Asiriyar K.Veeramani Profile picture
Official account of DK President Asiriyar K.Veeramani

Sep 17, 2020, 9 tweets

அன்றும் என்றும் பெரியார்! பெரியார்! பெரியார்!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று! #HBDPeriyar142

ஒப்பாரும், மிக்காருமிலாத உயர் தனி மனிதர்!
ஓய்வறியாத உழைப்பின் எல்லை அவர்!
உண்மைகளை எவர்க்கும் அஞ்சாது வெளியிடும் துணிவின் தூய உருவம்! #HBDPeriyar142

ஒப்புவமை காட்ட இயலாத சுயசிந்தனையாளர்!
தன்னலம் சிறிதும் புகாத தன்னேரில்லாத தகைமைப் பொதுத்தொண்டு!
#HBDPeriyar142

தனது செல்வம், தன்னை நம்பி மக்கள் தந்த செல்வம் எல்லாவற்றையும் திரட்டி மக்களுக்குத் தந்து மகிழ்ந்த மகத்தான அருட்கொடையாளர்!
மானமீட்பர்! #HBDPeriyar142

பேதமிலா பெருவாழ்வே மனித வாழ்வு - இதில் ஜாதி ஏன் - பெண்ணடிமை ஏன்? என்று கேட்டு உரிமை மீட்ட உத்தமத் தலைவர்!
#HBDPeriyar142

இனிவரும் உலகம்பற்றி சரியாகக் கணித்த சமூக விஞ்ஞானி! #HBDPeriyar142

‘‘மானமும் அறிவும் மனிதர்க்கழகு'' என்று மனிதர்களுக்கு உண்மை அழகு எது என்று சரியாகக் கணித்த மானமீட்பர்! #HBDPeriyar142

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டில் பயன் ஏது? என்று சொடுக்கிக் கேட்ட சோர்விலா சொல்வேந்தர்! #HBDPeriyar142

துறவறத்தையும் தாண்டிய தொண்டறத்தின் இமயம்! #HBDPeriyar142

- இத்தகைய பண்புத் தொகையின் கூட்டான நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 142 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா - தமிழ்நாட்டுப் பட்டிதொட்டி முதல் பட்டணங்கள் வரை கொண்டாடப்படுவது ஏன்?

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling