நிவா 🦋 Profile picture
அன்பும் அறமும், தமிழும் சுவையும், எங்கும் எப்பொழுதும்..! ....but, Master of None

Jul 16, 2020, 16 tweets

#90ஸ்_கிட்ஸ் 😂 #90sKids 😂
🚦 Signalல Green விழுந்ததும்,Start ஆகாம மக்கர் பண்ற வண்டிய, முன்னாடி நிக்கும் வண்டியும், பின்னாடி வர்ற வண்டியும் கண்டுக்காம OverTake பண்ணிட்டு போய்கிட்டே இருக்கும்😂அது மாதிரி நமக்கு முந்தைய தலைமுறையும், அடுத்த தலைமுறையும் நம்மள கண்டுக்காம OverTake...

... பண்ணிட்டு போய்கிட்டே இருக்கும் போது, மக்கர் பன்ற வண்டி கிட்ட "லக்ஷ்மி ஸ்டார்ட் ஆயிடுன்னு"🤨போராடிட்டு இருக்காம வண்டிய தள்ளிட்டு போய் ஒரு ஓரமா நிழல்ல நிப்பாட்டிடு,பக்கத்துல ஒரு நல்ல டீக்கடையா பார்த்து டீ சொல்ற அந்த நிதானமும், பக்குவமும் இருக்கே, அது தாங்க 90s Kids. 😂😂

அது மட்டுமில்ல,
இந்த உலகத்துல 🌍 எங்கயோ ஒரு மூலையில நடக்குற அநியாயங்களை பார்த்துட்டு அல்லது கேள்விபட்டு, அதை Whatsapp, Face Book ல Statusஆ வைச்சாலோ, அல்லது Twitterல ஒரு Tweetஆ தட்டிவிட்டாலோ, அந்த அநியாயங்கள் எல்லாம் மாறிடும் ன்னு ரொம்ப அப்பாவி தனமாக நம்புறவனும் கூட ...! 🤭

இந்த 90s Kids இருக்காங்களே
அவங்க ஒரு Sandwich Layer 🍔மாதிரி!
Internet, Computer, Mobile, ATM ன்னு தகவல் தொழில்நுட்பமும்,
Orkut, FB, Twitter, Insta, ன்னு Social Medias ம்
வளர்ச்சி அடையாத 🙄மற்றும் வளர்ச்சி அடைந்த 😁 இரண்டு தலைமுறைகளுக்கு இடைப்பட்ட Sandwich Layer🍔 தான் அவங்க.!

அதனால்தான் என்னமோ இவங்களால பழசை அவ்வளவு லேசுல மறக்கமுடியறது இல்ல.!🙄
"நொங்குல வண்டி ஓட்டி விளையாடினவங்களும் நாங்கதான், நோக்கியா 1100 ல Snake game விளையாடின கடைசி தலைமுறையும் நாங்க தான்னு" அப்பப்போ வர்ற WhatsApp Messages எல்லாம் இவங்க தட்டி விடுற ஜென் தத்துவங்கள் தான். 😂

எறிப்பந்து,Seven Stone,பாண்டி, ஓடிபிடிச்சு,கல்லா மண்ணா, கண்ணாமூச்சி,பம்பரம்,கிட்டி கம்பு (கில்லி),கபடி,Cricket ன்னு நாங்க ஆடாத Out Door Games ம் இல்ல..!
தாயம்,பரமபதம்,பல்லங்குழி,Carrom,சீட்டுகட்டுன்னு ஆரம்பிச்சு இளவரசியை தேடி போற Mario வரைக்கும் நாங்க ஆடாத Indoor Games ம் இல்ல..!

இப்படி பழம்பெருமை 🙄 பேசுறதுல இவங்கள அடிச்சுக்க முடியாது!
என்னதான் சம காலங்கள்ல புதுப்புது இசை அமைப்பாளர்கள் வந்தாலும் இவங்க எப்பவுமே #இளையராஜா வின் தீவிர பக்தர்கள் தான்.
சூரி,யோகிபாபு ன்னு இன்றைக்கு பலபேர் வந்து Commedyங்கற பேருல என்னதான் பெர்ஃபாம் பண்ணாலும் இவங்க கொண்டாடுவது

என்னமோ #வைகைபுயல் ஐயும் #கவுண்டர்மஹான் ஐயும் தான்..! 😂
Yahoo Messenger Rediff Bol, Google Talk எல்லாம் ஒரு காலத்துல இவங்க வறுத்த கடலையில, கருகியே போயிடிச்சு..🙄
டீக்கடை, Mess, இஸ்திரி கடைன்னு மட்டும் இல்லாம,
Orkut, Google Plus, We chat, ன்னு திருவிழால காணாம போன Social Apps ல,

இருந்து இப்போ Trending la இருக்குற FB, Twitter, Insta, Tiktok வரைக்கும் எல்லாத்துலையும் இவங்களுக்குன்னு, ஒரு Account இருக்கும்.!
😁

இவங்க எல்லாம் Gmail, YahooMail, Rediffmail, FB, Twitterலாம் ஆரம்பிச்சப்போ படக்குன்னு போய் நல்ல நல்ல User ID எல்லாம் எடுத்துகிட்டவங்க தான்..!😂

இன்றைய தலைமுறை தேர்வு செய்யும் User ID லாம் இவங்க வேண்டாம்ன்னு தூக்கிபோட்ட மிச்சம் தான்..!😂
Minimum இரண்டு Mail ID யாவது Maintain பண்ணிட்டு இருப்பாங்க..!👍

எவ்வளவு அடிச்சாலும், நல்லவன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும், பிரிட்ஜ் ல இருந்து எடுத்த Ice கட்டி மாதிரி உருகி போய்டுவாங்க..!

அரசியல் நாகரிகத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் உள்ள நூலிழை தொடர்பு பத்தியெல்லாம் பொழிப்புரை எழுதுவாங்க..! (அம்புட்டு தெளிவு)🙄
ஒரு பிரச்சினையோ அல்லது மத்தவங்களுக்கு உதவி செய்யனும்னாலோ முதல்ல ஓடி வர்ற ஆட்களல பாதி பேரு நம்ம 90Kids தான்.(நீங்க நம்பலனாலும் இதான் நெசம்)

இனி தான் Sentiment காட்சிகள்.🙄

என்னதான் மனசுக்குள்ள வலியும் வேதனையும் இருந்தாலும் அதை ஒரு சிறு புன்னகை மூலமா அழகா கடந்து போய்கிட்டே இருப்பாங்க..!🤗

இவங்கள்ல பலபேருக்கு இன்னமும் கல்யாணம் ஆகல. ஏன்னா அது அவங்க குடும்ப சூழ்நிலை காரணமாக உள்ள பொறுப்புகளை எல்லாம் முடிக்க அவங்களே,

அவங்களுக்கு வழங்கிய அவகாசம்.

Juniorsஸோட Life எல்லாம்,
'அன்பேவா முன்பேவா' ல ஆரம்பிச்சு இப்போ 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' Levelல Developஆகி போய்கிட்டு இருக்கறப்போ, அவங்க இன்னமும்
'கொஞ்ச நாள் பொறு தலைவா, ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா' ன்னு இன்னும் #ஆசை யா காத்துகிட்டு தான் இருக்காங்க.

நீங்க அவங்கள,
' வேலை வெட்டி இல்லாதவங்க'
' கல்யாணம் ஆகாத முத்தின கத்திரிக்காய்' ன்னு எப்படி கலாய்ச்சாலும்,

ஆமா நாங்க எல்லாம்
VIP - வேலை இல்லா பட்டதாரி,
முரட்டு சிங்கிள் தான்னு உங்கள Cool ஆ Handle பண்ணிட்டு போய்கிட்டே இருப்பாங்க..!😏
(Mind voice : எவ்வளவு கேட்டிருப்போம் 😂)

2050 ல் வரலாறு தனது பக்கங்களை திருப்பி பார்க்கையில், சமூகம், கலை, அறிவியல், தகவல் தொழில்நுட்பம், ஊடகம் இப்படின்னு பல துறைகளின் வெற்றிப் பக்கங்களை இந்த 90s கிட்ஸ் தான் நிரப்பி வச்சி இருப்பாங்க..!👍
(சில பக்கங்கள்ல இடம் பத்தலன்னு Additional Sheet கூட வாங்கி இருப்பாங்க..!)
😂😂😂

எது எப்படியோ 90sKids உங்க கூட ஒரு நண்பனா, ஒரு Senoir ஆ, ஒரு பக்கத்து வீட்டு பையனா, ஒரு அண்ணனா, தம்பியான்னு தான் வாழ்ந்துட்டு இருக்காங்க!🙇
அந்த நல்ல உள்ளங்களை (பச்சை கிளிய) பத்திரமா பாத்துக்கோங்க.!😂
நன்றி மக்களே..!
🙏🙏🙏

(😂தங்களின் மேலான கருத்தை இங்கே பதிவு செய்யவும் 👇)

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling