அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு.
அதிமுக : திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் வந்தது.
திமுக : அப்ப ஏன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு நடக்கல.?
அதிமுக : அதான் திமுக வழக்கு போட்டு தடை வாங்கிடுச்சே. அப்புறம் "நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு" என்று
காங்கிரஸிடம் சொல்லி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்துடுச்சே.
திமுக :- திமுக ஆட்சி முடிந்தும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2016 வரை நீட் தேர்வு நடக்கல..?
அதிமுக :- அதான் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நீட் தேர்வை, திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில்
2013ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதே.
திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு இப்ப வந்தது..?
அதிமுக :- 2013 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு மீது காங்கிரஸ் அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததால்.
திமுக :- எப்ப மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது..?
அதிமுக :- 2013 ஆகஸ்ட் மாதம்.
திமுக :- அப்ப காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்ததா..?
அதிமுக :- 2013 மார்ச் மாதமே திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதே.
திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு வர திமுக காரணம் ன்னு சொல்லுறீங்க..?
திமுக :- ம்ம்ம்... சரி, நீட் தேர்வு மறுசீராய்வு மனு வழக்கை நடத்தி நீட் தேர்வு வேண்டும் என்று வெற்றி பெற்றது யார்..?
அதிமுக :- 2014 லிருந்து 2016 வரை பாஜக அரசு தான் வழக்கு நடத்தி வெற்றி பெற்றது.
திமுக : நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு என்று இருந்த பிரிவை நீக்கி, அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு என்ற புதிய மசோதாவை 2016ல் கொண்டு வந்தது யார்.?
அதிமுக : பாஜக அரசு தான்
திமுக : மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக வாக்களித்ததே, அதிமுக என்ன செய்தது.?
அதிமுக :- எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தோம்.
திமுக :- அப்ப... அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு சட்டம் 2016ல் யாரால் வந்தது..?
அதிமுக :- பாஜக அரசாலும் அதிமுகவாலும் தான் வந்தது..!
#BanNEET_SaveTNStudents
#TNAgainstNEET
#BanNEET
#நீட்என்ற_மனுநீதிதேர்வு
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
