Second Show Profile picture
YouTube - https://t.co/W00VAvaike Facebook - https://t.co/uMxVQo3EHb Instagram - https://t.co/J3uj7zOiM0 Telegram - https://t.co/S7dmGIvAdp

Aug 2, 2020, 6 tweets

#அமித்ஷா'வுக்கு கொரோனா பாசிட்டிவ் அப்படிங்கிற செய்திக்கு 'ஹா ஹா' ரியாக்ட் பண்றதை விட கேவலம் இருக்கமுடியாது...

அந்தாளு நல்ல மனுஷனோ, கெட்டவனோ, யோக்கியனோ இல்லையோ அது வேற விஷயம். ஒருத்தர் நோய்வாய்ப்பட்டதுல சந்தோஷப்பட என்ன இருக்கு? இதே போல தான், திமுக MLA #அன்பழகன் இறந்தப்போ

1/N

சங்கீஸ் கொண்டாடினதும், அதிமுக அமைச்சர் #செல்லூர் #ராஜு'வுக்கு கொரோனா வந்தப்போ மீம்ஸ் போட்டதும்.

ஒரு மனுஷனை திட்டலாம், விமர்சனம் பண்ணலாம், கேலி பண்ணலாம். ஆனா, நோயையும் மரணத்தையும் கேலி பண்றது என்ன மனநிலை?

நீங்க ஏதோவொரு கட்சிக்கு ஆதரவா இருக்குற ஒரே காரணத்துக்காக, உங்க

2/N

வீட்டுல யாருக்கு #கொரோனா வந்துச்சுன்னு வேற ஏதோ கட்சிக்காரர் சிரிச்சு கொண்டாடினா அதுவும் இப்படித்தானே இருக்கும்?

ஒரு காலத்துல, நானும் இப்படி சிரிச்சிருக்கேன்... வடநாட்டுல ஒரு தலைவர் இறந்தப்போ கொண்டாடி இருக்கேன்.. ஆனா, அதுவே ஒரு sadist மனநிலைன்னு புரிஞ்சு வெளியே வந்துட்டேன்.

3/N

செல்லூர் ராஜு போல, அமித்ஷா அவர்களும் கொரோனாவை வென்று வரட்டும் !

நாம இங்கே விமர்சனம் பண்ண, கேலி பண்ண வேற எவ்வளவோ விஷயங்கள் இருக்கு... இந்தியாவுல லட்சக்கணக்கான கொரோனா கேஸ் இருக்குற இந்த சமயத்துல, அதை பத்தியெல்லாம் கவலைப்படாம ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில ராமர் கோவிலுக்கு

4/N

அடிக்கல் நாட்ட போறோம், ஆகஸ்ட் 3ஆம் தேதியிலருந்து 3 நாள் கொண்டாட போறோம்ன்னு பி.ஜே.பி கட்சிக்காரங்க முழு வீச்சுல இறங்கியிருக்காங்க. கொரோனா தனிமனித இடைவெளியை எல்லாம் காத்துல பறக்கவிட்டுட்டு, பிரதமர் மோடி உட்பட 200 சிறப்பு அழைப்பாளர்கள் இதுல கலந்துக்குறாங்க.

கொஞ்சம் கூட கொரோனா

5/N

விழுப்புணர்வு இல்லாம இப்படி பண்ணா கொரோனா வராம வேறன்ன வரும்?

அது போக #சங்கீஸ் லாஜிக்படி இந்தியால வெறும் 10 கேஸ் இருந்தப்போ நடந்த தப்லீக்ஜமாத் மூலமாதான் கொரோனா பரவும். இப்போ லட்சக்கணக்குல கொரோனா இருக்கப்போ ராமர் கோவில் விழால எத்தன 1000 பேர் கலந்துகிட்டாலும் கொரோனா எல்லாம் பரவாது🚶

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling