Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture
Poet, Author, Writer, Samskritam Teacher, Temple Architecture and Cultural Science Researcher, and a Proud SANADHANA BHARATHY... MODI KA PARIWAR👍

Jun 5, 2020, 36 tweets

🌺Bharatha Varsham and Sanadhan Dharmam🌺

#BharathVruksh

🌱வைஷ்யர்களுக்கான படிப்பும் வாழ்வும் (வைஷ்ய தர்மம்)🌱

வைஷ்யர்கள் வாழ்க்கை முறை சற்று அழகானது. சிறு வயதில் எல்லோருடனும் பால பாடம். அதிலும் இவர்களுக்கு நித்ய கர்மா என்பது, காலை மற்றும் மாலை இறைவனை வணங்குதல்.

பின்னர் காலையில் சிறிதே ஆகாரம். ஏனெனில் இவர்கள் செயல்முறையை விட, கற்பதற்கு அதிகம் ஆரம்பத்தில் உண்டு. அதனால், கற்கையில் ஆசுவாசம் ஏற்பட்டுவிடக் கூடாது.

இவர்கள் பொதுவாக முக்கியமாகக் கற்க வேண்டியது, வேளாண்மை மற்றும் அதன் நுணுக்கங்கள், வர்த்தகம், பொருளாதாரம், நிலவியல், வானிலை,

ஜோதிடம், பூகோள வரைமுறைகள், பிற தேசத்தவர்களது ராஜ்ய சட்டங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், தேசங்களுக்கு இடைப்பட்ட தூரம் மற்றும் அவற்றைக் கடக்க ஆகும் காலம், எந்த இடங்களை எந்த வாகனங்கள் மூலம் கடக்க வேண்டும் என்ற தெளிவு, பொருளாதாரத்தில் அன்றாட நிலை மாற்றம், பிற தேசங்களின்

விளைபொருட்கள், அவர்களின் அத்யாவஸ்ய மற்றும் இயல்புத் தேவைகள், அவர்கள் ஆர்வம் கொண்ட பொருட்கள், அதன் செய்முறைகள், அவற்றின் தரம் காணல், பேச்சில் சாதுர்யம், வர்த்தகத்துக்குத் தேவையான செயல்பாட்டில் புத்தி கூர்மை, இயந்திரவியல், வேதியியல், மருத்துவத்தில் நல்ல தேர்ச்சி, அன்றாடத் தேவைகள்

எதுவாகினும் அவற்றின் செய்முறை ஆகிய அனைத்தும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றைப் படிப்பதோடு மட்டும் அல்லாமல், நடைமுறைப் பயிற்சி இவர்களுக்கு அவஸ்யமான ஒன்று.

🌱வைஷ்ய தர்மம்🌱

இவர்கள் வேளாண்மை செய்வதோடு, பிற தேசங்களுக்கும் வர்த்தகங்களுக்குச் செல்ல வேண்டி இருப்பதால்,

இவர்கள் சில நேரங்களில் அதிகமான மாதங்களோ அல்லது சில வருடங்களோ கூட பிற இடத்தில் இருந்து வியாபாரம் செய்வார்கள்.

அதனால், இவர்களுக்கு ஒன்றைத் தாண்டி மனைவிகள் வைத்துக் கொள்ள இயலும். ஆனால் திரும்புகையில், அவர்களும் வருவார்கள். முக்கியமாக இவர்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழ வேண்டும்.

இவர்கள் தங்களை அழகாக அலங்கரித்துக் கொள்ளலாம். அதற்கான எந்த திரவியங்களும், ஆடைகளும் உபயோகிக்கலாம். நல் ஆபரணங்கள் அணிந்து கொள்ளலாம்.

இசை, பாடல், நடணம் போன்றவற்றைக் கொண்டு பொழுது போக்கலாம். ஆனால் என்ன ஆனாலும், தனது தாய்நாட்டின் அரசியல் சட்டதிட்டங்களைப் பின்பற்றியே

எங்கும் வாழ வேண்டும். இவர்கள் பொதுவாக, பருத்தி ஆடை தான் அணிய வேண்டும். அதுவே, உடல் சூட்டைத் தனிக்கும், வியர்வை உறிஞ்சும்.

இவர்கள் இடைக்கு ஒரு ஆடை, அங்கத்திற்கு ஒரு ஆடை என எதை வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானாலும் தைத்து அணியலாம். இவர்களுக்குப் பெரியதாகக் கடினமான

வாழ்வியல் தர்மம் ஏதும் இல்லை. ஆனால், எங்கே செல்வதாக இருந்தாலும், மன்னனிடம் எதற்காக எங்கு செல்கிறோம், என்னென்ன கொண்டு செல்கிறோம், எவ்வளவு எடுத்துப் போகிறோம், யார் தலைமையில் போகிறோம், சென்று வர ஆகக் கூடிய காலக் கணக்கு, எடுத்துச் செல்லும் பொருட்களின் மதிப்பு, விற்பனை மதிப்பு,

என்னென்ன திரும்பி வாங்கி வர இருக்கிறோம், அதன் மதிப்பு, அதற்கு இவர்கள் தரவிருக்கும் தனம்/தாண்யத்தின் அளவு போன்ற எல்லா விபரங்களையும் மன்னனிடம் முன்கூட்டியே ஸமர்ப்பித்துவிட வேண்டும்.

மன்னன் அவற்றை ஆய்ந்து திருத்தங்கள் சொன்னால் அவற்றை ஏற்று, அவரின் கட்டளைக்கேற்பவே கிளம்பமுடியும்.

தனது இஷ்டத்திற்கு போக இயலாது.

Indian clothing system – ancient damaged sculpture.

அதே போல் திரும்பி வந்ததும், முதலில் மன்னனிடம் அனைத்தும் ஒப்படைக்க வேண்டும். பிறகு மன்னன் அவற்றில் இருந்து அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கிவிட்டு, பிறவற்றை நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக ஒதுக்கி வைப்பான்.

Vaishya enjoying song and dance – Ancient sculpture in Museum.

அவன் அளிப்பது, மீண்டும் ஒரு வைஷ்யன் மறுமுறை பயணம் கிளம்பும் வரை போதுமானதாக இருக்கும்.

இதனிடையே ஏதேனும் தேவை என்றால், இவர்களுக்கு கண்டிப்பாக அதை மன்னன் வழங்கியே தீர வேண்டும். அதனால், குடும்பமும் கஷ்டம் இன்றிப் போனது. இவர்களது வாழ்வு, உழைப்பு அதிகம் இருந்தாலும்,

ஒருவித உல்லாசமான வாழ்க்கை தான். இவர்கள் கற்றவரை, இவர்களுக்கு வானிபமும், வாழ்க்கையுமே முக்கியம்.

இவர்கள் க்ஷத்ரியர்கள் போல யுத்த தர்மம், அதன் முறைகள், போர்க்கலை போன்றவை அறிய மாட்டார்கள். இவர்களுக்குத் தற்காப்புக் கலை மட்டும் பயிற்றுவிக்கப் பட்டிருக்கும்.

அதற்கான ஆயுதங்களுக்கு மட்டும் அநுமதி வழங்கப் பட்டிருக்கும். மற்றபடி, க்ஷத்ரியன் போன்றோ, ப்ராமணன் போன்றோ, கஷ்டமான வாழ்க்கை முறையும் இல்லை, அதற்கான படிப்பும் தேவை இல்லை.

ஆனால், இவர்கள் மூலமாகத்தான் ஒரு மன்னன் பிற தேச நிகழ்வுகள் அனைத்தும் அறிந்து கொள்ள முடியும் என்பதால்,

இவர்களுக்கு அரசர் அவையிலும் நல்ல கௌரவம் இருந்தது. மற்றபடி மிகுந்த கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையே இவர்களுக்கு தர்மமாக வழங்கப் பட்டது.

ஏனெனில் இவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறை, காரியம் முடிந்த பின், தான் வேண்டும் வரை, தன்போக்கில் வாழும்படியான உல்லாசத்துடன் கூடியது....

🌱ஸூத்ரர்களுக்கான படிப்பும் வாழ்வும் (ஸூத்ர தர்மம்)🌱

ஸூத்ரர்கள் வாழ்க்கை முற்றிலும் வித்யாஸமானது. இவர்களுக்கும் பால பாடம் குருகுலத்தில் உண்டு. இவர்களுக்கு, காலை நீராடிய பிறகும், மாலை நீராடிய பிறகும் ஸூர்யனை வணங்குதலும், குருவை வணங்குதலும் மட்டுமே இருந்தது.

இவர்கள் அதிகம் உடலுழைப்பைத் தர வேண்டியவர்கள். ஆதலால், இவர்களுக்கு யோகம் அவஸ்யம். ஆனால், த்யானம் கட்டாயம் இல்லை. விரும்புவோர் செய்யலாம்.

இவர்கள் அனைத்துவித தொழில் நுணுக்கங்களும் கற்க வேண்டும். மருத்துவம், தாவரவியல், வேதியியல், வானியல், வேளாண்மை, இசைக் கருவிகள், போர்க் கருவிகள்,

வேளாண்மைக் கருவிகள், சமூகத்துக்குத் தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் செய்யும் தொழில் நுட்பம், சிகை திருத்தம், துணி நெய்தல், மரம் ஏறுதல், குடில் அமைத்தல், ஆபரணங்கள் செய்தல் என அனைத்துவித தொழில்களின் நுட்பங்களும் கற்றுத் தரப்பட்டது.

இவர்கள் வர்த்தகம், போர் முறை மற்றும் த்யான,

யக்ஞங்கள், தவம் போன்றவற்றைப் பழகவில்லை. இவர்களுக்கு மேற்கண்ட தொழில்கள் போன்றவற்றைப் பற்றிய முழு அறிவும் உண்டு.

மேலும், அவற்றின் தயாரிப்பு முறைகளை முழுமையாக அறிந்தவர்கள், ப்ராமணர்களுக்கு அடுத்து ஸூத்ரர்கள் ஒருவரே. இவற்றிற்கான தொழில்நுணுக்க ஸூத்ரங்களைக் கற்க வேண்டி இருந்ததால்,

இவர்களும் ஸமஸ்க்ருதம் கற்றனர். இவர்களிலும், சில குறிப்பிட்ட தொழில்களை மட்டும் அதிகம் கற்று, கைதேர்ந்தோர் பிறவற்றைக் கற்பதில் ஆர்வம் காட்டவில்லை.

Skill of Sudhra, beautifully shown in Ancient pottery work

தற்போதைய நிலைப்படி சொல்ல வேண்டும் என்றால், உதாரணத்திற்கு : மருத்துவம் என்ற ஒரே பிரிவில் பொதுநலம், நரம்பு, உளவியல், எலும்பு, கண், காது, தொண்டை, பேச்சு, பல், தோல், இருதயம், நுரையீரல், வயிற்றுப் பகுதி, கர்பப்பை மற்றும் உயிர்வழி, சிறுநீரகம் மற்றும் மலக்குடல்,

இவற்றின் படிப்பு, இவற்றின் அறுவை சிகிச்சை என ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட படிப்பும், அதில் உயர் படிப்பும் உள்ளதல்லவா? அது போலவே அவர்கள் கற்ற விதமும் இருந்தது.

🌱ஸூத்ர தர்மம் 🌱

இவர்களுக்கு தெய்வத்தை வணங்குதல் தாண்டி, ஸ்லோகங்கள் சொல்லுதல், பூஜைகள் செய்தல் போன்றவை

கட்டாயம் ஆக்கப்படவில்லை. ஆனால், விருப்பப்பட்டு கற்பவர்களுக்கு கற்றுக்கொள்ள அனுமதி இருந்தது.

இவர்களால் நித்யகர்மாக்களை அதிக நேரம் செலவு செய்து பண்ண முடியாது. விடியற்காலையிலேயே நீராடி வேலைக்குக் கிளம்பிவிடுவார்கள். அதனால், இவர்களுக்கு பூநூலும் இல்லை. உடல் உழைப்பை அதிகம் தருவதால்,

இவர்களுக்கு உணவில் கட்டுப்பாடு விதிக்கப் படவில்லை. ஆனால், அன்று அசைவம் என்பது அதர்மம் எனக்கூறப்பட்டிருந்தது. அது ஸூத்ரர்களுக்கும் தான்.

குருகுலம் முடிந்த பின்னர், இவர்கள் பொதுவாக வியாபாரிகளிடம் வேலை செய்து, தேவையான தொழிலைச் செய்து பொருளீட்ட வேண்டும்.

மற்றவர் பொருட்களை உற்பத்தி செய்து வியாபாரங்களுக்குத் தந்து பொருளீட்ட வேண்டும். இவர்களுக்கு உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்கப்பட்டது.

இவர்கள் தேசம் தாண்டி வெளியில் செல்லக் கூடாது. இவர்களுக்கும் திருமணத்தில் கட்டுப்பாடுகள் இல்லை. இசை, நாட்டியம், ஓவியம் போன்றவற்றில், இவர்கள் பொழுது

செலவிட அனுமதி இருந்தது. தொழில் சார்ந்த காரணத்திற்காக, அரசன் ஆணையின் பேரிலோ, அல்லது வைஷ்யர்களுடனோ வெளி தேசம் செல்ல அனுமதி உண்டு.

சென்றால், ஏற்ற தொழில் முடியும் வரை அங்கேயே குடும்பத்தாருடன் தங்கும் உரிமையும் இவர்களுக்கு உண்டு. ஆனால், வேலை முடிந்தவுடன் கண்டிப்பாக

சொந்த நாட்டிற்குத் திரும்பிவிட வேண்டும். மற்றபடி இவர்களின் வாழ்க்கை முறை காரணமாக, உணவு, உடை, தொழில், மற்றும் பிறவற்றில் பெரிய அளவிற்கு இவர்களுக்குக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை.

இத்தோடு ஸூத்ர தர்மம் முற்றுப் பெற்றது.

இவை தான் குருகுலத்தில் கற்றுவிக்கப்பட்ட படிப்புகளும் வர்ணாஸ்ரம தர்மமும்.

இவை தாண்டி, பொதுவான தர்மமாக, மூன்று வர்ணத்தாரும் முதல் க்ஷத்ரியனாகிய மன்னன் ஆணைக்குக் கட்டுப்பட வேண்டும், குரு உட்பட...

க்ஷத்ரியர்கள் ஆச்சார்யனைக் கடவுளாக மதிக்க வேண்டும். மேலும், சமூக நலனுக்காக யக்ஞம்,

த்யானம் போன்றவை செய்து, தன்னலமின்றி வாழும் ப்ராமணரைக் கண்டிப்பாக மதிக்க வேண்டும். வைஷ்யர்கள், ஸூத்ரர்களுக்கு; மன்னனும், ப்ராமணனும், கடவுள் ஸ்தானத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள்.

இதில் மற்றொன்று, ப்ராமண, க்ஷத்ரியர்களுக்கு இருந்த வாழ்க்கை முறைக் கட்டுப்பாடுகள்

மற்ற இரு வர்ணத்தாருக்கும் இல்லை. அவர்கள் ஸ்வதந்த்ரமாக வாழும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்ததால், அதுவும் அனுமதிக்கப் பட்டது. ஆதலால், கட்டுப்பாடுகள் அதிகமின்றி சமுதாயத்தில் வாழ முடிந்தது.

எனவே, அவர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வாழும் ப்ராமணர் மீதும்,

தேசத்தைக் காக்கும் க்ஷத்ரியர் மீதும் அதிக மரியாதை கொண்டிருந்தனர். இது இயல்பான ஒன்று.

இதில் ப்ராமணரும், க்ஷத்ரியரும் கூட, இவர்களைப் போலவே கடுமையான தர்ம நியதி இன்றி வாழ்ந்திருக்கலாம் அல்லவா? ஆனால், அவர்கள் சுய கட்டுப்பாட்டுடன், தங்கள் வாழ்வியல் தர்மத்தை மீறாமல் ஏற்று இருந்ததுவே,

பிறருக்கு அவர்களின் மேல் மதிப்பும் மரியாதையும் இருக்கக் காரணம் என்பது புரிகிறதா?

நாமே, ஒரு விஞ்ஞானி, முதல்வர், ப்ரதமர் என்றால் தன்னாலேயே மரியாதை தருகிறோமே… ஏன்? அது போல் தான்.

மற்றபடி, ஆரம்ப காலங்கள் முதல் வர்ணாஸ்ரமப் பிரிவுகளில் எந்தப் பாகுபாடும் இல்லை.

விரும்பிய வர்ணத்தில் யாரும் இருக்கலாம். ஒரே குடும்பத்தில் நான்கு மகன்கள் நான்கு வித வாழ்க்கை வாழலாம்.

இப்படி வாழ்பவர்கள், அவர்கள் தேர்ந்தெடுத்த தர்மத்தை ஒட்டி வாழ்பவர்களோடு இணைந்தனர். இவ்வாறே சமுதாயத்தில் இணைந்திருந்த வர்ணம் என்பது, தனது வசதிக்காகக் குழுவாகப் பிரிந்தது.

இத்துடன் வர்ணாஸ்ரம தர்மத்தின் ஆரம்ப நிலை முற்றுப் பெற்றது.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁

@threader_app pls compile

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling