#Thread
இந்த காவலர் பெயர் சையது அபுதாஹீர். 23 வயது இளம் காவலரான இவர் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக பதட்டத்துடன் வருபவரை நிறுத்தி விசாரிக்கிறார்.
அதற்கு அந்த நபர் திருச்சி அருகே சிற்றூரில் உள்ள தனது ஏழை கர்ப்பிணி மனைவியை மிகுந்த சிரமத்திற்கிடையில் 7 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
மேலும், தாயும் சேயும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் மருத்துவர் சிகிச்சைக்கு இரத்தம் கேட்டு அதற்காக தான் அலைவதாகவும் காவலரிடம் கூறியுள்ளார். அதைக் கேட்ட காவலர் தானும் அதே வகை இரத்தப்பிரிவு என சொல்லி இரத்தத்தை தானமளிக்கிறார்.
அறுவை சிகிச்சை முடிந்து தாயும் சேயும் நலம் பெறுகிறார்கள். விஷயமறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த காவலரின் சேவையை பாராட்டி ரூ 1,000/- சன்மானம் அளிக்கிறார். மேலும் இதுபற்றி விவரம் அறியும் தமிழக காவல்துறை இயக்குநரும் அவரின் சேவையைப் பாராட்டி ரூ 10,000/- சன்மானம் அளிக்கிறார்.
அந்த ரூ 11,000/- சன்மானத் தொகையை காவலர் முழுவதுமாக ஏழை கர்ப்பிணி பெண்ணின் மருத்துவ செலவிற்கு அளித்து விட்டு எப்போதும் போல் தன் கடமையில் ஈடுபட்டுள்ளார் இந்த காவலர்.
உதவிக்கு பதவி அதிகாரம் முக்கியமல்ல ! மனம் தான் வேண்டும் !!
#RoyalSalute #Shared
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
