Mathavan Venugopal Profile picture
வீழ்வது நாமாயினும்,வாழ்வது தமிழாகட்டும்!!

Jul 21, 2020, 6 tweets

வணக்கம்.
தலைவனும் தலைவியும் பிரிந்து இருக்கும் போது இருவரும் ஒருவரை ஒருவர் காணாமல் தனிமையில் இருந்து படும் உணர்வினை இச்சொல் சுட்டுகிறது.
I miss you - உன் பிரிவால் உழல்கிறேன்
Miss you - பிரிவுழல்கிறேன்
பேச்சுவழக்கு:உ(ன்)பிரிவால உழல்றன்டி,பிரிவுழல்றே(ன்)..

wix.to/5sAUC_E

உன் பிரிவால்-2
இன்றைய இளைஞர்கள் தவறாமல் பயன்படுத்தும் சொற் றொடரில்‘I miss you’இருக்கிறது. ‘I love you’ சொன்னவர்கள் அடுத்து எதைச் சொல்வார்கள் என்றால் இதைத்தான்.இதற்குத் தமிழில் என்ன என்றுகேட்டார்கள். `உன் இன்மையை உணர்கிறேன்’என்று திரைப்பட பாடலாசிரியர் ஒருவர் எழுதியுள்ளாராம். அது,

உன் பிரிவால்-3
உன் இன்மையை உணர்கிறேன் - I feel your absence
என்னும் தொடருக்குத்தான் பொருந்தும். ‘ஐ மிஸ் யூ’ என்பதற்கு தமிழில் மரபுத்தொடராகவே ஒரு சொற்றொடர் இருக்கிறது. ‘பிரிவுழல்கிறேன்’ என்பதுதான் அது.
உழல்வது - நிலைகெடுவது, சுற்றிச் சுற்றி வருவது, அசைவது, அலைபாய்வது,

உன் பிரிவால்-4
சுழலில் சிக்கியது போலாவது, மனங்கெடுவது, வருத்தம்.ஆகிய பொருள்கள் உள்ளன. அன்புத் துணையின் பிரிவால் நேர்வது அதுதான். `உன் பிரிவால் உழல்கிறேன்’ என்று விரித்துச் சொல்லலாம். தமிழ் மரபில் உள்ள வளத்தை நாம்தான் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உன் பிரிவால்-5
"உழல்தல் " இச்சொல் காதலின் தவிப்பை , ஏக்கத்தை , தனிமையை , காத்திருப்பை பிரிவின் பால் வருந்தும் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் பொருத்தி பார்க்கும் போது அவர்கள் கொண்ட சோகம் மொழியின் மீது உணர்வாய் படர்ந்து ஒரு காற்று போல் பிறரை சென்றடைகிறது .

"

உன் பிரிவால்-6

தமிழைத் தமிழ்போல்தான் எழுதணும். ஆங்கிலத்திற்கு நேரா எழுத வேண்டியதில்லை."

wix.to/5sAUC_E

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling