Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture
Poet, Author, Writer, Samskritam Teacher, Temple Architecture and Cultural Science Researcher, and a Proud SANADHANA BHARATHY... MODI KA PARIWAR👍

Jul 14, 2020, 58 tweets

🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌱7) பெண்கள் வாழ்க்கை🌱

🌿அருந்ததி🌿

தனது கணவரது குருகுலத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு, குருபத்தினி தாயாகவே விளங்கினாள் என்பதற்கு அருந்ததி தேவி உதாரணமாகத் திகழ்ந்தார்.

அவரது அரவணைப்பினால் தான் அங்கு பயின்ற ராஜகுமாரர்கள் எவரும் மனை பிரிந்த துக்கம் இன்றி கல்வி பயில முடிந்தது.

அவரது தூய்மையான மனதாலும், தபோ பலத்தாலும், கணவருடன் கொண்ட ஒற்றுமையினாலும் மகிழ்ந்து, இறைவன் அவளை சிரஞ்ஜீவியாக வானில் நக்ஷத்ரமாக அருந்ததி வஸிஷ்டரோடு இருக்க ஆஸீர்வதித்தார்.

நாம் திருமணத்தில் பார்க்கும் அருந்ததி நக்ஷத்ரம் இவர் தான்.

Reference : revivaloftrueindia.com/2013/07/twin-s…

🌿அஹல்யை🌿

எப்பேர்ப்பட்டவளாகினும், ஒருபெண் ஒழுக்கம் குன்றக்கூடாது என்பதை அஹல்யை வரலாறு குறிப்பிடுகின்றது.

”தேவேந்திரனே ஆசை கொள்ளும் அளவுக்கு தான் அழகுடையவள்” என்னும் சந்தோஷம் அவளை ஆட்கொண்டது.

Ahalya getrid of curse when Rama entered the Ashram – Sculpture at Hampi; Karnataka.

அதுவே அவளை ஒழுக்கம் தவறச் செய்தது. இதன் பலனாகத்தான் ராமனது பாததூள் குடிலில் படும்வரை, உருவமின்றி, புழுதியில் சுழன்று, உருவமும் மாறாமல் தண்டனையை அனுபவித்தாள்.

🌿கைகேயி🌿

மாற்றாந்தாயாகினும், கோஸலையை விட ராமனை அன்போடு வளர்த்தவள் கைகேயி.

Kaikeyi – Lovable lady of Dhasharatha

போர்க்கலைகள் கற்றிருந்தாளாகினும், உரிய நேரத்திலதை வெளிப்படுத்தத் தயங்கவுமில்லை. கணவரின் வெற்றிக்காக, அவரது சாரதியானாள்.

ராமர் லக்ஷ்மணனுக்கு சிறந்த அண்ணனாக மட்டுமல்ல, வழிகாட்டியாகவும் இருப்பதை பரதனுக்கு சுட்டிக்காட்டி, அவனை சத்ருக்ணனுக்கு வழிகாட்டியாக்கி, நற்பண்பினனாக வளர்த்தவள்.

தன்புத்தி இருந்தும், சொல்புத்தி எனும் நஞ்சினால் மந்தரையின் வார்த்தைகளால் ஆட்கொள்ளப்பட்டாள்.

பெண்ணின் தவறான பிடிவாதம் ஒரு குடும்பத்தையே அழிக்கும் எனத்தெரிந்தும், புத்ர பாசத்தினால் ஆட்கொள்ளப்பட்டாள். தனக்கு சக்ரவர்த்தினி பட்டம் கேட்டுப் பிடிவாதம் பிடிக்கவில்லை.

தனது மகனுக்காக குணம் மாறினாள். இறுதியில் தன் தவறை உணர்ந்து திருந்தி, தானும் பரதன் போல் துறவு வாழ்க்கையே வாழ்ந்தாள் ராமனைக் காணும் வரை.

🌿மந்தரை🌿

தான் அடைக்கலம் புகுந்த குடியைக் கெடுத்தாள்.

Kaikeyi advised to get Pattabhishekam for Bharathan by Mantharai (Kooni).

தவறான வாழ்க்கையை உபதேசித்து, உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு கைகேயியின் மனதை மாற்றினாள். ராம-லக்ஷ்மணர் ஸீதையுடன் வனவாசம் போகவும் வலியுறுத்தி, அது நடந்ததும் மகிழ்ந்த குரூர எண்ணம் கொண்டவள்.

இறுதியில் ராமர் திரும்பும் வரை, யாராலும் கவனிக்கப்படாமல், திருந்தும் வரை தனிமையில் வாடினாள்.

🌿ஸுநைனா🌿

ஸீதை வளர்ப்பு மகள் ஆயினும், அவளுக்குத் தந்த முக்கியத்துவத்தை, தனது சொந்த மகள் ஊர்மிளைக்குத் தரவில்லை. இதிலிருந்தே, அவளது பேதமற்ற மனம் புரிகிறது.

Sunaina advicing daughter Sita on her responsibilities – Ajanta paintings

🌿ஸீதை🌿

”கொண்ட கணவனே தெய்வம்; அவன்சொல் வார்த்தையே வேதம்” என, தன் தாயார் சொன்ன வாக்கியத்தை, வாழ்நாள் முழுதும் கடைபிடித்து, பிறந்த குலத்துக்கு மட்டுமன்றி, பெண் குலத்துக்கே பெருமை சேர்த்த நாயகி. எந்நிலையிலும், ராமரது வார்த்தைகளையோ, புகுந்த குலத்தின் உறவினர் வார்த்தையையோ மீறவில்லை.

அவள் வருகையால், தங்களது ராஜ்ஜியம் மேலும் பொலிவு பெற்றது என ஒரு சக்ரவர்த்தி மெச்சும் வகையில் வாழ்ந்தாள். மைத்துனர்களை, தனது மகனாகப் பாவித்து அன்பு காட்டினாள்.

ஆயினும், தனது கணவனின் உயிர்நிலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளது எனும் வேளையில்,

லக்ஷ்மணனிடத்து பேசக்கூடாத வார்த்தைகளை நெருப்பாகக் கக்கிவிட்டாள்.

ஸீதையின் இச்செயல் லக்ஷ்மண் ரேகாவைத் தாண்டியதை விட, மிகவும் மோசமானது. அதன் எதிர்விளைவே, அஸோகாவனத்தில் அக்னிப் பரீட்சையின் முன்பு ராமரின் வார்த்தைகளால் நொந்தது.

Lakshman closing ears on Seetha's words...

ஸீதை, ராமரின் மனதை அறிந்திருந்தார். அவர் தன்னை ஸந்தேகிக்க மாட்டார் என்பதும், ஒரு க்ஷத்ரிய அரசனாக, பிறர் குறை என்று ஒரு சொல் சொல்லிவிடும்படி வாழ்ந்திடக் கூடாது, அது ஸீதைக்கும் அவமானம் என்றே அவர் வருந்துகிறார் என்பது புரிந்தே, ஸீதை அக்னிப் பரீக்ஷையில் இறங்கி வெளிவந்தாள்.

இறுதிவரை தன் நெஞ்சில் ராமரைத் தவிர யாருக்கும் இடமளிக்காது வாழ்ந்தாள். இதனால் இன்னலை அனுபவித்தாலும், கற்புடை நாயகியாகத் திகழ்ந்தாள்.

🌿ஸூர்ப்பனகை🌿

ராவணனின் சகோதரி. காளாமுக அரசனான வித்யுஹ் ஜிஹ்மன் என்பவனை மணந்தாள். ராவணன் காளாமுகர்களுடன் போரிட்டபோது,

தன் இனத்துக்கு சார்பாக வித்யுஹ் ஜிஹ்மனும் போரிட்டான். ஆனால் ராவணன், தங்கையின் கணவனென்றும் பாராமல் அவனைக் கொன்றான்.

இதனால் மீண்டும் ராவணனிடமே தஞ்சம் புகுந்தாள் ஸூர்ப்பனகை. ஆனால், அவள் மனதில் ராவணன் மேல் குரோதம் அதிகமிருந்தது.

Lakshmanan cutting the nose of Surpanaka – Nasik

வனத்தில் ராம – லக்ஷ்மணர்களின் அழகில் மயங்கிப்போய், வெட்கமின்றி தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லிக் கேட்டவளுக்கு, லக்ஷ்மணன் மூக்கை அறுத்துச் சரியான தண்டனை தந்தான்.

அங்கே ஸீதையைக் கண்டவள், இப்பேர்ப்பட்ட வீரர்களிடம் சிக்கினால் ராவணன் மடிவான் என்பது உணர்ந்து,

அவனது பெண்ணாசையை ஆயுதமாக்கினாள். ஸீதையின் அழகை ராவணனிடம் அதீதமாக வர்ணித்து,

”உனக்காகப் பெண் கேட்டதற்கு அதில் ஒரு நரன் என் மூக்கை அறுத்துவிட்டான். இது உனக்கு ஏற்பட்ட அவமானம் இல்லையா?”

என, அவன் மனதில் ஆனவத்தையும் வளர்த்தாள்.

🌿அனஸூயா🌿

அத்ரி மஹரிஷியின் பத்தினியாவாள். இவர் மூன்று தெய்வங்களுமே தனக்குக் குழந்தையாக வரவேண்டும் என வரம் வாங்கியவள்.

அதன்படி ப்ரும்ம, சிவன், விஷ்ணு மூவரும் அந்தனர்களாக வந்து நிர்வஸ்த்ர பிக்ஷை கேட்க, அவர்களைக் குழந்தைகளாக மாற்றிச் சிறிது காலம் வளர்த்தார்.

பின்னர் அவர்கள் தங்களது அம்ஸங்களாக தத்தாத்ரேயர், துர்வாஸர், பதஞ்சலி ஆகிய மூன்று குழந்தைகளை அருளினர். இவர்களுடன் அருந்ததி என்னும் பெண் குழந்தையையும் அளித்தனர்.

தெய்வங்களுக்கே அன்னையான பெருமைக்குரியவர் இவர் ஒருவரே. சிரஞ்ஜீவியாக வாழ ஆஸீர்வதிக்கப்பட்டவள்.

“காடோ – நாடோ, மேன்நிலையோ – தாழ்நிலையோ எவ்வாறாகினும், கணவனிடத்து மாறா அன்புடைத்தவளே எல்லா நலனுமுடைத்தாவாள்.

மேன்நிலைப் பெண்டிரே கணவனின் நிலை, குணம் எத்தகையதாகினும் அன்புடனிருப்பர். அழியாப் பலன் தரும் தவம் போல் பெண்ணுக்கு கணவன் நலன் தருவான்.

ஆசைக்கு அடிமையாகி, கணவனை அடிமையாக்கி நடத்தும் பெண்கள் நிந்தனைக்கு உரியவராகிறார்” என அன்றைய வாழ்க்கையின் தர்மத்தை ஸீதைக்கு போதித்தவள்.

🌿மந்தோதரி🌿

மயன் என்னும் அஸுரனுக்கு மகளாகப் பிறந்தவள்.

Mandor Palace of Jodhpur, where Demon King Ravana married Mayan daughter Mandodhari

ராவணன் சிவபெருமானுக்கு இசைத்த சாமகானத்தைக் கேட்டவள், அவனே தனக்குக் கணவனாக வேண்டும் என விரும்பி மணந்தவள்.

ராவணன் காமாந்தகனாக இருந்த போதும், அவனைத் தனது அன்பால் அவனைத் திருத்த முற்பட்டவள். பட்டமகிஷியாக இருந்த போதும், ஒரு நல்ல அன்னையாக, தனது கணவன் போல் இல்லாது,

தனது மகன்களை நன்மக்களாக வளர்த்தவள். ராவணன் ஸீதையை முதலில் மந்தோதரியின் அரண்மனையில் சிறையிலிட்டு, ஸீதையின் மனதை மாற்றச்சொல்லி அவளிடமே கூறியும், ஸீதையின் மேல் கோபம் கொள்ளாது, கரிசனத்துடன் நடந்தவள்.

ஸீதையை விடுவிக்கச் சொல்லி, அவள் மஹாலக்ஷ்மியின் அம்ஸம் என்பதை

ராவணனுக்கு எடுத்துக் கூறியவள். இறுதி வரை ராவணனைத் திருத்த முயன்று, அதில் தோற்று, கடைசியாக அவன் பிணத்தின் மேல் விழுந்து,

”உன்னை அழிக்க ஒருவர் எவ்வுலகும் உண்டோ… நீ அழிந்தது, ஒரு நரன் ராமனால் அல்ல ராவணா…. உனது பெண்ணாசையால் அன்றோ?”

என அழுகையிலும்,

அவன் வீரத்தை மட்டுமே பெரிதாகச் சொன்னவள். அஸுரப்பெண்ணாகினும், பெண்மைக்குரிய இலக்கணமாகத் திகழ்ந்தவள்.

Mandodari mourning the death of Ravana. She brings a garland to lay upon Ravana's body resting on cremation wood. Bas-relief of 9th century Prambanan temple, Java, Indonesia.

🌿த்ரிஜடை🌿

ராவணனின் தமையன் விபீஷணனுக்கும், அவனது மனைவி சரமைக்கும் பிறந்தவள் த்ரிஜடை. ராவணனின் அரசுப் பணியில் இருந்தவள்.

ஸீதைக்குக் காவலாக இருந்த பணிப்பெண்களுக்குத் தலைவியாக இருந்து பார்த்துக் கொண்டவள். ஸீதை துவண்டு அழுத நேரம் எல்லாம் அவளுக்கு தைரியம் கூறி,

ஒரு பெண் எத்தனை கஷ்டம் வந்தாலும், அதை எதிர்கொள்ளும்போது எவ்வளவு துணிவுடன் இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தவள்.

அஸுரக் கூட்டத்தில் இருந்தாலும், மென்மையான மனதுடன் இருந்தவள். எதிரிக் கூட்டத்திலும் நல்லவர் இருப்பார் என்பதற்கு இவளும் ஒரு உதாரணம்.

ஸீதையை அஸோகவனத்தில் வைத்த ராவணன், நிறைய அஸுரப் பெண்களை வரிசையாகப் பாதுகாப்பிற்காக வைக்கிறான். அவர்களைக் கம்பன் வர்ணிக்கையில்,

”வயிற்றிடை வாயினர் வளைந்த நெற்றியில்
குயிற்றிய விழியினர் கொடிய நோக்கியர்
எயிற்றினுக் கிடையிடை யானையாளி பேயென
துயிற்கொள் வெம்பிலனென தொட்ட வாயினர்”

அதாவது, வயிற்றிலேயே வாயிருப்பது போலவும் (உண்டு கொழுத்த பருத்த வயிறு என்பதைக் கூறுகிறார்), வளைந்த நெற்றியும்,

குழி பறித்து அதில் பொருத்தி வைத்தது போன்ற கண்களும், கொடுமையான பார்வையும், யானை, யாளி, பேய் போன்றவற்றின் பற்களைப் போல் பற்களும்,

படுத்துத் தூங்கும் குகை போன்ற மிகப்பெரிய வாயையும் உடையவர்கள் என வர்ணிக்கிறார்.

ஆனால் அவர்களினின்று வேறுபட்டு மென்மையும், பெண்மையும், நல்லெண்ணமும், பொறுமையும், நீதியும் கொண்டு தந்தை போலவே வாழ்ந்தவள் த்ரிஜடை.

Demoness in the period of Ramayana.

🌿அது கூறும் தர்மம்🌿

ப்ராம்மண தர்மத்தில் ஆச்சார்ய பத்தினிகள் குருகுலக் குழந்தைகளை நடத்திய விதத்தின் மூலமும், அவர்கள் காலத்தின் பின் அவர்களைப் போல வரும் பிற குழந்தைகளிடத்திலும் அதே போல் நடந்து கொண்டதன் மூலமும்,

இதில் ஒரு குருவின் மனைவி தாயாக மட்டுமே இருந்தாள் எனும் தர்மம் இருந்தது. மேலும், குஹனும் ராமனும் பால்ய குருகுல ஸ்நேகிதர்கள் என்கையில், ஒரு ஆச்சார்ய பத்தினி

“நாகரீக மக்களின் அரச பரம்பரையா அல்லது காடுகளில் வாழ்ந்து நாட்டிற்கு எல்லைக்காவல் புரியும் வேடுவ மக்களின்

அரச பரம்பரையா எனப்பாராமல், அனைவரிடத்தும் சமமான தாய்மையைக் காட்டினாள்”

என்ற தர்மம் போற்றுதலுக்கு உரியது எனத் தெரிகின்றது. ஒரு இடத்தில் கூட அவர்கள், ராஜகுமாரர்களைக் காரணம் காட்டி, தானும் அவர்களைப்போல வாழ நினைக்காது, தனது ப்ராம்மண தர்மத்திற்குரிய எளிமையினின்று மாறாது இருந்தனர்

என்பது அவர்களது வாழ்க்கை தர்மம் எத்தகையது என்பதைப் புரியவைக்கிறது.

அதிலும் முக்கியமாக, க்ஷத்ரிய சக்ரவர்த்தினிக்கு இருந்த சில தளர்வுகள் இவர்களுக்கு இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ப்ராமணன் ஒழுக்கத்திற்கு எடுத்துக் காட்டாக வாழ வேண்டியவன் எனில்,

அவனது மனைவியும் அதில் அடங்குவாள் என்பது ப்ராமண தர்மத்தில் வந்தது. மேலும், பெண்ணுக்கு ஒருவன் தன் கணவனா இல்லையா என்பதைப் பார்த்தவுடன் அறியும் அளவுக்கு, ஒழுக்கம் இருந்தது.

இது கதையாக இருந்திருந்தால், அஹல்யாவைப் பற்றிப் புகழ்ந்து மாத்திரம் எழுதி இருக்கலாம்.

ஆனால், இது வரலாறு என்பதால், முழு உண்மையும் கூறப்பட்டது. மேலும், ஒரு தண்டனை என்பது ஒருவர் திருந்துவதற்குத்தானே ஒழிய, ஒருவர் அழிவதற்கு அல்ல.

தண்டனைகள் தவறு செய்தலுக்கும் தப்பு செய்தலுக்கும் ஏற்ப மாறுபடும். தனது தவறால் கொடிய தண்டனையை அஹல்யை அனுபவித்ததால்,

தன் தவறை நிச்சயம் உணர்ந்து வருந்தி மனம் குன்றியிருப்பாள். தவறு செய்தவர் மனம் திருந்திய பின் அவரை மீண்டும் ஏற்பதே நமது தர்மம் என்பதை உணர்த்துவதே, அவள் மீண்டும் பெண் உருவம் கொண்டபின் கௌதம முனிவர் அவளை ஏற்றது.

இருப்பினும், ஒரு பெண் ஒழுக்கம் தவறிய பின்

எவ்வாறு அவளை மீண்டும் முனிவர் ஏற்றார் என ஒரு ஸங்கடமான கேள்வி தோன்றும். அன்று இருந்த தர்மத்தின்படி, ஒருவர் தான் செய்த தவறை உணர்ந்து விட்டால் அவரது பாவம் கழிகிறது என்றும், முழுதும் மனம் வருந்தித் திருந்துகையில், முற்றிலும் பாவம் தொலைந்து,

பழைய உன்னத நிலை அடைய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, தவறு செய்தல் மனிதப் பண்பு. ஆனால், அதை உணர்ந்து, திருந்துவது தான் எல்லோராலும் முடியாதது. திருந்தியவன் மீண்டும் தவறிழைக்க மாட்டான்.

எனவே, அவனை அதற்கு மேல் தண்டிக்கக் கூடாது என்பது தான் தர்மமாக இருந்தது.

அதைக் கொண்டு த்ரேதாயுக வாழ்வினின்று பார்க்கையில், இது சரி என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் நம்மால்.

எனவே, கற்பு என்பது அக்காலத்திலேயே ஏற்பட்டு விட்டது என்பதும், தர்மம் எல்லோரிடமும் எத்தகைய கருணையக் காட்டுகின்றது என்பதும், மக்கள் முதல் ரிஷிகள் வரை அதை மீறாமல்

ஏற்றுக் கொண்டனர் என்பதும் புரிகிறது. கற்பு என்பது மீறப்படுவது, அதர்மமாக இருந்தது.

க்ஷத்ரிய தர்மத்தில் தேசநலனை நயமாகப் பேணுவது தர்மமானது. அதனால் தான், ராமனது நான்கு சகோதரர்களுக்கும் ஒரே குடும்பத்தில் உள்ள அண்ணன் தம்பியின் பெண்களை மணமுடித்தனர்.

ஸ்வயம்வரம் என்பது பெண்ணிற்கு சிறந்த ஸ்வதந்த்ரத்தை அளித்ததென்றாலும், வீரத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டது கூட, வீரம் செறிந்த தேசத்தில் சிநேகம் கொள்வது பின்னாளில் தனது தேசத்திற்கு பாதுகாப்பு என்னும் எண்ணத்தினால் தான்.

பொது நலத்தின் தேவையை அரச பரம்பரைகள் பந்தம் எனும் செயலின் மூலம்

விஸ்தரத்துப் பாதுகாத்தனர். எனவே க்ஷத்ரிய தர்மம் எங்கு சுற்றினாலும், பொது நலத்தின் காரணம் தொட்டே உள்ளது என்றானது. இன்று கூறும் பொய்யான பிரச்சாரம் போல், பெண்கள் ஸ்வதந்த்ரமற்று இருக்கவில்லை.

எனவே, இந்தக் கலியுகத்தில் ஒரு மனிதன் தோன்றி தான் பெண்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார்,

படிக்க வைத்தார் என்பதெல்லாம் வடிகட்டிய பொய் என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது.

ஸீதையின் துன்பம் முழுவதுமாக நமக்குக் கூறும் பாடம், ஒரு பெண் எத்தனைப் பொறுமையானவளாக இருக்கப் பழகியிருக்கிறாள் என்பதையே. திருமணம் ஆனபின் கணவனே தெய்வம் என வாழ்ந்திருக்கின்றனர் பெண்கள்.

ஒரு க்ஷத்ரியப் பெண் என்கையில், ஸீதை அஸ்த்ர ஸாஸ்த்ரம் பயின்றிருக்க மாட்டாளா? கலியுகத்தில், கன்னகி தனது கற்பின் சக்தியால் மதுரையை எரித்தது உண்மை என்றால், தர்மம் நிறைந்திருந்த த்ரேதாயுகத்தில், ஸீதை தன் கற்பின் சக்தியால் அவள் ராவணனை எரித்திருக்க முடியாதா?

எதனால் அத்தனைத் துயரும் அனுபவித்தாள்? அதாவது, ஒரு குடும்பத்தை நிர்வகிப்பவன் கணவன். மேலும் அவன் ஒரு க்ஷத்ரியன் என்கையில், அவன் புகழுக்கும் பெயருக்கும் தன்னால் இழுக்கு வரக்கூடாது என்பதுவே காரணம்.

எனவே, எவ்வகைப் பெண்ணாகினும், குடும்பப் பெண்ணுக்கான தர்மம் என்ன என்பதும்

வாழ்க்கையில் வகுக்கப்பட்டு விட்டது. அதே ஸீதை, இறுதியில் பூமாதேவியை வேண்டி அவளுடன் பூமிக்குள் சென்று விடுகிறாள் எனக் கூறுகிறார் வால்மீகி. இதுவே, பொறுமை இழந்து விட்டால், பெண்களின் சக்தி மேலோங்க ஆரம்பித்து விடுகிறது என்பதற்கு உதாரணமாக ஆனது.

ஆயினும் சில சமயம் அதையும் மீறுவது போல, ”தான், தனது” என்ற எண்ணம் வேர்விட ஆரம்பித்து விட்டது என்பதும்; பெண்கள் ஆண்களை எதிர்க்க வலுவில்லாவிடினும், தனது அன்பு மற்றும் பிடிவாத குணத்தால் நினைத்ததை சாதிக்க ஆரம்பித்தனர்; ராஜ்ய விஷயங்களிலும் தலையிட ஆரம்பித்தனர் என்பதற்கு கைகேயியே உதாரணம்.

மேலும், கைகேயி தசரதனுக்குப் போரின் போது ரதத்தைச் செலுத்தியதன் மூலம், பெண்கள் அனைத்தும் கற்றிருந்தனர் என்பதும் ஊர்ஜிதமாகின்றது.

துறவு வாழ்க்கையிலும், அந்தனர் வந்தார் என்கையில், அவருக்குத் தானமிட வேண்டும் எனும் க்ஷத்ரிய தர்மத்தில் மாறாது இருந்தனர்.

பெண்களும் அரச காரியங்களில் இருந்தனர் என்பதற்கு, அஸோக வனத்தினைப் பராமரித்து வந்த த்ரிஜடையும், பிற பெண்களும் உதாரணம். பெண்களிலும் குரூர குணமும் காம இச்சையும் கொண்டவர்கள் இருந்தார்கள்.

இதற்குத் தாடகையும், ஸூர்ப்பனகையும் உதாரணம். தவறு செய்யும் கணவனையும் தனது அன்பால்

மனைவிகள் தர்ம வழிக்கு மாற்ற முயன்றனர். அப்படியானால், பெண்களுக்கும் அவர்களின் க்ஷத்ரிய வாழ்விற்கான தர்மநெறி கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு உதாரணம் மந்தோதரி.

அவள் ராவணனிடம், அவர் தர்மத்தை எவ்வாறு மீறுகிறார் என்றும், இதனால் நாட்டில் என்னென்ன ப்ரச்சனைகள் வரும்,

மற்றும் குடும்பத்தின் எதிர்கால நிலை என்னாகும் என்பதும் பற்றி விளக்கி எடுத்துரைக்கிறாள். மேலும், “பிறன் மனை விழைதல்” என்பது அதர்மம் என்பதை அவனுக்குப் புரிய வைக்க முயல்கிறாள்.

இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். ராவணன் முதல் க்ஷத்ரியன்.

அவன் எத்தனை திருமணம் வேண்டுமானாலும், வம்ஸ வ்ருத்திக்காகவும், நாட்டைக் காக்கவும் செய்யலாம் என்ற போதும், மந்தோதரி ஸீதையை அடைய விரும்பியதை ஏன் தடுக்கிறாள்?

அதாவது, விரும்பி வரும் பெண்ணையோ, அல்லது தந்தை பாணிக்ரஹனம் செய்து தரும் பெண்ணையோ தான் அவர்கள் ஏற்க வேண்டும்.

விருப்பம் இல்லாத பெண்ணை, அதுவும் அவள் இன்னொருவரின் மனைவி என்கையில், அவள் மேல் ஆசை கொள்வது அதர்மம் என்பதை மந்தோதரி புரிய வைக்கிறாள்.

எனவே, க்ஷத்ரிய தர்மத்திலும், உள்ளார்ந்த தர்மங்கள் உள்ளன என்பதும், அவற்றைப் பெண்களும் அறிந்திருந்தார்கள் என்பதும் தெரியும் போது,

கண்டிப்பாகப் பெண்களும் படித்திருக்க வேண்டும் என்பதும் ஊர்ஜிதமாகிறது.

எனவே, பல்வேறு தரப்பட்ட பெண்கள் வாழ்வியலில் குணத்தின் அடிப்படையில் வாழ ஆரம்பித்தார்கள் என்பதையே இது காட்டுகிறது. பெண் என்பவளின் இயற்கையான பொறுமை குணம் அவள் குடும்பத்தையும்,

நாட்டையும் பாதுகாக்கும் பின்பலம் என்பதை வாழ்வியல் தர்மம் அன்றே கூறிவிட்டது. அதே சமயத்தில், பெண்களின் அமைதியும் பொறுமையும் தான் இதில் உயர்வாகக் காட்டப்பட்டு, நமக்குப் பாடம் புகட்டுகிறதே தவிர, அது அடிமைத்தனம் இல்லை….

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁

@threader_app compile

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling