நிறைய பேருக்கு இந்த
VR & AR ன்னா என்ன? ங்கற சந்தேகம் +குழப்பம்🤔
முதல்ல இதோட Abbreviation
VR ன்னா Virtual Reality
AR ன்னா Augmented Reality
#VirtualReality ங்கறது கணினி மூலமாக உருவாக்கப்படுற நிஜம் மாதிரியான ஒரு கற்பனை உலகம். நம் கற்பனைகளுக்கு உயிர் கொடுக்கும் ஒரு Technology😳
உதாரணமாக - அமேசான் காட்டுக்குள்ள இருக்குற ஒரு அருவி பக்கம் நீங்க இருந்தா எப்படி இருக்கும் ன்னு நீங்க இந்த VR Technology மூலமா அனுபவிக்கலாம்.🙄
அது சாத்தியமாக்க உங்க கண்ணுல மாட்ட ஒரு VR Glass & காதுக்கு HeadPhone, உங்க பக்கத்துல கணினியோட இணைக்கப்பட்ட Fan or Blower, அப்புறமா
ஒரு Water Sprayer System இருந்தா போதும். நம்ம Feeling Experience அ Improve பண்றதுக்கு இன்னும் நிறைய சாதனங்கள் இருக்கு.
இப்போ நம்ம VR Glass மூலமா அமோசான்காட்டுல இருக்கிற அருவி உங்க கண்களுக்கு 3D ல தெரியும்.Head Phoneல அங்கு உள்ள விலங்குகள்,பறவைகள் மற்றும் அருவி சத்தம் கேட்கும்
இப்போ நீங்க அருவி பக்கத்துல போற மாதிரியான கட்சி வந்தவுடனே, Head Phone la அருவி சத்தம் அதிகமாகி , Fan & Sprayer System மூலமாக உங்க மேல குளிர்ந்த காற்றும், நீரும் தெளிக்கப்படும். நமக்கு நிஜமாகவே காட்டுல அருவி பக்கம் போனா எப்படி இருக்குமோ அந்த Experience கிடைக்கும். இதே மாதிரி VR
மூலமா எண்ணற்ற கற்பனை காட்சிகளை நாம் நிஜம் மாதிரி Experience பண்ண முடியும்.🤗
பாரதி வரிகள்ல சொல்லனும்னா,
"நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ..!
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
வெறும் காட்சிப் பிழைதானோ..!"
90 வருஷம் முன்னமே விளக்கிய மகான் 😂
இந்த VR Technologyல நிறைய Games இருக்கு. அதுக்குன்னு தனித்தனியா நிறைய VR Stations Marketல கிடைக்குது.
#AugmentedReality ங்கறது திரையில் Live ஆ நாம பாக்குற காட்சிகள்ல இன்னோரு பொருளையோ மனிதர்களையோ ( Objects ) நேரலையிலேயே அப்படியே கொண்டுவருவது அல்லது சேர்ப்பது..!😳
உதாரணமாக நம்ம வீட்டு Hall ல பாண்டா கரடி வந்து உட்கார்ந்தா எப்படி இருக்கும், Road ல Dinosaur வந்தா எப்படி இருக்கும் ன்னு இந்த AR Technology மூலமா பார்க்கலாம்.
இதுக்குன்னே நிறைய AR Apps Android & iOS ல கிடைக்குது.
Google கூட இப்போ நிறைய Birds & Animals Search Results ல
இந்த AR வசதிய update பண்ணியிருக்காங்க.
AR எப்படி work பண்ணும்னா இந்த
AR camera App open பண்ணா Normal Camera மாதிரி Screen ல நம்ம முன்னாடி உள்ள காட்சி தெரியும். அதுல நீங்க எந்த Objectஆ கொண்டு வரணும்ன்னு நினைக்கிறீங்களோ அதை Add பண்ணா போதும் அது அந்த கட்சியுடன் சேர்ந்து வந்துடும்.
நம்ம Room Corner ல ஒரு சோஃபா இருந்தா எப்படி இருக்கும் ன்னு இந்த AR மூலமா பார்க்கலாம். 😊
இதையுமே பாரதி Simple வரிகள்ல சொல்லியிருக்காரு
"காலமென்றெ ஒரு நினைவும்
காட்சி என்றே பல நினைவும் கோலமும் பொய்களோ..
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பதன்றோ.." 😂
அவரு மகான்.!🤗
இந்த VR & AR நிறைய Field ல, Application ல பயன்படுது. அது பற்றி சொல்லனும்னா தனி Thread ஏ போடலாம். 😜
In simple words,
VR ங்கறது நிஜம் இல்லாமல் நாம் உணரக்கூடிய ஒரு மாயை மட்டுமே..!😂
AR ங்கறது நாம் பார்க்கக்கூடிய நிஜத்துல புகுத்தப்படும் ஒரு மாயை..!😂
நன்றி மக்களே..!
🙏🙏🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.