அவர் - #சீமானாக இருந்தாலும் சரி.
#சைமனாக இருந்தாலும் சரி.
#அப்துலாக இருந்தாலும் சரி.
நாங்கள் அவருடைய #பெயர்_சீமானாக இருக்கிறது என்பதற்காக அவர் பின்னால் நிற்கவில்லை.
அவருடைய #கொள்கைக்காக மட்டுமே அவர் பின்னால் நிற்கின்றோம். +
அந்தக் கொள்கையை விட்டு அவர் #தடம்_புரளும்_பட்சத்தில் நாங்களே #எங்கள்_அண்ணனை - #எதிர்த்து கேள்வி கேட்கும் அளவிற்கு எங்களுக்கு உரிமையைக் கொடுத்திருக்கிறார் எங்கள் #அண்ணன்.
#ஆனால், நீங்கள் உங்கள் கட்சியின் #ஒன்றிய_கவுன்சிலர் கொள்கையை விட்டு தடம் புரண்டாலும் அவரை #எதிர்த்து +
உங்களால் #கேள்வி கேட்க முடியுமா??
அதானே.#கொள்கை என்ற ஒன்று இருந்தால் தானே அதில் இருந்து தடம் புரள முடியும்?? என்று கேள்விகள் இந்நேரம் உங்களுக்குள்ளேயே எழுந்திருக்க வேண்டும்.!
இல்லை #எழுந்திருக்கும்.
அப்படியே அவர் சைமனாக, அப்துலாக இருந்தாலும் #அதைப்பற்றி +
கவலைப்பட வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.
ஏனென்றால் நாங்கள் #சீமான் என்ற #பெயருக்காக அவர் பின்னால் நிற்கவில்லை.
அவருடைய #கொள்கைக்காகத்தான் கூடவே நிற்கின்றோம்.
சரி நீங்கள் சொல்வதைப் போல அவருடைய பெயர் சைமனாக இருக்கும் பட்சத்தில். +
இந்த #டிஜிட்டல்_இந்தியாவும்,
#தேர்தல்_ஆணையமும் - அதை இதுவரையிலும் கண்டுபிடிக்காமல்
#ஹை_கோர்ட்டயா பிடுங்கிக் கொண்டு இருக்கின்றது??
#பற்றாக்குறைக்கு இதில் அவருக்கு பல #கோடிக்கணக்கான_சொத்துக்கள் இருக்கு என்று வேறு கூறுகிறீர்கள்!! +
சரி அப்படியே அவர் தவறான முறையில் பல கோடி சொத்துக்கள் சேர்த்து வைத்திருக்கும் பட்சத்தில் இந்த #டிஜிட்டல்_இந்தியாவின்
#வருமான_வரித்துறை யாருடைய #ஹைகோர்ட்டை பிடுங்கிக் கொண்டு இருக்கிறது.?
#ஆக - எப்போது பார்த்தாலும் சைமன், நாய் டம்ளர், தும்பிகள், ஆமைக்கறி, AK74, அரிசிக்கப்பல், +
வி.லெட்சுமி, இட்லிகறி, இப்படி முட்டாள்தனமாக மட்டுமே எதையாவது உருட்டாமல் - #ஆக்கப்பூர்வமாக, #கருத்தியல் ரீதியாக விமர்சனங்களை முன்வையுங்கள்.!
பதிலளிக்க, ஆரோக்கியமாக விவாதம் செய்ய நாங்கள் தயார்.
பின்குறிப்பு: எங்கள் அண்ணன் பேசுவதால் 10 ஆண்டுகளில் இதுபோன்ற எதையாவது +
ஒரு 4,5 விடயங்களை எடுத்து உருட்டுகிறீர்கள்.!
உங்கள் தலைவரை பேசவே கூடாது. அதிலும் பழமொழி அறவே பேசக் கூடாது. என்று கூப்பில் உட்கார வைத்திருக்கும் "பிரசாந்த் கிஷோரின்" அறிவுரை பற்றியும். அவர் 10 நிமிடம் பேசினாலே 10,000 கண்டண்ட் வழங்கும் நாயகர் என்பதையும் +
நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேற்படி - பொருளாதாரம், படைபலம், வாக்கு சதவீதம் என அனைத்தையும் அதிகம் வைத்திருக்கும் கட்சிகளைக் காட்டிலும் நாம் தமிழர் கட்சியைத்தான் நீங்கள் எதிரியாக நினைக்கிறீர்கள் - இதிலே வெளிப்படையாக தெரிகிறது நீங்கள் யாரைக் கண்டு பயப்படுகிறீர்கள் என்று.! +
*எளிய பிள்ளைகள்,
*பகுதி நேரமாக,
*அங்கும் இங்கும்,
*முறையான கட்டமைப்பின்றி,
*பணபலம் இன்றி,
*அப்பா, மாமா, சித்தப்பா, பெரியப்பா, அண்ணன் தம்பி என் இதுவரை குடும்பத்தில் யாரும் அரசியலில் அல்லாத.
*முதல் தலைமுறையாக.
இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது நல்லது செய்து விட முடியாதா.! +
என அரசியல் செய்ய வந்த எங்களிடம் சரிக்குச் சமமாக நின்று போட்டி போட்டு அரசியல் செய்வது தான் - உங்கள் நிலைப்பாடு என்றால் அதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்.!
"பாதையைத் தேடாதே - உருவாக்கு" என எங்கள் தலைவர் "மேதகு.வே.பிரபாகரன்" அவர்கள் +
தெளிவாக எங்களுக்கு கற்பித்ததோடு மட்டுமல்லாமல் அதை செய்தும் காட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
மேற்குறிப்பிட்ட எதுவுமே இல்லாமலே - "அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும்" - "அதை நிறைவு செய்கிற சேவையும் தான்" என்று உணர்ந்து நாம் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். +
என எங்கள் அண்ணன் சீமான் உணர்த்தியுள்ளார்.
எனவே, நீங்கள் எங்களை எவ்வளவுதான் எதிர்த்தாலும், விமர்சித்தாலும் - கடந்த 10 ஆண்டுகளாக இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் - அதில் முதல் ஆளாக நாம் தமிழர் கட்சியினர் தான் களத்திற்கு வருகிறார்கள் என்பதையும், +
தொடர்ச்சியாக மக்களுக்கான பல நற்பணிகளைச் செய்து வருகிறார்கள் என்பதையும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது - இது சத்தியம்.
கோடிகளில் பணத்தை சேர்த்து வைத்துக்கொண்டு அதை வைத்து "சில லட்சங்களை" செலவு செய்து மக்களுக்கு ஏதோ ஒன்றைச் செய்வதல்ல "புரட்சி"..
வண்டிக்கு சரியாக - எரிபொருள் +
போடக்கூட வசதி இல்லாவிடினும் தன்னால் இயன்றதை கொடுத்து "சில ஆயிரங்களை" ஒன்றுதிரட்டி அதன் மூலம் மக்களுக்கு இயன்றதைக் கொடுத்து பணி செய்வதே இம்மண்ணில் "ஆகச்சிறந்த புரட்சி".!!
நாங்கள் "சத்தியத்தின் பிள்ளைகள்"..
"நல்லது ஒரு நாள் வென்றே தீரும்".. +
"இந்த உலகில் வெல்லமுடியாத படை - என்ற ஒன்றே கிடையாது..!!"💪
*நாங்கள் உறுதியாக வெல்வோம்💪
*அதற்கான காலமும், தூரமும் வெகு தொலைவில் இல்லை.
அதனால், பழைய கதையையே பேசாமல் புதிதாக ஏதாவது முயற்சி செய்யுங்கள் நண்பர்களே.!! வாழ்த்துக்கள் 👍
#நாம்தமிழர்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
