Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Aug 21, 2020, 8 tweets

#அமெரிக்கஅதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபருக்காக போட்டியிடும் கமலா ஹாரிஸ் அவர்களின் தாயார் சியாமளா கோபாலன் அவர்கள் 1958லேயே சென்னையிலிருந்து அமெரிக்கா சென்று உயர் கல்வி படிக்கும் அளவிற்கான வாய்ப்புகளை பெற்றிருந்தார்.

அது எப்படி சாத்தியமென்றால்??

சியாமளா கோபாலனின் தந்தை கோபாலன் அவர்கள் ஆங்கிலேய ஆட்சி நிர்வாகத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் அளவிற்கு இருந்ததாகச் சொல்கிறார்கள்.

கல்வி வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே அப்படிப்பட்ட உயர் பொறுப்புகளை அடைய முடியும்.

சரி அந்த சமயத்தில் எனது #தாத்தா என்ன செய்து கொண்டிருந்தார்??

எங்கள் ஊர் பாளையக்காரர்கள் நிலத்தில் கிணற்றில் மாடுகளை கட்டி நாள் முழுவுதும் கவளை இறைத்துக்கொண்டிருந்தார்.

அந்த மாடுகளுக்கு சற்றும் குறைவில்லாத உழைப்பை செலுத்தி.சரி அவர் ஏன் படிக்கவில்லை??

அப்பொழுது இருந்த சமூக அமைப்பு. ஒரு சூத்திரனுக்கு படிப்பு கூடாது, அவன் வேலை நாள் முழுவதும் வயல்களில் உழைப்பதுதான் என்று நம்பச்செய்திருந்தார்கள்.

படிப்பும் அறிவும் பிறப்பின் அடிப்படையிலானது,உங்களுக்கு எல்லாம் படிப்பு வராது என்று சமூகத்தின் பெரும்பாலானவர்களை நம்ப வைத்திருந்தார்கள்.

இன்று வரை அந்த நம்பிக்கை இன்னும் சிலருக்கு இருக்கிறது.

அவர்களிடம் நான் கேட்பது ஒன்றுதான், உங்கள் மீது நம்பிக்கையில்லையென்றால் பரவாயில்லை,

உங்கள் குழந்தைகளைப் பாருங்கள்.

அவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை கொடுக்கும்போது வேறு எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது புரியும்.

ஆனால்!!

இன்று தமிழகத்தின் மிகப்பெரும்பாலான குடும்பங்கள் கல்விக்கு மிகஅதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

இன்று தமிழகத்தில் மிக அதிக கல்லூரிகள் இருப்பதற்கு காரணம் தமிழக பெற்றோர்கள் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மட்டுமே.(அதற்காக திராவிடம், மசுரு,மட்டை என்று தூக்கிவர வேண்டாம்)

இன்னமும் குஜராத்திலும், பீகாரிலும், உத்திரப்பிரதேசத்திலும், மேற்குவங்கத்திலும் உள்ள சூத்திரர்கள் ஏன் கல்வியில் மிகவும் பின் தங்கியிருக்கிறார்கள்??

நாம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது வட இந்தியர்கள் ஏன் மசூதியை இடித்து கோவில் கட்ட முக்கியத்துவம்

கொடுக்கிறார்கள்?? என்று யோசித்துப்பாருங்கள்.

இன்று என் குழந்தைகளுக்கு உலகத்தரமான கல்வி வாய்ப்புகளை தரமுடிந்ததற்கு அடித்தளமிட்ட #காமராசர் போன்ற தலைவர்களுக்கு என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.😍

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling