Wolfrik Profile picture
வாசிப்பாளன் 📖 இசை ஆர்வலன் 🎼 தேடி கிடைக்காதெனினும் தேடுபவன் 🔭 உலக நடப்புகளை உற்று நோக்கும் பாமரன் I was a Wolf 🐺 and she my moon 🌃
Aathithyaa Profile picture 1 added to My Authors
23 Sep
சீன பயணி யுவான் சுவாங், பாஹியான் மார்க்கோ போலோ என அக்கால பயணிகளின் குறிப்புகளில் இந்தியா பணக்கார தேசமாகவே காட்டபடுகின்றது, பிச்சைக்காரர் ஒடுக்கபட்டோர் தலித் திராவிட அடிமைதனம் எதையும் அவர்கள் எழுதி வைக்கவில்லை

கிழக்கிந்திய கம்பெனி வியாபார அனுமதிக்காக ஜஹாங்கீர் அரண்மனையில்
நின்றபொழுது அது பூலோக சொர்க்கம் என்றே குறிப்பு எழுதி வைக்கபட்டிருக்கின்றது

இந்தியாவில் வறுமையும் கொடுமையும் ராபர்ட்கிளைவ் வந்து ஆடி கொள்ளையடித்த காலத்தில் நடந்திருகின்றது

அவனும் அவனின் அடிபொடிகளும் தங்கவேட்டையே இங்கு நடத்தி வங்கத்தை சுரண்டியிருக்கின்றார்கள்
வங்கம் பெரும் சிக்கலில் முதல் பஞ்சத்தை சந்தித்து பல லட்சம் பேர் இறந்திருக்கின்றார்கள், அந்த பாவமெல்லாம் தன்னை சார்ந்தது என கிளைவும் தற்கொலை செய்து கொள்கின்றான்

வெள்ளையன் ஆட்சி வந்தபின்பே இங்கு பெரும் பிரிவினையும் பஞ்சமும் வந்திருகின்றது, அப்படி ஒரு சமூகம் உருவாக உருவாக அவர்களை
Read 9 tweets
23 Sep
உலகில் இருவருக்கு சிக்கல் , சிக்கலின் வடிவம் வேறே தவிர அடிப்படை தன்மை ஒன்றேதான்

முதலாவமர் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இவரால் தாலிபன்களை மேற்கத்திய நாடுகளின் விருப்பத்துக்கு ஏற்ப வழிக்கு கொண்டுவரமுடியவில்லை. அந்த தாலிபன்கள் பாகிஸ்தான் இல்லாமல் நொடி கூட வாழமுடியாது என்பது
உலகறிந்த விஷயம் என்பதால் இந்த தீவிரவாதிகள் அல்லாத எல்லா மக்களும் கொண்ட ஆட்சி வேண்டும் அதை பாகிஸ்தான் செய்யமுடியும் என கருதுகின்றன மேலைநாடுகள்

இதனால் அவை இம்ரானிடம் கோருகின்றன, பின் மெல்ல கண்களை உருட்டுகின்றன, பொருளாதார தடை தெரியுமா? என கத்தியினை காட்டுகின்றன‌
அதே நேரம் தாலிபன்களோ "நீ இஸ்லாமிய நாடுதானே., எங்களை காப்பதுதானே உன் கடமை, எங்கள் ஆட்சி ஷரியத் ஆட்சி, நீ நல்ல இஸ்லாமியன் என்றால் எங்களை ஆதரி, காபிர்களை நம்பாதே. ஆம், எங்களோடு சேர்ந்தால் நீ நாசமாவாய் அது நன்றாய் தெரியும், அதற்கென்ன புனிதபோர் என்றால் அப்படித்தான் இருக்கும்
Read 9 tweets
23 Sep
உள்ளாட்சி தேர்தல் என்பது பாஜகவுக்கு @BJP4TamilNadu
ஒரு நல்ல வாய்ப்பு, அதில் வெற்றி தோல்வி என்பதல்ல விஷயம் மாறாக வாக்களர்களை இந்துக்கள் வாரியாக ஒழுங்குபடுத்த நல்ல பயிற்சியும் அனுபவமும் அவர்களுக்கு கிடைக்கும்

பாஜக இங்கு வளரும் கட்சி, அது இன்னும் செல்லவேண்டிய தூரமும் பயணமும்
மிக அதிகம், சிலர் கருதுவது போல் அண்ணாமலை @annamalai_k மட்டும் ஓரிரு ஆண்டுகளில் தமிழகத்தை புரட்டிபோடுவார் என்பதெல்லாம் மிகபெரிய எதிர்பார்ப்பு அப்படி நடக்கவும் வாய்ப்பில்லை

ஒரு கட்சி தான் வளர்வதற்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புக்களையும் பயன்படுத்தி அடிப்படை வாக்குசாவடிகளில் இருந்து
தன்னை வளர்க்க வேண்டும்

இதற்கு மிகபெரிய உதாரணம் திமுக,1948ல் அது முட்டையில் இருந்து வந்த கோழிகுஞ்சு போலதான் இருந்தது,அக்கட்சி ஆட்சியினை பிடிக்கும் என்பதெல்லாம் ஆப்கானிஸ்தான் உலக வல்லரசாகும் என சொல்வது போல் ஏளனமாகத்தான் பார்க்கபட்டது

ஆனால் அவர்கள் அடிதட்டில் இருந்து போராடினார்கள்
Read 7 tweets
23 Sep
அமெரிக்காவில் தொடங்கும் ஐ.நா பொதுகுழுவில் ஒவ்வொரு உறுப்புநாடும் கலந்து கொள்வது வழமை மற்றும் கடமை. இதில் இந்த ஆண்டு ஆப்கன் தூதர் கலந்து கொள்வதுதான் சுவாரஸ்யம்

கடந்த அப்துல் கானியின் ஆட்சியில் நியமிக்கபட்ட ஐ.நாவுக்கான ஆப்கன் பிரதிநிதி தானே மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட
அரசின் பிரதிநிதி, என்னைத்தான் அங்கே அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றார்

அதே நேரம் இந்த தாலிபன் அரசின் வெளியுறவு துறையோ ஐ.நாவுக்கு "நாங்கள்தான் ஆப்கன் இஸ்லாமிய அமீகரத்தின் பிரதிநிதிகள் இதனால் நாங்கள் அனுப்பும் நபரைத்தான் பேசவிட வேண்டும்,
இப்படிக்கு ஆப்கன் வெளியுறவு துறை அமைச்சர்" என ஓலை அனுப்பிவிட்டது

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் யாரென கையொப்பத்தை கண்டதும், அப்படியே அதிர்ந்துவிட்டது ஐ.நா, காரணம் அவர் ஐ.நாவால் தடை செய்யபட்ட தீவிரவாதி
Read 5 tweets
23 Sep
அமெரிக்க உளவுதுறை இப்பொழுது ஒருவித சிக்கலில் சிக்கியுள்ளது, அமெரிக்க உளவுதுறை பிரமுகர்களலெல்லாம் ஒருமாதிரி நோய்க்கு ஆளாகின்றார்கள்

இம்மாதிரி நோய் முதன் முதலில் கியூப ஹவானாவில் அமெரிக்க உளவு அதிகாரிக்கு நேர்ந்தது, 2018ல் அந்த புதுமையான நோய் "ஹவானா சிண்ட்ரோம்" என கருதபட்டது
இந்த நோயால் தலைவலி, கடுமையான உடல் சோர்வு, தலை சுற்றல், குமட்டல், தூக்கமின்மை, காது கேளாமை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது, சிலருக்கு மூளை பாதிப்பும் ஏற்படுகின்றது

தொடர்ந்து உலகெல்லாம் இதே அறிகுறிகளுடன் அமெரிக்க உளவு அதிகாரிகள் பாதிக்கபட ஏதோ ஒரு சக்தி இதை தங்களுக்கு ஏற்படுத்துவதை
கண்டுகொண்டது அமெரிக்கா

இம்மாதிரி தாக்குதல் ஓரிரு முறை என்றால் சந்தேகம் வராது, எல்லா தாக்குதலும் ஒரே மாதிரி இருந்தால் அதுவும் ஒரே துறைமேலே இருந்தால் யாருக்கு சந்தேகம் வராது?

இந்நிலையில் இந்தியா வந்து சென்ற அமெரிக்க உளவு அதிகாரிக்கும் இதே பாதிப்பு வர பொங்கிவிட்டது சி.ஐ.ஏ
Read 6 tweets
23 Sep
உலக அரங்கில் இந்தியாவின் இடம் மிக உயரமான இடத்திற்கு சென்றிருக்கின்றது, வல்லரசுகளுக்கு இடையே அமைதிபேச்சு நடத்தும் அளவுக்கு சக்திமிக்க நாடாக மாறிவிட்டது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கொடுத்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டனுடன் பிரான்ஸுக்கு கடுமையான முறுகல் நிலை
ஏற்பட்டுள்ளது, இந்த நேரத்தில்தான் அமெரிக்காவில் ஐ.நா பொதுகுழு கூட்டமும் நடக்கின்றது

இந்த நேரத்தில் பிரான்ஸை கொஞ்சம் ஆறுதல்படுத்தும் முயற்சிகள் தொடங்கின ஆனால் பிரான்ஸ் அடங்கியதாக தெரியவில்லை ஆனால் உலக வல்லரசுகளுக்கு பொதுவான நாட்டை பிரான்ஸ் தேடியது
இந்த நேரத்தில்தான் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் மோடியினை தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார், இதில் மோடியடனான பேச்சுவார்த்தைக்கு பின் பிரான்ஸின் நிலைபாட்டில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிகின்றது

குவாட் அமைப்பில் பிரான்ஸ் இல்லை, அதே நேரம் இப்பொழுது அமெரிக்கா செய்யும்
Read 6 tweets
23 Sep
சில நாட்களாக தமிழக நிதியமைச்சர் டெல்லி கூட்டத்தை புறக்கணித்து வளைகாப்பு நிகழ்வுக்கு சென்றதும், அதை பாஜகவினர் விமர்சித்ததும் அதற்கு திமுகவினர் நீலிகண்ணீர் வடிப்பதும் நடக்கின்றன‌

திமுகவினை பற்றி பொய்செய்தி பரப்புகின்றார்கள் என கதறிகொண்டிருகின்றனர் திமுகவினர்
விஷயத்தை தொடங்கி வைத்தது மீம்ஸ்கள், இந்த மீம்ஸ்கள் என்பது புதிதல்ல பழைய கார்ட்டூன்களின் புதியவடிவம் இவை, தமிழ்நாட்டில் தரம்கெட்ட அக்கால கார்ட்டூன்களெல்லாம் திமுக பத்திரிகையில் காங்கிரஸ் பார்பண எதிர்ப்பு, இந்து எனும் பெயரில்தான் அறிமுகமானதெல்லாம் வரலாறு
நிதியமைச்சர் கொளுந்தியா திருமணத்துக்கு சென்றார் என யாரோ அக்கால திமுக பாணியில் மீம்ஸ் வெளியிட்டிருந்தனர், பாஜகவின் பேச்சாளர் சவுதா மணி அம்மையார் டிவிட்டரில் " நிதியமைச்சரே இது உண்மையா?" என மட்டும்தான் கேட்டிருந்தார்

ஆம், அவர் அவ்வளவுதான் கேட்டார்
Read 9 tweets
22 Sep
இங்கு மறைக்கபட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளும் பொழுது ஏன் இதை எல்லாம் வரலாற்றில் மறைத்தார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது

இப்படியெல்லாம் திட்டமிட்டு இந்திய வரலாற்றை மறைத்த சக்தி எது? இந்தியரின் உண்மையான போர்குணமும் வீரமும் யாரால் எதற்காக மறைக்கபட்டது? இதனால் அவர்கள் பெற்ற
ஆதாயம் என்ன? எதற்காக இப்பெரும் கொடுமையினை செய்தார்கள் என எண்ணும் பொழுது ஆத்திரமே மிஞ்சுகின்றது

ஆம், ராணி நாயகி தேவியின் வரலாறு அப்படி. அந்த வீர பெண்புலியின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு

ஒரு வீரபெண்மணி இந்தியாவில் இருந்திருக்கின்றார், அதுவும் 1170ம் ஆண்டே இந்தியாவின்
அன்றைய குஜராத் பகுதியான சோலங்கி பகுதியில் ஆட்சி செய்திருக்கின்றார்

கோரி இந்தியா வந்து பிரித்விராஜனை வென்று டெல்லியில் தன் ஆட்சியினை அமைத்தான் என்பதுதான் வரலாறு, பிரித்விராஜன் அவனுடன் செய்த வீர யுத்தம் மகத்தானது கண் இழந்த நிலையிலும் அவன் காட்டிய வீரம் வரலாற்றில் நிற்கின்றது
Read 22 tweets
22 Sep
இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் இந்தியர்கள் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றனர், அது கொரோனா தடுப்பூசி பற்றியது

உலக சுகாதார நிறுவணம் அங்கீகரிக்கபட்ட மருந்துகளை செலுத்தினால் மட்டும் அந்நியருக்கு அனுமதி என ஒவ்வொரு நாடும் மெல்ல கதவுகளை திறக்கின்றது
மிக மிக மட்டுபடுத்தபட்ட மிக கண்டிப்புடன் திறக்கபடும் கதவுக்கு பின்னால் மிகபெரிய சோதனை நடக்கின்றது, அவர்கள் கட்டாயம் அங்கீகரிக்கபட்ட தடுப்பூசியினை செலுத்தியிருக்க வேண்டும்

இதுவரை பைசர், அஸ்ட்ரா செனிக்கா, சைனோவிக், சைனோபார்ம், ஸ்புட்னிக், மடோனா, கோவாக்சின், கொவிஷீல்டு என
சில ஊசிகளே பாவனையில் உள்ளன‌

இதில் சில நாடுகள் இந்தியாவின் கோவாக்ஸின் அங்கீகரிக்கபடவில்லை, கோவிஷீல்டை நம்பமுடியாது என இந்தியாவினை சீண்டுகின்றன‌

இந்தியாவின் கோவாக்ஸினும், கோவிஷீல்டும் இந்தியாவில் தயாராகி உலக அங்கீகாரம் பெற்று பல நாடுகளுக்கு உலக அனுமதியுடன் ஏற்றுமதியாகுபவை,
Read 5 tweets
22 Sep
வீர சிவாஜி எங்கோ வாழ்ந்த மராட்டியன் என சில திராவிட குரல்கள் ஆங்காங்கே கேட்கின்றன, அவர்களுக்கு மராட்டியத்தை தாண்டி பல்லாயிரம் கல் தொலைவில் இருக்கும் இத்தாலிதான் உறவு, வாடிகனோ இல்லை இத்தாலியின் சோனியாவோதான் அவர்களுக்கு நட்பும் உறவும்

வீரசிவாஜி என்பது இங்கு ஆழபதிந்த அடையாளம்,
இந்துக்களின் எழுச்சி நாயகனாக தேசமெங்கும் கொண்டாடபட்ட அந்த இந்து திருமகன் இங்கும் கொண்டாடபட்டான்

16ம் நூற்றாண்டில் நாயக்கர்களுக்குள் பிளவுவந்து வலுவிழந்து தஞ்சை நாயக்கர் மதுரை நாயக்கர் என அந்த அரசு பிளவுற்ற வேளை, அதில் பிஜப்பூர் சுல்தானோ இல்லை மொகலாயரோ தலையிடும் ஆபத்து வந்தபொழுது
அவனின் மராட்டிய பிரதிநிதிதான் தஞ்சையினை காத்தார்

16ம் நூற்றாண்டில் அவன் மொகலாயரை அடிக்க தொடங்கியது முதல் செஞ்சிகோட்டை வரை கைபற்றிய காலம் தொடங்கி சுதந்திர போராட்ட காலம் வரை அவன் பெயர் இங்கு கொண்டாடபட்டது

கும்பி பாட்டு, நாடகம்,பாடல் என வீரசிவாஜி இங்கு நிலைத்தான்.
Read 11 tweets
22 Sep
சென்னையில் போதைபொருள் கைது, ஐ.எஸ் இயக்கத்தில் தமிழர்கள், தமிழகத்தில் மிகபெரிய அளவில் தீவிரவாதிகளும் தேசவிரோதிகளும் கைகோர்ப்பு எனும் நிலையில் ஆளுநரை சந்தித்திருக்கின்றார் டி.ஜி.பி சைலேந்திர பாபு

இது தமிழ்நாட்டுக்கு புதிது மகா புதிது
பொதுவாக கவர்ணர்கள் மாநிலத்தில் ஏதும் அச்சுறுத்தல் என்றால் மாநில முதல்வர்களையும் அவரோடு மாநில உள்துறை அமைச்சர்களையுமே சந்திப்பார்கள்

ஆனால் தமிழக ஆளுநராக ரவி பதவியேற்ற பின் தன் முதல் அரசியல் சந்திப்பாக டிஜிபியினை சந்திக்கின்றார் என்றால் அதன் பொருள் என்ன?
அந்த பொருளை உணர்ந்த தமிழக உபிக்கள் புளியமரத்தில் கட்டபொம்மன் போல் தொங்குவது உறுதி, விஷயம் அவர்களுக்கு அவ்வளவு அவமானமானது.

இனி பாருங்கள், "ஏ சைலேந்திரபாவுவே பெரியாரால் படித்து, கலைஞரால் காவல்துறைக்கு வந்து தளபதியால் பதவிபெற்ற உனக்கு நன்றி இல்லையா, மானமில்லையா" என ஆங்காங்கே
Read 4 tweets
22 Sep
குஜராத்தில் ஆப்கானிய போதை பொருள் சிக்கியது தொடர்பாக ஆந்திராவிலும், தமிழகத்தின் சென்னையிலும் பலர் கைதுசெய்யபட்டிருக்கின்றனர், மத்திய காவல்துறையின் வேட்டை தீவிரமாகின்றது

போதைபொருள் என்பது ஏதோ சிலரின் போதைக்கு பலர் கடத்தலில் ஈடுபட்டு பெரும் பணம் சம்பாதிக்கின்றனர் என்பது மட்டுமல்ல
விஷயம். இந்த கடத்தலில் புழங்கும் பெரும் பணம்தான் தேசவிரோதம், குண்டுவெடிப்பு, தீவிரவாத செயலுக்கான மூலம், தேசவிரோத சக்திகளுக்கு அள்ளி வழங்கும் நிதி என காரணமாகின்றது

எந்த தீவிரவாத இயக்கமும், தேசவிரோத இயக்கமும் வளர கொள்கை கூட இரண்டாவதே, பணம் ஒன்றுதான் மூலம்
இந்த போதை பணம் என்பது பெரும் பணம் கொட்டும் விஷயம், நினைத்து பார்க்கமுடியாத பெரும் பணம். இதனாலே பெரும்பாலான இயங்கங்கள் தங்கள் நிதியினை போதை கடத்தல் மூலமாக செய்கின்றன‌

உலகளாவிய கொடும் தீவிரவாதிகளால் சட்டபடி பணத்தை இன்னொரு நாட்டுக்குள் அனுப்பமுடியாது, இதனால் தங்கம் போதைபொருள்
Read 13 tweets
21 Sep
குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 19ஆயிரம் கோடிக்கு மேலான மதிப்பு கொண்ட 3 டன் போதைபொருள் பிடிபட்டிருப்பது பெருங்கவலையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியிருக்கின்றது

இந்த துறைமுகம் அதானியால் நிர்வகிக்கபடும் துறைமுகம், அவர்கள் நிறுவணம் நாடெங்கும் 12 துறைமுகங்களை முறையான Image
ஒப்பந்தம் பெற்று நிர்வகிக்கின்றது,அதில் ஒன்றான இந்த முந்த்ரா துறைமுகத்தில்தான் இந்த சரக்கு சிக்கியுள்ளது

இந்தியாவில் மிகபெரிய அளவில் போதை சரக்கு பிடிபடுவது இது முதல் தடவை

விசாரணையில் ஆப்கனில் இருந்து சரக்கு அனுப்பபட்டிருப்பதும் இந்தியாவின் போலி முகவரியில் சில வணிக பொருட்களுடன்
இது கலந்து அனுப்பபட்டிருப்பதும் கண்டறியபட்டிருக்கின்றது

இந்திய அரசு முழு வீச்சில் விசாரணையில் இறங்கியுள்ளது

மேற்கே லட்சதீவு பிரபல கடத்தல் கேந்திரமாக விளங்கிய நிலையில் இந்திய அரசின் நடவடிக்கையில் அங்கு ஓரளவு கடத்தல் தடுக்கபட்ட நிலையில் இது இப்பொழுது ஏற்படுத்தபட்ட புது பாதையா
Read 6 tweets
21 Sep
முக ஸ்டாலினார் @mkstalin
நடைபயிற்சி செய்யும் பொழுது பொதுமக்களெல்லாம் ஓடிவந்து உங்கள் இளமையின் ரகசியம் என்ன? என்ன? என்ன? என மிக வியப்பாக கேட்டுகொண்டே இருக்கின்றார்களாம்

இந்த வயதில் அல்ல, இன்னும் 100 வருடம் ஆனாலும் ஸ்டாலினார் இப்படித்தான் இருப்பார்
அவரின் தலைமுடியும், மீசையும் நரைக்கபோவதே இல்லை என்பது வேறு விஷயம்

தன் இளமைக்கு காரணம் எது என மக்கள் கேட்டதற்கு ஸ்டாலின் தன் பகுத்தறிவில் அவர்கள் அறியாமை போக்க "இது விக், இதற்கு வயதே கிடையாது" என விளக்கி சொல்லி அவர்கள் அறியாமை இருள் அகற்றி அறிவுஜோதியினை ஏற்றியிருக்கலாம்,
ஆனால் ஏனோ செய்யவில்லை

இன்னும் சில பொதுமக்கள் அவரிடம் உங்கள் ஆட்சியில் நாங்கள் பாதுகாப்பாய் இருக்கின்றோம் என மகிழ்ந்திருக்கின்றார்களாம்.

"உங்கள் ஆட்சியில் மகிழ்ச்சி" என அவர்கள் "வாக்கிங்" சமயத்தில் கேட்டதன் உள்நோக்கம் அறியாத,
Read 4 tweets
21 Sep
ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா அணுசக்தி நீர்மூழ்கியும் ஏவுகனைகளும் கொடுப்பது கிழக்காசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது

ஆஸ்திரேலியாவுடன் பொருந்தாத நியூசிலாந்தும் இதை கண்டிக்கின்றது

ஏற்கனவே சீனா கொதித்து கொண்டிருந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட வடகொரியாவினை
காணவில்லை, ஏவுகனை ஏவிய களைப்பில் உறங்கிய அவர்களை சீனா எழுப்பி விஷயத்தை சொல்லியிருக்கும் போல "டேய் என்னடா நடக்குது இங்க" என களத்துக்கு வந்துவிட்டார்கள்

"எங்க கையில அணுகுண்டு ராக்கெட்டெல்லாம் இருக்ககூடாதாம், ஆனா ஆஸ்திரேலியாகிட்ட இருக்கலாமாம், இதென்டா உலக சமூக நீதி?
எல்லார் கையிலேயும் எல்லாமும் இருக்கணும் அதுதான் சமூக நீதி, செய்றேன் பார் அணுகுண்டு டேய்ய்ய்ய்" என வழக்கமாக மிரட்டிவிட்டு அடுத்த காமெடியும் செய்திருகின்றது

"அங்க பாரு அவனுக கூட்டணியில பிரான்ஸ்காரன் அழுதுட்டு இருக்கான், டேய் பிரான்ஸ் நீ குட் பாய்,
Read 7 tweets
21 Sep
தாலிபன்களின் அடாவடி இப்பொழுது உலக காமெடியாகி கொண்டிருக்கின்றது, அதாவது ஒரு நாட்டின் விவகாரம் அந்த நாட்டில் மட்டும் முடிவதல்ல‌

ஒரு நாடு என்றால் அவர்களுக்கு உலகெல்லாம் தூதரகம் உண்டு, அதற்கு வாடகை, ஊழியர் சம்பளம், தூதர் என ஏகபட்ட விஷயங்கள் உண்டு
தாலிபன்கள் ஆப்கனில் அடாவடியாக ஆட்சியில் அமர்ந்தாலும் உலகம் ஒப்பவில்லை, முன்பு இலங்கையில் சில பகுதியினை பிரபாகரன் பிடித்துவைத்து "இது ஈழம்" என்ற பொழுது உலக நாடுகள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை அல்லவா? அப்படி தாலிபன்களையும் யாரும் அங்கீகரிக்கவில்லை

இதில் பழைய அரசின் சார்பில் இயங்கிய
ஆப்கானிய வெளிநாட்டு தூதரகங்கள் தொடர்ந்து இயங்குகின்றன, தாலிபன்களுக்கு அவை கட்டுபட்டதாக தெரியவில்லை

அவைகளுக்கு நிதி யார் வழங்குகின்றார்கள் என தெரியா நிலையில் அவை ஆப்கானிய விசா, பாஸ்போர்ட் என பிசியாக இருப்பதுதான் வினோதம், இரு ஆப்கானிஸ்தான் உலகில் உண்டோ என பல நாடுகள்
Read 9 tweets
21 Sep
டேய் நீ எல்லாம் உள்ளாட்சி தேர்தல்ல வேட்பாளரா?

ஆமா, எனக்கும் 4 ஆளு இருக்குன்னு ஊருக்குள்ள காட்டணுமா வேண்டாமா?

சரி, காசு யார் செலவழிப்பா?

உள்ளாட்சின்னா என்னென்னு நினைக்குற?

தெரியலப்பா சொல்லு?

ஊருக்கு நாலு அனாவசியமான‌ கட்டடம், அங்கங்க வாட்டர் டாங்க்,ரோடு இப்படி கட்டமா கட்டுறது,
குழாய் போட்டு குடிநீர் கொடுக்குறதுதான் உள்ளாட்சி, இப்பெல்லாம் ஜேசிபி மெஷின்காரனும் அவசியம்

சரி இதுனால?

அதுனால சிமென்ட், கம்பி கடை வச்சிருக்கவன், செங்கல் சூளை முதலாளி, குவாரி ஓணர் இவங்ககிட்டெல்லாம் வசூல் பண்ணா போதும் காசு வந்திரும், அப்புறமா ஜெயிச்சி இவங்ககிட்ட செங்கல் சிமென்ட்
எல்லாம் வாங்கி அப்படியே அரசு பணம் இதுல கமிஷன்னு சம்பாதிச்சிரலாம்

ஓஹோ

உனக்கு ஒரு மண்ணும் தெரியாது, மெம்பராயிட்டோம்னா பிரசிடண்டுகிட்ட இருந்து அமவுண்ட், கவுண்சிலராயிட்டோம்னா சேர்மன் கிட்ட இருந்து அமவுண்ட், அப்புறம் கிராமத்துல எல்லாத்துக்கும் வசூல்,
Read 7 tweets
21 Sep
வடக்கே மோதிலால் நேரு,தெற்கே அண்ணாமலை செட்டியார்,சென்னையின் நல்லம்பெருமாள் செட்டி போன்ற தனவான்களை போல் ஒருவர் தமிழகத்தில் கொடிகட்டி பறந்திருகின்றார்

ஆனால் வரலாறு அவரை மறைத்திருக்கின்றது

ஆம்,அவர் தன் மகனுக்கு 1 வயதில் ரோல்ராய்ஸ் கார் கொடுத்திருக்கின்றார்,7ம் வகுப்பில் பென்ஸ் கார் Image
கொடுத்திருக்கின்றார், இன்னும் என்னவெல்லாமோ கொடுத்திருப்பார் போல் தெரிகின்றது

ஆம், அந்த தனவானின் மகனே இப்பொழுது லஞ்ச ஒழிப்பு அல்லது ஒளிப்பு துறையினரால் வளைக்கபட்டுள்ள முன்னாள் அமைச்சர் வீரமணி

அவரிடம் விசாரிக்க விசாரிக்க கிட்டதட்ட டாடா, அம்பானி அளவுக்கு ஒரு தனவான் தமிழகத்தில்
இருந்ததையும், அவர் தன் செல்ல மகனை ஐதரபாத் நிஜாமின் வாரிசு போல் வளர்த்ததையும் நினைத்து கண்கலங்கி நிற்கின்றது லஞ்ச ஒழிப்புதுறை

இப்பொழுது அந்த தனவான் தன் மகனுக்கு தொடக்க பள்ளி செல்ல ரோல்ஸ் ராய்ஸ் காரும், நடுநிலை பள்ளிக்கு செல்ல பென்ஸ் காரும் கொடுத்ததுதான் வெளிவந்திருக்கின்றது
Read 6 tweets
21 Sep
மேற்காசியாவில் மத்திய தரைகடலை தொட்டு நிற்கும் நாடு லெபனான்,இட‌ப்பக்கம் சிரியா கீழ்பக்கம் இஸ்ரேல் வடக்கே துருக்கி என சூழந்த நாடு அது

மேற்காசியாவின் அழகான நாடுகளில் அதுவும் ஒன்று,ஆனால் பெட்ரோல் வளம் இல்லை

நாட்டில் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் பாதிக்கு பாதி இருக்கும் நிலையில் ,
அந்த இஸ்லாமியரில் பெரும்பாலானோர் ஷியாக்களாக இருக்கும் நிலையில் ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லா இயக்கம் மிக வலுவாக காலூன்றிவிட்டது

லெபனான் அரசிலோ இல்லை அரச விவகாரங்களிலோ தலையிடாமல் ஆனால் லெபனானில் வெளிநாட்டு ராணுவம் பெரிதளவில் கால்பதிக்கவிடாமல் பார்த்து கொண்டு
இஸ்ரேலை அடிக்கடி தாக்குவார்கள்

லெபனான் அமைதியாகவே இருக்க கூடாது என மனமார நினைக்கும் இஸ்ரேலும் "தேங்க்ஸ் ஹிஸ்புல்லா" என லெபனானை அடித்து துவைக்கும்

அந்த ஹெஸ்புல்லா ஒரு எமபாதக அமைப்பு, இன்றுவரை அமெரிக்க விமான கடத்தல் முதல் அமெரிக்க ராணுவத்தை லெபனானில் இருந்து விரட்டிவிட்டது வரை
Read 7 tweets
21 Sep
இந்தவாரம் அதாவது செப்டம்பர் 24ம் தேதி குவாட் நாடுகளுக்கான மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு செல்கின்றார் மோடி

அங்கே ஜப்பான் பிரதமர், ஆஸ்திரேலிய பிரதமரை சந்திக்கின்றார்

அப்படியே அமெரிக்க அதிபர் பிடனுடன் தனிபட்ட சந்திப்பினை மேற்கொள்கின்றார் மோடி,
ஆப்கன் நிலை சீன முறுகல் என பல விஷயங்களை அவர்கள் விவாதிப்பார்கள் என செய்திகள் வருகின்றன‌

மோடியின் அமெரிக்க பயணம் பாகிஸ்தானின் வயிற்றெறிச்சலை அதிகபடுத்தியுள்ளது , அவர்களை தேற்றி கொண்டிருக்கின்றது சீனா

முன்பு பிடன் அமெரிக்க துணை அதிபராக இருந்தபொழுது
பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டினார், அவருக்கு "ஹிலால் இ பாகிஸ்தான்" அதாவது நம்ம ஊர் பத்மபூஷனுக்கு இணையான பாகிஸ்தான் விருதான "பாகிஸ்தானின் பிறைநிலா" விருதையெல்லாம் கொடுத்தது பாகிஸ்தான்

அந்த பிடன் இப்பொழுது பாகிஸ்தான் உறவே வேண்டாம் என ஒதுக்கிவிட்ட நிலையில் , நிலவு வளராமல் தேய்ந்து
Read 4 tweets
21 Sep
தமிழக ஒன்றிய அரசு பாரதிக்கும், வ.உ.சிக்கும் பெரும் விழா நடத்தியது நல்ல விஷயம், பாரதியின் படைப்புக்களும், வ.உ.சியின் நூல்களும் ஏன் அவர்கள் வீடும் அடையாளங்களும் நாட்டுடமையாக்கபட்டுள்ளதும் நல்ல விஷயம்

பாரதி எழுதிய எழுத்துக்களும், வ.உ.சியின் நூல்களும் இன்றும் அரசால்
மக்களுக்கு இலவசமாக படிக்கும் அளவு வழிவகை செய்யபட்டுள்ளது

அப்படியே தமிழக‌ ஒன்றிய அரசு ஈரோட்டு ராம்சாமிக்கும் அண்ணாதுரைக்கும் விழா எடுக்கின்றது நல்லது

ஆனால் ஈரோட்டு ராம்சாமியின் படைப்புக்களை ஏன் இந்த அரசு நாட்டுடமையாக்கவில்லை என்பதும்,
அண்ணாதுரை எழுதிய புகழ்பெற்ற நூலான "கம்பரசம்" போன்றவற்றை ஏன் வெளியிடவில்லை என்பதுதான் தெரியவில்லை

ஆக பாரதியின் படைப்புகளை, வ.உ.சியின் வரலாற்றை மக்கள் இலவசமாக படிக்கலாம், ஆனால் ராம்சாமியின் படைப்புக்களை காசு கொடுத்துத்தான் படிக்க வேண்டும்
Read 6 tweets