உடுமலைப்பேட்டை ஆணவக்கொலை வழக்குல A1 குற்றவாளி ரிலீஸ் ஆனதை பத்தி, #சீமான் அண்ணனோ இல்ல 'தமிழ் தேசியம்' பேசுற தம்பிகள் நடத்துற ஒரேயொரு சேனல் கூட பேசலையேன்னு கேட்டு நம்ம சேனல்ல ஒரு மாசம் முன்னால ஒரு வீடியோ போட்டிருந்தேன்...
மத்த எல்லா பிரச்சினைகளுக்கும் வீடியோ போடுற
1/N
தம்பிகள், ஜாதி பிரச்சினை அப்போ மட்டும் கமுக்கமா இருக்குறது ஏன்? சீமான் அண்ணனை யார் விமர்சிச்சாலும் 'நீ தமிழன் இல்ல, தெலுங்கன்'னு வெறுப்பை கக்குறது ஏன்னு கேட்டிருந்தேன்...
'பேசு தமிழா பேசு' சேனல் நடத்துற ராஜவேல் நாகராஜன் அண்ணன், 'நான் சீமான் அண்ணனை நேர்காணல் எடுக்க போறேன்..
2/N
இந்த கேள்விகளையும் கேட்பேன்'னு ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.
அந்த பேட்டியும் இப்போ வெளியாகியிருக்கு.. உடுமலைப்பேட்டை ஆணவக்கொலை தீர்ப்பை பத்தி வாயே திறக்காம கள்ளமௌனம் சாதிப்பது ஏன்னு அப்படிங்குறதை பத்தி கேட்ட கேள்விக்கு சீமான் அண்ணன் சொல்லியிருக்குற பதில் என்ன தெரியுமா?
"இந்த
3/N
கொலைக்காக அவர்கள் சூழ்ச்சி செய்தாங்கன்னு நிரூபிக்கப்படல, அதனால விடுதலை செய்யறாங்க.
அதுல உண்மையிலேயே.. நியாயமா...
வெளிப்படையா சொல்லணும்ன்னா, அதுல எனக்கு எந்த கருத்தும் இல்ல, அதனால என் அமைதியையே நான் கருத்தாக்கிட்டேன், பதிலாக்கிட்டேன். அமைதி ஆகிட்டேன். அவ்வளவுதான்" அப்படின்னு
4/N
ஒரு வியக்கத்தக்க பதிலை சொல்லியிருக்காரு 🙏🙏🙏
"வேற யாருமே, எந்த தலைவருமே அப்படி ஒண்ணும் கருத்து சொல்லலையே"ன்னு ஒரு மழுப்பல் வேற... ஆனா, உண்மை என்னென்னா பல தலைவர்கள் கண்டனம் தெரிவிச்சிருக்காங்க. அண்ணன் சீமான் ஏன் அமைதியா இருக்காரு அப்படிங்கிறதுதான் கேள்வியே. வேற யாருமே
5/N
கருத்து சொல்லலையே, நான் எதுக்கு சொல்லணும்ன்னு மழுப்புற இவர்தான் தன்னைத்தானே இங்கே இருக்குறவங்களுக்கு மாற்றுன்னு சொல்லிக்குறாரா...?
இன்னொண்ணு வேற கேட்குறார்.. "நான் எல்லா பிரச்சினைக்கும் கருத்து சொல்லணும்ன்னு நினைக்குறவங்க, நான் சொன்ன மத்த கருத்துக்களை எல்லாம் ஏத்துக்கிட்டு
6/N
என்கூட பயணிச்சாங்களா?"ன்னு கேட்குறார்.... குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு மட்டும்தான் பேசுவேன், சில விஷயங்களை பேசமாட்டேன்னா எதுக்கு அரசியல் களத்துல நிற்கணும்?
நான் அதை பண்ணேன், இதை பண்ணேன்னு எல்லாம் சொல்லிட்டு கடைசி வரை கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லாம அடுத்த கேள்விக்கு
7/N
போய்ட்டார் சீமான் அண்ணன்
ரொம்ப பெருமையா இருந்தது, இந்த கேள்விக்கு அவர் பதில் சொன்ன விதத்தை பார்த்தப்போ ❤️❤️ ஜாதி பத்தின உங்க நிலைப்பாடு எப்போவுமே சந்தேகத்திற்குரியதாகவே இருந்தது, சீமான் அண்ணா. அதை தொடர்ச்சியாக நிரூபிச்சுட்டே இருக்கீங்க. நன்றி அண்ணா ❤️ 2021ல் 234ம் நமதே 💪💪
8/N
அப்படியே காதுல ஒலிச்சுட்டே இருக்கு... "இந்த வழக்குல கருத்து என்ன சொல்றதுன்னு தோணல... அதனால அமைதியா இருந்தேனே ஒழிய, வேறொண்ணும் இல்ல"
செம்ம க்யூட்ல 😊❤️
9/N
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
