Ramakrishnan T Profile picture
Journalist, Chennai. Views are my own. #Identitypolitics #Indianpolitics #SriLankapolitics #water #energy #environment #culture

Jan 15, 2020, 9 tweets

#காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு பலமில்லை என #திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான #துரைமுருகன் இன்று கூறியிருக்கிறார்.கடந்த 10 வருடங்களில் காங்கிரஸ் இரண்டு முறை தனியாக போட்டியிட்டது. முதலில், அக்டோபர் 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களிலும் 1/9

இரண்டாவதாக, ஏப்ரல்-மே 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் தன்னுடைய நீண்ட நாள் தோழமை கட்சியான திமுகவின் ஆதரவில்லாமல் போட்டியிட்டது. கே. வி. தங்கபாலு காங்கிரஸ் தலைவராக இருந்த சமயத்தில்தான் உள்ளாட்சி மன்றத்தேர்தல்கள் நடைபெற்றன. ஐந்தாறு மாதங்களுக்கு முன், நடைபெற்ற 2/9

சட்டமன்ற தேர்தல்களில், திமுக-காங்கிரஸ்-பாமக-விசிக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருத்தது. 2ஜி வழக்கில் திமுக எம்.பி.க்களான ஆ. ராசாவும் கனிமொழியும் கைதாகி சிறையில் இருந்த சமயமும் கூட. இந்நிகழ்வுகளினாலும்கூட, திமுகவும் காங்கிரஸும் உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் 3/9

தனித்தனியாக போட்டியிட்டன. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது, பத்தாண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் மீது மக்களின் கடுங்கோபம் இருந்தது. கட்சியிலிருந்த பெருந்தலைகளில் பெரும்பாலோனோர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய காலக்கட்டம் அது. சோனியாகாந்தி 4/9

கன்னியாகுமரியில் தவிர எங்கேயும் பிரச்சாரம் செய்யவில்லை. உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில், ஊரகமன்றங்களில் 5.56 சதவீத இடங்களையும் நகரமன்றங்களில் 4.42 சதவீத இடங்களையும் காங்கிரஸ் வென்றது. மொத்தமாக, 5.54 சதவீத இடங்களில் – 753 இடங்களை - அக்கட்சி வெற்றி பெற்றது. 5/9

அஇஅதிமுக, திமுக மற்றும் தேமுதிகவிற்குப் பிறகு, காங்கிரஸ் நான்காவது இடத்தை பெற்றது. நேரடி முறையின் மூலம் நடைபெற்ற தேர்தல் முறையில், 26 பேரூராட்சிகளில் தலைவர் பதவியை அக்கட்சி வென்றது. நாடாளுமன்ற தேர்தலில், எதிர்பார்த்ததுபோல, காங்கிரஸ் 39 இடங்களிலும் தோற்றது. எங்கேயும் 6/9

டெபாசிட் வாங்கவில்லை. சுமார் 17.5 லட்ச வாக்குகளையும் 4.3 சதவீதத்தையும் அக்கட்சி பெற்றது. ஒரே ஒர் இடத்தில் – கன்னியாகுமரியில் – அது சுமார் 2.45 லட்ச வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் வந்தது. மற்றொரு தொகுதியில் – சிவகங்கை –ஒரு லட்சத்திற்கு மேலாக வாக்குகளை பெற்றது. 7/9

ஏழு இடங்களில் 50,000-க்கு மேலாக வாக்குகளை பெற்றிருந்தது. அவற்றில் ஐந்து இடங்கள் தென் மாவட்டங்களில் உள்ளன. மற்ற இரண்டு இடங்கள் - கோவை மற்றும் மயிலாடுதுறை. 8/9

இதுதான் காங்கிரஸின் பலம். கடந்த ஐந்தாறு வருடங்களில், காங்கிரஸ் தனது வலிமையை இழந்திருக்கிறதா இழக்கவில்லையா என்பது, குறைந்தபட்சம் நகரமன்றங்களுக்கு நடைபெறப்போகும் தேர்தல்களில், அக்கட்சி தனியாக நிற்கும் பட்சத்தில் தெரிந்துவிடும். 9/9

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling