Dr.Aravind Raja Profile picture
CEO - AIIMS Hospital | Brain Transplant Specialist | INDIA against BJP |

Sep 15, 2020, 8 tweets

NEET Thread 👇

NEET முன்வைத்தது யார்.?

~ தேசிய மருத்துவ கழகம்..

எப்பொழுது.?

~ 2010 ஆண்டு..

அப்போது ஆளும் கட்சி எது.?

~ ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மற்றும் தி.மு.க..

நிலைபாடு என்ன.?

~ நாடாளுமன்ற செயற்குழு NEET ஐ எதிர்க்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளித்தது..

(1/8)

NEET அமலாக்கத்திற்கு முன்னர் கலைஞரின் நிலைப்பாடு என்ன.?

~ NEET ஐ முழுமையாக எதிர்த்து கலைஞர், திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.

2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது..

(2/8)

NEET முற்றிலுமாக தடை செய்யப்பட்டது..

மேலும் NEET திட்ட வரைவு இந்திய நாட்டிற்கு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் மொழிந்தது குறிப்பிடதக்கது..

(3/8)

மீண்டும் NEET உயிர் பெற்றது எப்போது.?

~ இந்தியாவின் பாதுகாவலர், தற்போதைய பிரதமர் திரு.மோடி 2015 ஆம் ஆண்டு பதவியேற்ற பின் NEET தடையை எதிர்த்து இந்திய அரசாங்கம் மேல் முறையீடு செய்து 2016 ஆம் ஆண்டு NEET இந்தியாவில் அமல்படுத்தப்பெற்றது.

(4/8)

2016 - முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் தமிழகம், குஜராத் மற்றும் மேலும் இரண்டு மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

செல்வி.ஜெயலிலதா அவர்களின் மறைவிற்கு பின்னர் தற்போதைய அடிமை அரசு ஆட்சி பொறுப்பேற்றனர்.
இது தமிழகத்தின் இருண்ட காலம் எனலாம்.

(5/8)

2017 ஆம் ஆண்டு திருமதி.நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு NEET லிருந்து விலக்கு அளிக்கப்படும் என உறுதிமொழி அளித்தார் டெல்லி செல்லும் போது..

அப்போது அவர் மத்திய வணிகதுறை அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(6/8)

டெல்லி சென்ற இரண்டு நாட்களுக்கு பின்னர் திரு.குருமூர்த்தியின் தலையீட்டால் NEET ல் விலக்கு அளிக்க இயலாது என மொழிந்தார்.

அப்போது நிர்மலா சீதாராமன் பாதுகாப்புதுறை அமைச்சராக பதவி ஏற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

(7/8)

இவர்கள் இருவரின் துரோகத்தினால் தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
இன்று மோதிலால், ஆதித்யா என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது..

ஆனால் சங்கிகளோ தி.மு.க, காங்கிரஸ் என ஏக மொழி அடுக்குகின்றனர், பல அரசியல் காரணங்களுக்காக..🤧

(8/8)

#TNagainstNEET

#BanNEET_SaveTNStudents

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling