Aasif Profile picture
யாதும் ஊரே, யாவரும் கேளிர் ; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ; மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு.

Sep 15, 2020, 15 tweets

1957-ஆம் ஆண்டு அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார் தந்தை பெரியார். அரண்டு போன அரசு அவசர அவசரமாக தேசிய அவமதிப்பு தடைச் சட்ட மசோதாவைக் கொண்டு வருகிறது. சட்ட மன்றத்தில் மசோதாவைக் கொண்டுவந்து முன்மொழிந்தவர் பக்தவசலம். முதல்வர் = காமராஜர்.

1.

1957-ஆம் ஆண்டு தேர்தலின் போது காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார் தந்தை பெரியார். முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்ற திமுக கடும் போட்டியைச் சந்தித்து 15 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

2.

எந்தக் கட்சியின் வெற்றிக்காக பெரியார் பாடுபட்டாரோ அந்தக் கட்சிதான் சட்ட எரிப்புப் போராட்டத்தைத் தடுக்க இந்த அவசரச் சட்டம் கொண்டு வந்தது. சட்டமன்றத்தில் இருந்த அனைத்து கட்சிகளும் அதை ஆதரித்தனர். பெரியார் எதிர்த்த திமுக மட்டுமே சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

3.

தந்தை பெரியார் மீது அறிஞர் அண்ணாவிற்கு இருந்த பற்றும் பாசமும் அந்த சட்ட முன்வரைவு விவாதத்தின் போது நன்கு புலப்பட்டது. சட்ட முன்வரைவை பின்வாங்கிக் கொள்ள வேண்டுமென ஒரு நீண்ட உரையை அறிஞர் அண்ணா ஆற்றினார்.

4.

சட்டமன்றத்தில் 4 இடங்களுடன் இருந்த CPI கட்சி கண்ணை மூடிக் கொண்டு இந்த அவசரச் சட்டத்தை ஆதரித்தது. அவையில் பேசிய CPI உறுப்பினர் மு.கல்யாணசுந்தரம் நம்முடைய ராஜ்ஜியத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை ஒடுக்க தகுந்தநடவடிக்கை எடுக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் என்றார்.

5.

இந்த மசோதா தீதானது, தேவையற்றது, கொடுங்கோன்மைக்கு வழி கோலுவது என்று கூறி தன் உரையை ஆரம்பித்த அண்ணா, காந்தியாரின் உயிரையே வாங்கி விட்ட சாதி வெறியை, மத வெறியை அடக்க ஒரு சட்டம் கொண்டு வந்தால் அதை வரவேற்கலாம், இதை ஆதரிக்க முடியாது என்றார்.

6.

அரசியல் சட்டத்தை கொளுத்துவேன் என்று பெரியார் சொன்னாரென்றால் அவருக்கு அதன் பேரில் இருக்கும் வெறுப்பினால் அல்ல. அதை எந்தக் காரணத்திற்காக கொளுத்தச் சொல்கிறேன் அந்தஎன அவர் எடுத்துச் சொல்கிறாரோ அந்தக் குறைபாடுகளை எல்லாம் நீக்க அரசு முன்வர வேண்டும் என்கிறார்.

7.

பெரியாரின் ஆதரவைப் பெறாத நான் அவருக்காக வாதாடுகிற நேரத்திலே நீங்களெல்லாம் அவரை எந்தக் கூண்டில் தள்ளுவது என்று பேசுவதும், தள்ளுகிற கூண்டு இரும்புக் கூடாக இருக்க வேண்டும் என கல்யாணசுந்தரம் சொல்வதும், அதற்கு பெரிய பூட்டு பூட்டு வேண்டுமென சங்கரன் சொல்வதும் விசித்திரமானது.

8.

காமராஜர் சென்னையில் பெரியார் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் 'நான் அதிகாரத்துக்கு வந்தால் நான் செய்யக் கூடிய முதல் காரியம் சாதி ஒழிப்பாகத்தான் இருக்கும்' என்றார்.
9.

பெரியார் அவர்கள் தன்னுடைய செல்லப்பிள்ளை ஆட்சிக்கு வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இரவு பகல் பாராமல் உழைத்து உங்களை இங்கே உட்கார வைத்திருப்பது நீங்கள் சாதி ஒழிப்பிற்கு ஆதரவாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான்.
அதை மீறி அவரை நட்டாற்றில் விடுகிறீர்கள் நீங்கள்.

10.

இப்போது தேவை சந்திப்புத்தானே தவிர சட்டமல்ல. இப்போது தேவை ஒருவரை ஒருவர் கலந்து பேசுவதே தவிர ஒருவரை ஒருவர் மிரட்டுவதல்ல. ஜனநாயகத்தை மனதில் கொண்டு, விஷயம் என்னவென்று ஆராய்ந்து, பெரியாரைச் சந்தித்து அவர் மூலம் இந்த நாட்டிலே நம்மை ஏற்பட நீங்கள் வழி செய்ய வேண்டும்.

10.

பதிலளித்துப் பேசிய சி.சுப்பிரமணியம், பெரியாரும் அண்ணாவும் தந்தையும் மகனும் போல இருக்கிறார்கள். இப்போது எதோ மனக்குறைகள் ஏற்பட்டு அதன் காரணமாக பிரிந்து இருக்கலாம். அவர்களுடைய அடிப்படையான தத்துவங்களில் பிரிவில்லை எனபது புரிகிறது என்கிறார்.

12.

பக்தவச்சலம்: பெரியாருக்கும் முதல்வருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; சங்க காலத்து ஒருதலைக் காதல் போல பெரியாருக்கு காமராஜர் மீது காதல் ஆனால் காமராஜருக்கு அது இல்லை.வேண்டுமெனில் தந்தை-மகன் உறவு கொண்டாடும் அண்ணாதுரை பெரியாரைச் சந்தித்து போராட்டத்தை நிறுத்தச் சொல்லட்டும் என்றார்.
13.

இதற்கு பதிலளித்த அண்ணா, மகன் தந்தை செய்ததை மறந்து திரும்பவும் அவரிடத்தில் ஒட்டிக்கொள்வது குற்றமல்ல, குணங்களில் ஒன்று. நான் சென்று பெரியாரை சந்திக்கிறேன். அது வரை சட்டத்தை நிறுத்தி வையுங்கள் என்கிறார். ஆனால், திமுகவின் எதிர்ப்பை மீறி சட்டம் நிறைவேறியது.
14.

இதன் மூலம், தந்தையின் மீது இருந்த பாசத்தை ஆட்சிக்கு வருவதற்கு 10 ஆண்டு முன்பே வெளிப்படுத்திய அண்ணா-வின் அன்பும் புரிந்தது. The Rest is history !!

#Anna112
#Periyar142
#DMK

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling