Asiriyar K.Veeramani Profile picture
Official account of DK President Asiriyar K.Veeramani

Sep 17, 2020, 9 tweets

இந்தக் கரோனா தொற்றால் தன்னம்பிக்கை தளராது, தலைநிமிர்ந்து நிற்க பெரியாரே நம் ஊன்றுகோல்!
அவர் ஒரு அருமாமருந்து - நம் நோய் தீர்க்க!
#HBDPeriyar142

பெரியார் என்பவர் ஒரு தனி நபர் அல்லர் - வெறும் உருவமும் அல்ல.
தத்துவம்! அசைக்க முடியாத இலட்சியம்.
#HBDPeriyar142

காலத்தால் முந்துறும் கருத்துப் பேழை! #HBDPeriyar142

அறியாமை இருட்டில் அல்லற்பட்டு ஆற்றாது அழுது கண்ணீர் விடும் மக்களின் ஒரே நம்பிக்கை - அதுவும் நன்னம்பிக்கை! தன்னம்பிக்கை!! #HBDPeriyar142

அவர் உடலால் மறைந்து 47 ஆண்டுகள் ஆகின்றன. எனினும், ‘பெரியார் வாழ்க' என்று முழக்கமிடுகிறார்களே, உலகமெங்கும் என்ற புரியாதோர் கேள்விக்கு இதே விடை! #HBDPeriyar142

பெரியார் - என்பது தத்துவம் - மனித குலத்தை வாட்டும் பேதங்களை, அறியாமையை, அறிவு வறுமையை, மானப் பஞ்சத்தை விரட்டும் புரட்சி ‘சுனாமி'யாகும்!
எனவேதான், பெரியார் தேவைப்படுகிறார், அன்றும் - இன்றும் - என்றும்! #HBDPeriyar142

காற்றும், நீரும் எப்படி மனித வாழ்வுக்கு எப்போதும் தேவையோ; அதுபோலத்தான் பெரியாரின் சிந்தனைகளும், செயற்முறைகளும் நமக்கு ‘விழி திறக்கும் வித்தகங்கள்' ஆகும்! #HBDPeriyar142

உலகம் அவரது மண்டைச் சுரப்பை தொழுகிறது - பின்பற்றுவதில் போட்டிப் போடுகின்றது!
எனவே, பெரியாரே நம் ஒளி!
அவர் நம் லட்சியம் நம் வழி!
#HBDPeriyar142

அவரது போராட்ட வடிவங்களே நமக்குத் தீர்வுகள்!
வாழ்க பெரியார்!
வாழ்க! வாழ்கவே!!
அனைவருக்கும் அய்யா பிறந்த நாள் வாழ்த்துகள்! #HBDPeriyar142

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling