Asiriyar K.Veeramani Profile picture
Official account of DK President Asiriyar K.Veeramani

Aug 20, 2020, 23 tweets

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் 3வயதுக் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கச் சொல்கிறது புதிய கல்விக் கொள்கை. ஆனால், பாடங்களும், சொல்லித்தரும் முறையும், மத்திய அரசு சொல்கிறபடியே இருக்கவேண்டும். மாநில, உள்ளூர் பண்பாடு -நாகரிகம் பற்றியெல்லாம் எதுவும் சொல்லித்தர மாட்டார்கள்.

பள்ளிக்கல்வி வரை மட்டுமே பெண் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது புதிய சனாதன #NEP கொள்கை. மேலும், மாணவர்கள் அதிகம் இல்லாத பள்ளிகளை மூடிவிட்டு, பள்ளி வளாகம் என்ற பெயரில் 10,15 கி.மீ.க்கு அப்பால் உருவாக்குவோம்என்றால், அப் பள்ளிகளுக்கு, பெண்பிள்ளைகளைப் பெற்றோர் எப்படி அனுப்புவார்கள்?

உயர்கல்வியைத் தாண்டி, பட்டப்படிப்பு, பல்கலைக்கழகம் இங்கேயெல்லாம், பெண்களுக்கான வாய்ப்பைப்பற்றி இந்த கல்விக் கொள்கையில் ஒரு திட்டமும் இல்லை.

மதிய உணவுத் திட்டம் அய்ந்தாம் வகுப்புவரை மட்டுமே உண்டு என்கிறது மத்திய அரசின் கல்விக் கொள்கை. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளிலும், உயர்நிலைப்பள்ளி களிலும் மதிய உணவு ‘சத்துணவுத் திட்டமாக’ தரப்படுகிறது. இனிமேல் அது நிறுத்தப்படுமா? என்பது தெளிவாக்கப்பட வில்லை.

சுதந்திரம் கிடைத்ததும் ஒவ்வொரு மாநிலமும் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டதே அவர்களின் மொழி, பண்பாடு, உடை, உணவு என அனைத்திலும் பல்வேறு வேறுபாடுகள் உள்ள ஒரு கூட்டாட்சி நாடு என்பதால்தானே!

அதனால்தானே, அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில், கல்வி என்பதை மாநில அதிகாரத்திற்குள் வைத்தார்கள். பிறகு 1976 இல் எமெர்ஜன்சி காலத்தில், கல்வி மாநில அதிகாரத்தில் இருந்து, ஒத்திசைவுப் பட்டியல் என்று கொண்டு சென்றார்கள். ஆனால், இன்று நடைமுறை என்ன?

மத்திய அரசாங்கமே கல்வி பற்றி, மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்காமல் கொள்கை வெளியிடுகிறது. இது அப்பட்டமான, அதிகாரப் பறிப்பு; அரசமைப்புச் சட்டத்தை மீறிய செயல் இல்லையா? யூனியன் பட்டியலுக்கே கல்வியைக் கொண்டு போய்விட்ட நிலை போன்றதல்லவா?

தமிழ்நாட்டில் மக்களுக்கு என்ன மாதிரியான கல்வி தரப்பட வேண்டும் என்று இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இல்லாத உரிமை எப்படி மத்தியில் இருக்க முடியும்?

வளர்ச்சியடைந்த நாடுகளில், கல்வி என்பது அங்குள்ள மாநில அரசுகளால்தான் நடத்தப்படுகின்றது. சில வழிகாட்டுதல்களை மத்திய அரசு செய்கின்றது. ஆனால், இந்தியாவில், பல மொழி, பல இனம், பல கலாச்சாரம் என்று உள்ள ஒரு நாட்டில், எல்லாமே மத்திய அரசின் அதிகாரம் என்ற ஒற்றை ஆட்சி முறை எப்படி சரியானது?

அதிகாரத்தை மய்யப்படுத்தப்படும் முயற்சியில் பா.ஜ.க. அரசு அதிக முனைப்புக் காட்டுவதற்கான காரணம், அவர்களின் காவிமயப்படுத்தும் முயற்சிக்கு அதுவே வசதியாக இருக்கும் என்பதுதான் என்கிறார் பேராசிரியர் ஹர்பான்ஸ் முக்கியா.

துவக்கப்பள்ளி முதல் பல் கலைக்கழக ஆராய்ச்சி படிப்புவரைக்கும் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஒரே அதிகார மய்யத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆர்.எஸ்.எஸ். புதிய கல்விக் கொள்கையைக் கைதட்டி வரவேற்கிறது; அந்த அமைப்பின் பரிந்துரைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை நிறைவேற்றப்பட்டதாகக் கூறி மகிழ்ச்சியடைகின்றது.

பிரதான கல்வியில் தொழிற் கல்வியை ஒருங்கிணைத்தல் மற்றும் உத்தரப்பிரதேச பள்ளிக் கல்வி கற்பித்த ‘‘பாரத் கவுரவ்''வரிசையில் ஒரு அடித்தளப் பாடத்திட்டத்தைச் சேர்ப்பது போன்ற இந்திய நாகரிகத்தைப் பற்றிய கதைகளைக் கொண்ட குழு, இவை அனைத்தும் புதியக் கல்வி கொள்கையில்! #nepisbrahmanism

ஏதேனும் ஒரு வடிவத்தில் தங்களுடைய கொ
ள்கைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன என மகிழ்ச்சியோடு ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது என்றால், இந்தக் கல்விக் கொள்கை யாருக்கானது என்பது இதன்மூலம் புரியவில்லையா? ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைத் தடுக்கும் முயற்சியாகத்தானே இருக்க முடியும்?

‘பாரம்பரியக் கல்வி' என்ற பெயரில் பழைய சனாதன முறையையும், குப்பைகளையும் நமது பிள்ளைகள் மூளை யில் ஏற்றி, எதற்கும் உதவாதவர்களாக ஆக்கும் மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாம் நிராகரிக்க வேண்டாமா?

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட கிராமப் புற மக்களை, தொழிலாளர்களாகவே உருவாக்குவதற்கும், உயர்கல்வியை உயர்ஜாதிப் பார்ப்பனர்களின் ஏகபோகத்திற்கு உட்படுத்தி, அவர்களது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவுமே உருவாக்கப்பட்டதுதான் இந்தப் புதிய கல்விக் கொள்கை.

#NEP-ல் இலவசக் கல்வி, அருகமைப் பள்ளி, பொதுப்பள்ளிகள்பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமை, சமத்துவம், பன்முகத் தன்மை ஆகியவற்றுக்கு எதிரானது.

காவிச்சாயம் பூசிய விஷ உருண்டை #NEP! .

இருமொழிக் கொள்கையை நிராகரித்து, ஹிந்தி சமஸ்கிருதத்தைத் திணிக்கிறது #NEP

மொத்தத்தில், சமூக நீதியை அழித்து, கல்வித்துறையைப் பெரிதும் தனியார் மயமாக்கி, உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்களுக்குக் கடை விரிக்க அனுமதிக்கும் ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள மோடி அரசு, அதற்கு வசதியாக உருவாக்கியுள்ள கொள்கைதான் இந்தப் புதிய கல்விக் கொள்கை.

அனைவருக்கும் 14 வயது வரை கட்டாயக் கல்வி எனும் அரசமைப்புச் சட்டத்தின் இலக்கை நோக்கி நகராமல், தேர்வு, வெளியேற்றம் என்ற ‘பன்னாடை’ முறையை அறிமுகப்படுத்தி, வசதி படைத்தவர்களுக்கும், உயர்ஜாதிகாரர்களுக்கும் மட்டுமே உயர்கல்வி என்ற இலக்கை நோக்கி நகர்வதற்காகவே #NEP

கார்ப்பரேட்டுகளுக்கு குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களைத் தயாரிக்கவுமான நோக்கத்தைக் கொண்டதுதான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசியக் கல்விக் கொள்கை எனும் நச்சுக் கொள்கை. #nepisbrahmanism

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ‘தேசிய கல்விக் கொள்கை 2020' அய் முற்றிலுமாக நிராகரிப்போம்.
கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம்.

பெற்றோர்களே, மாணவர்களே விழித்துக் கொள்ளுங்கள்!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling