🌺Bharatha Varsham and Sanadhana Dhrmam🌺
#BharathVruksh
🌿வானரங்களின் வாழ்க்கை 🌿
இதில் வாலி, ஸுக்ரீவன் இருவரின் வாழ்க்கையையும் பார்க்கும் போது, காட்டில் வசிக்கும் குரங்குகள் இத்தனை புத்தியுடன் இருந்ததா? எனக் கேட்கத் தோன்றும்.
ஆனால் வால்மீகி இவர்களைப் பற்றிக் கூறும் போது,
தேவர்கள் இறைசேவை செய்து பழகியவர்கள். பகவான் பூமியில் அவதரித்து விட்டால், தாங்கள் என்ன செய்வது என்று, தாங்களும் வானரங்களாக, அதாவது மதிக்கக்கூடத் தக்கவையாக இல்லாத போதும், அவ்வாறிருந்தும் இறைசேவை செய்ய முடியும் என்பதைக் காட்டவே வந்தனர் என்கிறார்.
இது ஒரு புறம்.
ஆனாலும் வாலி, தனது தம்பி *ஸுக்ரீவன் மனைவி ருமை*யை அபகரித்ததில் இருந்து, அவர்களிடையேயும் குடும்பம் என்னும் வாழ்க்கை முறை இருந்ததைக் காட்டுகின்றனர் என்றே தோன்றுகின்றது.
🌱அது கூறும் தர்மம்🌱
வானரமே ஆனாலும், அதர்ம வழியில் சென்றால், அவரை வீழ்த்த சில அதர்மங்களைத் திருப்பிச் செய்வது
ராஜ்ய தர்மம் என்பது வாலி வதத்திலிருந்து தெரிகிறது. இதன் மூலம்,
“அன்றைய விலங்கினங்கள் பேசுமா?”
எனக்கேட்டால், தற்போதைக்கு அதன் பதில் பூஜ்ஜியமே. ஏனெனில், அவை பற்றிய விளக்கங்கள் ஏதும் வால்மீகி ராமாயணத்தில் இல்லை.
இதற்கு நாம் நமக்குப் புரியாத சில வரலாற்று நிகழ்வுகளைப் பார்ப்போம்.
இவர்கள் அரசன், மந்திரி என வாழ்ந்துள்ளனர்; அரசாட்சி புரிந்துள்ளனர்; ராம சேதுப்பாலம் கட்டத் திட்டம் வகுத்து, அதைக் கட்டியுள்ளனர்; அஸுரர்களுடன் போரிட்டுள்ளனர்…
வால்மீகியின் வாக்கைப்போல் தேவர்கள் என்றோ, வானரங்கள் என்றோ ஏற்றுக்கொள்ள முடியாவிடினும்,
வானர தோற்றம் கொண்ட மனிதர் எனக்கொள்ளலாம்.
இவர்களில் விஸ்வகர்மாவின் மகனாகிய நளன் எனும் வானரத்தை ஸமுத்ரராஜன் பாலம் அமைக்கும்படி அருளினார். அதற்கு நீலன் எனும் வானரத்தையும் சேர்த்துக்கொண்டு இப்பணி சிறக்க வாழ்த்தினார். இருவரும்தான் ராமசேதுவைக் கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரித்துள்ளனர்.
அப்படியெனில் வானரம் படிக்கக் கூடிய உடல்கூற்றுகளுடன் இருந்ததா?
Samudhra Rajan blessing Viswakarma’s son Nalan to finish the ramasethu bridge with the help of Neelan.
ஆஞ்சநேயர் ஸமுத்ரத்தைத் தாண்டிப் போய் ஸீதா தேவியைப் பார்த்ததாகட்டும், ராவணனுடன் பேசியதாகட்டும், காவியத்தில் எழுதப்பட்டுள்ளது. அதைத் தவிர, வால்மீகி அவர்கள் சென்றதாகக் கூறும் இடங்களில் ஹனுமானின் பாதச் சுவடுகள் இன்றும் உள்ளன.
ஹனுமான் ஆகாய மார்க்கமாக ஸமுத்ரம் தாண்டினார் எனில்
இவர்களும் விமானம் வைத்திருந்தார்களா? அப்படி இருந்திருந்தால் வால்மீகி அதைக் குறிப்பிட்டிருப்பாரே! ராமாயணத்தில் அவ்வாறு ஏதும் கூறப்படவில்லை.
விமானம் இருந்திருந்தால், சேதுபாலமும் தோன்றியிருக்காது. அப்படியெனில் அவர்கள் வான்வழியாக பறந்துதான் போயிருக்கிறார் எனத்தானே கொள்ள வேண்டும்?
மனிதர்களுக்கு இல்லாத பறக்கும் சக்தி ஹனுமனுக்கு வாயுபுத்ரன் என்பதால் வந்தது என்பதை ஏற்கலாம். அப்படியெனில் கந்தர்வர்களையும் தேவர்களையும் போல சக்தியுடையவராக இருந்திருக்கிறார் ஹனுமான். ஏனெனில் இதே வாயுபுத்ரன் பீமனுக்கு அந்த சக்தி இல்லையே?
ராவணன் ஆசனம் தராதபோது, அவர் தனது வாலையே
ஆசனமாக ஆக்கி, ராவணனை விட உயரத்தில் அமர்ந்தார் என்கிறார் வால்மீகி. இத்தகைய சக்தி உடையவர்களை வானரங்கள் எனக் குறிப்பிடப் பட்டிருப்பது...
உண்மையிலேயே வாணரமா, அல்லது அது போன்ற தோற்றம் கொண்ட மனிதர்களா என்பதும் தெரியாது. இல்லை உண்மையிலேயே அந்த யுகத்தில் வானரங்கள் இத்தகைய சக்தியுடனும்,
பேசவும் செய்தன என்றால், அவை இக்காலத்தில் அழிந்து விட்டனவா என்பதே மனதில் இறுதிக் கேள்வி ஆகிறது.
🌿அஸ்த்ர – ஸூத்ரங்கள் கூறும் தர்மம் 🌿
ஸமஸ்க்ருத மந்த்ரங்கள் மூலம் இயற்கையிடத்தில் உள்ள சக்தியை மனிதன் பயன்படுத்தத் துவங்கி விட்டான். பல வகையான அஸ்த்ரங்கள்,
மந்த்ர சக்தியின் மூலமே ப்ரயோகிக்கப் பட்டன என்பதிலிருந்து, அரசன் மட்டும் அல்ல, மேலும் பல க்ஷத்ரியர்களும் அவற்றைக் கற்றிருப்பார்கள் என்பது புரிகின்றது.
அப்படிச் செய்வதற்குத் தேவையான மனோபலம், மன ஒருமைப்பாடு, நேர்மறை சக்திகளைத் தேக்கி வைக்கும் வல்லமை ஆகியவை எல்லாம்,
அவர்களின் கடினமான வாழ்க்கை முறையால் வந்தது என்பது அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்திருக்கிறது.
அகழ்வாராய்ச்சியில் ஏதாவது சில அம்புகள் கிடைக்கலாம், அதை வைத்துக் கொண்டு, இதன் மூலம் மட்டுமே போரிட்டனர் எனக்கூறுவது புரிதலின்மையையே காட்டுகின்றது.
நம்மால் இயலாத, எவ்வாறு செய்வதென நமக்குத் தெரியாத விஷயங்களையும் கூறியுள்ளனர் முன்னோர்.
அஸ்த்ரங்கள் உயர்வாகப் போற்றப்பட்டன. காரணம் அதில் ப்ரயோகிக்கப்படும் மந்த்ர சக்திகள் தேவர்களால் அருளப்பட்டவை ஆதலால் பெரிதும் மதிக்கப்பட்டன.
அடுத்து, க்ஷத்ரியர் முதல் ஸூத்ரர் வரை
அனைவரும் வாழ்க்கை முறையின் முன்னேற்றம் கொண்டு வாழ்ந்ததற்கும், நாகரிகமாக மாற ஆரம்பிப்பதற்கும் காரணம், அவர்களது தொழில்களில் ஸூத்ரங்களின் முன்னேற்றம் தான்.
ஸூத்ரங்கள் அதிகம் கற்றதன் பயனே நாகரிக வளர்ச்சி. இவற்றைக் கொண்டு பார்க்கையில், அஸ்த்ர வித்தையில் க்ஷத்ரியர்களும்,
தொழில் வித்தைக்கான ஸூத்ரத்தில் வைஸ்ய, ஸூத்ரர்களும் முன்னேறி இருந்தனர் என்பதை நாம் உணர முடிகின்றது.
🌱3 : 4 : 4🌱
🌿ஆதாரங்களும் அணிவகுப்பும் 🌿
இதுவரை த்ரேதாயுகத்துக்கான நிகழ்வுகளைப் பார்த்தோம். இதன் மூலம் அன்றைய நாகரிகம் எவ்வாறு ஆதிமுறையினின்று முன்னேறியது என்பது தெரிகிறது.
வர்ணத்தில் தொழிற்பிரிவுகளைக் கொண்டு ஜாதிகள் உருவாகின. மக்கள்வாழ்வில் தர்மநிலை என்பது, மனஸாக்ஷிக்கு விரோதம் இன்றி இருப்பதாகத்தான் அதிகம் இருந்தது.
பெண்கள் வாழ்வுமுறை அவர்களது உடலியல்புக்குத் தக்கவாறு பகுத்துணரப்பட்டு பாதுகாப்பானதாகவும், கல்வி கேள்விகள் பொதுவானதாகவும் இருந்தன.
சமூகம் என்ற கட்டமைப்பின் வாழ்வுநிலை தர்மம் என்பது ஒற்றுமை, தேசம் ஆகியவற்றை முன்னிறுத்தி இருந்தது என்பதும் பார்த்தோம். இவற்றை எல்லாம் உண்மை என இவ்வாறு ஏற்பது?
”சமஸ்க்ருத ஓலைச் சுவடிகளை மூலமாக வைத்து, இன்று அயல் நாடுகளில் எண்ணற்ற அறிவியல் முன்னேற்றங்கள் வருகின்றன.
ஆனால் பாரதத்தின் விதி, படித்த பலரே நம் நாட்டில் இவை எல்லாம் பொய், மேலும் பழங்காலக் கதைகளில் கூறப்பட்டவை எல்லாம் இக்காலத்தோடு பொருத்தி, இந்துக்கள் பெருமை தேடிக் கொள்கின்றார்கள் என மனம் வலிக்காமல் கூறுகின்றனர்.”
“பொய் தற்காலிகமாகத் தாக்கு பிடிக்கும்; ஆனால் உண்மை என்றும் அழியாது”
எனும் வாக்கை மனதில் நிறுத்திப் பார்த்தால், இவை உண்மையாகத்தான் இருக்கும் எனும் நம்பிக்கை முதலில் நமக்குப் பிறக்கும்.
அதற்கு இங்கே நமக்குக் கிடைத்த சில தடயங்கள், அவற்றின் ஆய்வு முடிவுகள் ஆகியவற்றையும், அக்காலத்தில் இருந்த சில வழக்கு மொழிகளையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அணிவகுப்பு போல நமக்குக் கிடைத்த ஆதாரங்களைப் பார்க்கலாம். க்ருதயுகத்தில் நடந்த ராமகாதை, அப்போது பெரிய விஷயம். எனவே அது சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் பல இடங்களில் கிடைக்கப் பெறுகின்றன.
அதனால் இங்கேயும் அதன் தாக்கமே மேலோங்கி இருக்கும். அவை தாண்டியும் கிடைத்தவற்றைப் பதிவிடுகிறேன்.
1) லக்கலா & தனுவிலா – Laggala & Danuwila Lake
லக்கலா தனுவிலா ஏரியின் பின்புறம் உள்ள பாறை நிலம். இங்கிருந்து தான் த்ரிகோண மலை நோக்கி அமர்ந்து ராவணன் தவமிருந்தான். ராமரின் ஸைன்யத்தை இங்கிருக்கும் பாறைமேல் ஏறிப்பார்த்தே, ராவணனிடம் அவனது சேனை வீரர்கள் கூறினர்.
மேலும், ராவணனின் படைகள் இதன் அருகேதான் போரின்போது தங்கியிருந்தன.
2) ராவணனின் விமானத் தலங்கள் – Airports of Ravana
ராவணனின் ஆட்சியில் ஆறு விமானத் தலங்கள் இருந்தன என்பதை வால்மீகி அவற்றின் பெயருடன் குறிப்பிட்டுள்ளார். அவை
1)மஹியாங்கானாவில் உள்ள வெரகண்டோட்டா
2)ஹார்ட்டான் ப்ளெய்னில் உள்ள
தொட்டுபோலா கண்டா
3)தென்கரையில் உள்ள உஸன்கோடா
4)குருனேகலாவில் உள்ள வாரியபோலா
5)மத்தேலில் உள்ள வாரியபோலா
6)மஹியாங்கானாவில் உள்ள குருலுபோத்தா
இதற்கான ஆய்வுகள் தற்போது இவை இருந்திருக்கும் வாய்ப்பு இருந்துள்ளதக் கூறுகின்றன.
Reference : Valmiki Ramayanam
3) வெரகண்டோட்டா: Weragantota in Mahiyangana
ஸீதாதேவியைக் கடத்தி வந்த ராவணனின் புஷ்பக விமானம் இறங்கிய இடம் இது என்பது வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4) தொட்டுபோலா கண்டா - Thotupola Kanda at Horton Plains
5) உஸன்கோடா தென்கரையிலுள்ளது – Usangoda on the southern coast
ஹனுமானின் வாலில் நெருப்பை வைத்ததும், அவர் ராவணன் மாளிகைக்கு, அசோகவனத்தின் ஒருபகுதிக்கும், உஸன்கோடாவிலும் தீ வைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் அம்மண்ணைத் தோண்டினால் கருமை நிறம் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.
6) வாரியபோலா – Wariyapola in Kurunegala (Geo View)
Reference :
7) வாரியபோலா – Wariyapola in Mattale
8) த்ரிகோணமலை – Triconamalee
ராவணன் சிவபெருமானை வேண்டி, இம்மலை நோக்கித் தவமிருந்ததாக வால்மீகி கூறியுள்ளார்.
9) குருலுபோதா – Gurulupotha in Mahiyangana.
Sita used to climb down the steps on the south side of the palace and go to the river for bath !
Ruins of Maharani Mandodari’s palace at ‘Gurulupotha’ village and presence of river found even today.
மந்தோதரியின் மாளிகை இருந்த இடம். முதலில் இங்கேதான் ஸீதையை மந்தோதரியிடம் விட்டு, சமாதானப் படுத்தச் சொன்னான் ராவணன்.
10) ஸீதா கோட்டுவா – Sita Kotuwa
‘Sita Kotuwa’ in Sri Lanka is situated in ‘Gurulupotha’ village in a thick forest of ‘Uwa’ region of Sri Lanka.
ஸீதாதேவி சிறைவைக்கப்பட்டிருந்த மற்றொரு கோட்டை இது. இங்கு மண்டோதரி வாழ்ந்ததாகக் கூறுவர். அசோக் வாடிகா எனும் அசோக வனமே, தற்போது ஸீதா கோட்வா என அழைக்கப் படுகின்றது.
11) அசோக் வாடிகா – Ashok Vatika
அசோகவனத்தின் ஒரு பகுதியையும் ஹனுமான் எரித்தார். அவ்விடத்தில் இருக்கும் மண் இன்றும் கருமை நிறத்தில் தான் உள்ளது. ஏரியின் ஒருபுறம் இப்படி இருக்கும் மண், மறுபுறம் சாதாரணமாக உள்ளது.
ஸீதையை ராமதூதனாகிய ஹனுமான் சந்தித்த இடம். இங்கே வரிசையாக ஹனுமான் நடந்து வந்த பாதப் பதிவுகள் உள்ளன.
தொல்லியல்துறை அதனை ஆய்ந்து இது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என ஒப்புக் கொண்டுள்ளது.
அசோக் வாடிகாவில் சீதையின் கோயிலையும் காணலாம்.....
12) ஹக்கலா பூந்தோட்டம் – Hakgala Botonical Garden
ஸீதையின் மனம் மாறுவதற்காக, அஸோக வனத்தில் ராவணன் அமைத்த பூந்தோட்டம். இதனை ஆங்கிலேய ஆட்சியில் மேலும் அழகாக்கி, விஸ்தாரம் செய்தனர். இங்கே ஒரு பகுதி இன்றும் எரிந்த நிலையிலுள்ளது.
அது, ஹனுமான் ராவண மாளிகையை எரித்து, இங்கும் சிறு பகுதியை எரித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் பல ஆதாரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்....
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
