ்சிக்க ஆரம்பிச்சோம். அதனால் இருவரும் சண்டைபோட உள்ளுக்குள்ள ஆசைப்பட்டோம். நா 7 மணிக்கு வீட்ல இருப்பேன் ன்னு
Oct 31, 2023 9 tweets 5 min read
Online app ல லோன் வாங்கிட்டு எல்லாரும் எப்படி கஸ்டபடுறாங்க ன்னு தெரிந்தும் நிறைய பேர் வாங்கிட்டுதான் இருக்கிறாங்க.. இன்னும் சிலர் அதோட விளைவுகள் தெரியாம வாங்க முயற்சி பண்றாங்க.. நா எனக்கு தெரிஞ்ச சிலர்கிட்ட பேசுனதுல ஒரு விஷயம் தெரிந்தது.. நீங்க என்னதான் review பார்த்துட்டு online
Image
Image
App install பண்ணி லோன் வாங்குனாலும் எல்லாரும் உங்க தகவலை திருடுறாங்க. உங்களுக்கே தெரியாம உங்க அக்கௌன்ட் ல பணம் எடுக்கிறாங்க அதுவும் உங்க ஒப்புதலோடு.. இதுல எனக்கு தெரிந்தே நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க. ஆனா வெளிய சொல்ல கஷ்டப்பட்டு நம்பர் மாத்திட்டு அக்கௌன்ட் close
Image
Image
Feb 13, 2023 13 tweets 4 min read
#சம்பவம் போனவருடம் நடந்தது.திசையன்விளையில் ஒரு பர்சனல் லோன் வெரிஃபிகேஷன் பணி. லோக்கல் ஏரியா என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அதுவும் வாடிக்கையாளர் வெளிஊரில் இருப்பதால்,அவரின் நிரந்தர முகவரியில் அவருக்கு சொந்தமாக ஏதேனும் இருக்கிறதா என பார்த்து சொல்லவேண்டும். அந்த முகவரியில் Image யாரு இருக்கிறார்கள், அவர் குடும்பத்தினரா? இல்லை வேறு யாருமா? எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்க்கு கடன் கிடைக்கும். பணிமுடியும் தருவாயில் இறுதியாக பார்த்துவிட்டு செல்லலாம் என முடிவெடுத்து வாடிக்கையாளரை அழைத்து,வங்கியில் இருந்து அட்ரஸ் வெரிஃபிகேஷன்க்காக செல்கிறேன்.வீட்டில்
Feb 12, 2023 8 tweets 7 min read
கதை 1960களில் பிரான்சில் நடக்கிறது.நாயகன் கட்டிட தொழிலாளியாக இருந்துகொண்டே அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் எதிராக செயல்படும் அமைப்பில் ஒருவனாக செயல்படுகிறான்.அமெரிக்காவை ஒழிக்க வேண்டுமெனில் அதன் பொருளாதாரத்தில் கை வைக்க வேண்டும்.எனவே அவன் அந்த அமைப்பில் உள்ள ஒருவரோடு இணைந்து வங்கி Image கொள்ளையில் ஈடுபடுகிறான். அதில் பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.இதற்கு இடையில் இதே உணர்வோடு செயல்படும் பெண்ணோடு காதல் உருவாகிறது.வங்கிகொள்ளையில் இவனோடு ஈடுபடும் நபர் கொள்ளை முயற்சியில் இறக்கிறார்.இவன் அடுத்தகட்டமாக கள்ளநோட்டு அச்சடிக்கிறான்.அமெரிக்காவின் திட்டத்தை எதிர்க்கும் இவன் Image
Nov 27, 2022 16 tweets 10 min read
கந்தாரா இந்த படத்தை பற்றி பேசிட்டு இருந்தாங்க.. நம்ம ஆளுங்க நிறைய பேர் விமர்சனமும் எழுதுனாங்க.கழுவியும் ஊத்துனாங்க.அது அவரவர் ரசனை சார்ந்தது. வழிபாடு பற்றியும் பேசிட்டு இருந்தாங்க அல்லது விவாதம் பண்ணிட்டு இருந்தாங்க. இங்க எத்தனை பேருக்கு குலதெய்வ வழிபாடு நாட்டார் கோவில் வழிபாடு பற்றி தெரியும்னு எனக்கு தெரியல. எங்க ஆச்சி ஒரு சாமிக்கு கோழி சுட்டு சுருட்டு, மது வச்சு படையல் போடுவாங்க. அதுவும் பனைமரத்து மூட்டுக்குள்ள. முதலில் பதநீர் இறக்கியதும் முனீஸ்வரனுக்கோ இல்லை ன்னா பேச்சிக்கோ படைச்சுட்டு சாலையில் நடந்து போறவங்களுக்கு பனை ஓலை பட்டைல கொடுப்பாங்க.
Nov 11, 2021 5 tweets 6 min read
ஒரு சில திரைப்படங்கள் பார்க்கும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது, பார்த்து முடித்தபின் இரண்டு மூன்று நாட்கள் அதன் பாதிப்பு மனதில் இருந்து கொண்டே இருக்கும்.பதின்வயதுகளில் எல்லாருக்கும் வயதில் மூத்த பெண்ஒருத்தி தேவதையாக, காதலியாக இருந்திருப்பாள்.அப்படிபட்ட நாயகன்களுக்கான கதை இது Image நிச்சயமா இந்த படம் எல்லாருக்கும் 🔞 படமாக தான் அறிமுகம் ஆகியிருக்கும். எனக்கும் அப்படித்தான் இந்த படம் அறிமுகம் ஆனது.ஆனால் படம் பார்த்தபின் இந்த படத்தை எவன்டா பிட்டு படம் என சொன்னது என கேட்க தோன்றியது.ஒரு பதின்வயது சிறுவன் தன்னை அந்த பெண்ணுக்கு நாயகனாக நினைத்துகொண்டு கற்பனையில் Image
Aug 18, 2021 5 tweets 5 min read
இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி 2004யில் எழுதப்பட்டு பின் படமாக 2017இல் வெளியான தரமான ஒரு money heist திரில்லர் படம். Attila வறுமையின் பிடியில் இருக்கும் வாலிபன். ஒரு விளையாட்டு அகாடமில கோல் டென்டர் ah வேலை பார்த்துட்டு இருக்கிறான். அவனுக்கும் மற்றவர்கள் போல் செலவு செய்து சந்தோசமா வாழ ஆசை.அதனால் திருட ஆரம்பிக்கிறான். திருட செல்லும்முன் பயமில்லாமல் செயல்பட whisky குடித்துவிட்டு செல்கிறான். அதனால் திருடிவிட்டு செல்லும் இடங்களில் அந்த மதுவின் வாசனை அதிகமாக இருக்கிறது. இதனால் whisky திருடன் என அழைக்கப்படுகிறான்.அவன் தேவைக்காக திருட்டை ஆரம்பித்தவன். இப்போது
Aug 17, 2021 8 tweets 2 min read
#சம்பவம் 2014-ஆம் வருடம்,சென்னையில் ஆபீஸ் மீட்டிங் மாதத்தில் ஒருநாள் கண்டிப்பா இருக்கும்.உடன்குடியில் இருந்து சென்னை சென்று வருவதற்கு அலுவலகமே டிக்கெட் போட்டு தருவதால்,நமக்கும் ஊர் சுற்ற பிடிக்கும் என்பதாலும் சந்தோசமாக சென்னைக்கு சென்று வருவேன்.சனிக்கிழமை மீட்டிங் இருக்கும். ஞாயிறு நண்பர்களோடு ஊர் சுற்றிவிட்டு அப்டியே மாலை வேளையில் கோயம்பேட்டில் இருந்து உடன்குடிக்கு பயணத்தை தொடங்கிவிடுவேன். எப்போதும் தனிமைதான். முக்கியமா ஜன்னல் சீட். ஜன்னல் சீட் கிடைக்கலைன்னா அடுத்த bus இப்டியே ஒரு நான்கு மாதங்கள் சென்றது. ஜோடியா எவனாவது வண்டியில் ஏறுனா. கொஞ்சம்
Aug 4, 2021 6 tweets 6 min read
கதை 1935யில் நடக்கிறது. நாயகன் green mile எனும் சிறைச்சாலையில் சிறை அதிகாரியாக பணி செய்கிறான். அவனுடன் இன்னும் சில அதிகாரிகள் பணி செய்கிறார்கள். அவனுக்கு மேல் வார்டனும் உண்டு.சிறையில் நடக்கும் சம்பவங்களை அவருடன் நாயகன் பகிர்ந்துகொள்வான்.இந்த சிறைசாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருப்பர். அதில் ஒருவன்தான் ஜான் coffey. இரண்டு பெண் பிள்ளைகளை கொடூரமான முறையில் கொன்ற காரணத்திற்காய் மரண தண்டனை பெற்றவன். இவனுடன்.. ஒரு psycho, எலி வளர்க்கும் வயதான கைதி. இன்னும் சிலர். நாயகனுக்கு ஒரு யூரின் செல்கயில் தீவிரமான வலி ஏற்படும். அதனால்
May 20, 2021 4 tweets 4 min read
ஒரு நல்ல காமெடி திரில்லர் movie பார்க்கணும்னு ஆசைப்படுறவங்க கண்டிப்பா இந்த படம் பார்க்கலாம். நாயகன் காவல்துறை அதிகாரி. கிரிமினல் நண்பனை நம்பி பணத்தை இழந்து வீடு ஏலம் போகும் சூழல். காவல் நிலையத்தில் லஞ்சம் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் டீம் விசாரணைக்கு செல்ல வேண்டிய சூழல். வீட்டில் எங்கும் வெளிய கூட்டிட்டு போகலன்னு மனைவியின் புலம்பல்.அதே நேரம் தேடப்படும் குற்றவாளி philipines நாட்டில் இருப்பதாக தகவல். இங்கு காவல்துறை நண்பர்கள் பணம் சேர்த்து நாயகன் குடும்பத்தை philipines நாட்டுக்கு சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.நாயகனின் நண்பன் ஒரு புதையல்
Sep 10, 2020 4 tweets 4 min read
நம்ம எல்லாரோட நட்பு வட்டத்துலேயும் ஒருத்தன் இருப்பான்.அவன் நாமாககூட இருக்கலாம்.அவனுக்கு எதுவுமே உருப்படியா தெரியாது.ஆனால் எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பில்டப் பண்ணி காரியத்தை சாதிச்சுருவான். இதே ஏன் இப்ப சொல்றேன்னா இந்த கதையின் நாயகனும் அந்த ரகத்துக்குள்தான் வருவான்.நம்ம Oldboy ஹிரோ நம்ம ஆளு சுங்கத்துறைல வேலை பார்க்கிறாரு..அப்ப ஒரு கேங்ஸ்டர்கூட பழக்கம் கிடைக்குது.அவரோட பழக்கத்தை வைச்சு அவன்கூட பார்ட்னர் ஆகுறாரு.நாயகனுக்கு யார்கிட்டே அதிகாரம் பண்ணனும்னு தெரியாது.சண்டை போட தெரியாது. கடத்தல் தொழிலைப் பற்றி சுத்தமா தெரியாது.கட்டப் பஞ்சாயத்தும் தெரியாது.ஆனால்