Ramakrishnan T Profile picture
Journalist, Chennai. Views are my own. #Identitypolitics #Indianpolitics #SriLankapolitics #water #energy #environment #culture

Jun 23, 2020, 7 tweets

தந்தையின் நாவலான @ashoka_mitran "மானசரோவர்" நாவலைப் பற்றி குறிப்பிடும் போது கோபாலசாமி என்ற பாத்திரத்திற்கு தன் குழந்தைகளை வளர்த்த விதத்தைப் பற்றிய குற்ற உணர்வு இருந்ததாக கட்டுரைஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். #Tamil #writing 1/7

தன்னுடைய பிள்ளைகளுக்கு அவர்களுடைய சமவயதில் உள்ளோர் அனுபவிக்கும் பல வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற எண்ணம் ஏனோ, தந்தைக்கு பல ஆண்டுகளாக இருந்தது. இதைப் பற்றி கூட, நான் கலந்து கொண்ட, மார்ச் 1998-ல் நடைபெற்ற 2/7

அவருடைய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். அப்போது அவர் பயன்படுத்திய வார்த்தை: "deprivation."
எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஏனெனில் என்னுடைய சகோதரர்களோ நானோ அவர் எங்களை வளர்த்த விதத்தைப் பற்றி 3/7

என்றைக்குமே ஒரு வார்த்தை கூறியது கிடையாது. கூறவேண்டிய தேவையும் எங்களுக்கு எழவில்லை.
உலகறிவைப் பற்றி அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்ட விதமும் சரி, அவ்வறிவை கொடுத்த அளவும்
சரி என்னுடைய நண்பர்கள் யாருக்கும் அம்மாதிரியான அனுபவங்கள் கிடைக்கவில்லை என்றும் 4/7

அவ்வறிவை பெறுவதற்காவது அவர்களெல்லாம் குறைந்தபட்சம் 15 வருடங்களாவது காத்திருக்க வேண்டியதாகிவிட்டது என்பதெல்லாம் எனக்கு தெரியும். அதனால், நான் ஒருவிதமான அகங்காரத்தில் இருந்தேன். வளரந்தேன். அதனாலேயே எனக்கு ஆச்சரியம் பலமடங்காக இருந்தது.
என்னுடைய மகள் பள்ளியில் 5/7

படித்து கொண்டிருந்தபொழுது அவள் எழுத முயற்சித்த
ஒரு படைப்பை (சிறுகதை) சில வருடங்களுக்கு முன், படிக்க நேரிட்டது. அவள் பள்ளி படிப்பு முடித்து ஆறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. சிறுகதையை அவள் முடிக்கவில்லை. ஆங்கிலத்தில் எழுதியிருந்தாள். அக்கதையில் வரும் இளம் பெண்ணின் அப்பா 6/7

மிகவும் "busy"-யான நபர். மகளின் தேவைகள் என்ன என்று கேட்பதற்குகூட நேரமில்லாதவர். என்னைப்பற்றிதான் அவள் எழுதியிருக்கிறாள் என்ற அளவிற்கு தாக்கத்தை உருவாக்கியது அவளுடைய படைப்பு. இதற்கெல்லாம் ஒப்பிடும்போது, தந்தை எந்த குறைவில்லாமல் எங்களை வளர்த்தார். 7/7

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling