Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Aug 13, 2020, 10 tweets

#NFP என்றால் என்ன??

கடலில் மீனவர்கள் இனி
கால்வைக்க முடியாது.
வருகிறது மோடியின் புதிய NFP சட்டம்.,

தேசியக்கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் இத்தகைய மோசமான திட்டத்திற்கு மீனவர்கள் கடும் +

எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் சங்க தலைவர் லோகநாதன் கூறுகையில்"தேசிய கடல் மீன்வள சட்டமசோதா மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்தசட்டத்தை அமல்படுத்தினால் மீனவர்களிடமிருந்து கடல் பறிக்கப்பட்டு கடலில்மீனவர்கள் கால்கூட வைக்கமுடியாத நிலைமைஏற்படும்.+

அதாவது இந்தச்சட்டத்தின்படி, கட்டுமரங்களை‘கப்பல் பதிவுச்சட்டத்தின் கீழ்’பதிவு செய்யவேண்டும் எனக் கூறுகிறது. கப்பல் பதிவுச் சட்டத்தின் கீழ்பதிவு செய்யவேண்டும் என்றால் கப்பலில் இருக்கும் மாலுமி இருக்கவேண்டும்.

டிரைவிங் லைசென்ஸ் எடுக்கவேண்டும்;தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்கவேண்டும்+

என அந்த சட்டத்தில் உள்ளது. இது எதுவுமே கட்டுமரங்களில் சாத்தியமில்லை.

அதுமட்டுமல்லாது, இயந்திரங்கள் கொண்டு இயங்கும் எல்லாக் கலன்களுமே கப்பல் எனக் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் தமிழகம் உட்பட பல பகுதிகளில் கட்டுமரங்கள், வள்ளங்கள் ஆகியவற்றுக்கு வெளிப்பகுதியில் இயந்திரம் பொருத்தி +

இயக்கப்படுகிறது. அதனால் அதனையும் கப்பல் என்ற கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.

மேலும், விசைப்படகுகள் கடலில் 12 நாட்டிக்கல் மைலுக்கு மேல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்படும்; 12 நாட்டிக்கல் மைலை தாண்டிச் செல்ல ஒவ்வொரு முறையும் அனுமதி பெற வேண்டிய நிலை உருவாகும். +

அந்த பகுதிகளில் வெளிநாட்டு மீன்பிடிக்கும் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இதனால் சொந்த நாட்டு மக்கள் நிர்கதியாவார்கள்.

கல்வி, சுற்றுச்சூழலை அடுத்து மீனவர்களைப் பலி கொடுக்க தயாராகும் ‘NFP’ : மோடி அரசின் அடுத்த நாசகார திட்டம்!
இந்த மசோதா மூலம், அதிகாரிகள் +

எப்போது வேண்டுமானாலும் கலன்களை ஆய்வு செய்யமுடியும்.

ஆவணங்கள் பெறாமல் மீன்பிடிக்கச் சென்றால் மீனவர்களைக் கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்கவும், இந்த புதிய மசோதா வழிவகை செய்கிறது.

மேலும் 2020-ம் ஆண்டுக்குள் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியங்களையும் நிறுத்தும் முனைப்பில் +

இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.

இந்த மசோதா தொடர்பாக தமிழகத்தில் ரகசியமாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்ற அனைத்து மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை அழைத்து கருத்து கேட்காமல், யாரோ ஒரு சிலரை அழைத்து கருத்துக்கேட்டு, அந்த கருத்துக்களை அரசுகளுக்கு +

அனுப்பி வைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப்பெரும் சதியாகும்.

எனவே இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் கருத்து கேட்பு கூட்டத்தை வெளிப்படையாக மீண்டும் நடத்த வேண்டும். இந்த மசோதா மூலம் ஆதி சமூகமான மீனவர்களை மீன்பிடித் தொழிலில் இருந்து +

அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடத்தை பன்னாட்டுக் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் மீன்வளத்தை ஒப்படைப்பதற்கான செயல்திட்டமாக இந்த மசோத அமைகிறது” எனத் தெரிவித்தார்.

தமிழக மீனவர்களை காப்போம்!!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling