அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Sep 17, 2020, 19 tweets

#அறிவோம்_மகான்கள்
#ஸ்ருங்கேரி #ஆசார்யாள் #ஸ்ரீசந்திரசேகரபாரதி துங்கபத்ரா நதியின் கரையில் பசுமை போர்த்திய குன்றுகளின் மேல் ஆதிசங்கரர் நடந்து போய் பீடத்தையும் சாரதாம்பாள் ஆலயத்தையும் அமைத்ததாக வரலாறு கூறுகிறது. சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் ‘பிரம்ம வித்யா’ சொரூபமாக அதாவது

பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள். ஆதிசங்கரர் தொகுத்த அத்வைத வேதாந்தம் இன்றும் உயிர்ப்புடன் திகழும் உருவமாக சாரதா

பீடம் இருக்கிறது. அந்த பீடத்தை அலங்கரிக்கும் ஆசார்யர்கள் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கரை கண்டவர்கள். கீதையை வாழ்ந்து காட்டுபவர்கள். 34வது பீடாதிபதியாக சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த அவதார புருஷர் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஆவார். (1892’1954). இவரது சரித்திரம் அற்புதமானது. அதிசயிக்க

வைக்கும் ஒன்று! அவர் ஒரு சிறந்த யோகி. ஜீவன் முக்தர். சிருங்கேரியில ஒரு தம்பதிக்கு பன்னிரண்டு குழந்தைகள் பிறந்து எல்லாமே இறந்து போய்விடுகின்றன. அவர்கள் சிருங்கேரி ஆசார்யாள் சச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் இடம் முறையிட்டனர். அந்த ஆசார்யாள் ஒரு சுவாசினி பூஜையின் போது

ஆசீர்வாதம் செய்து ‘உனக்கு ஒரு குழந்தை பிறப்பான். அவனை மடத்துக்கு கொடுத்துவிடு’ என்று சொல்லி குழந்தை பிறந்த உடனே நரஸிம்ம சாஸ்த்ரி என்று பெயர் வைத்து மடத்தில் கொண்டு வந்து அவரை வளர்த்து உருவாக்கினார். அவர் தான் அடுத்த ஆசார்யாள் சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள். அவரோட இருபது வயதில் அவரை

மடாதிபதியாக நியமித்து விட்டு நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் பரமபதம் ஏகினார். குரு பரம்பரையை வெளிப்படுத்தும் விதமாகவே எட்டாம் நூற்றாண்டு முதல் இன்றளவும் சிருங்கேரி மட குருமார்கள் தமது பட்டப் பெயரில் ‘பாரதி தீர்த்த’ எனும் பட்டத்தை சூட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது. அவரோட பத்து வயதில்

மடத்தில் அவரிடம் பணம் கொடுத்து ஏதோ வாங்கி வர சொல்லியிருக்கிறார்கள். அவர் மூக பஞ்சசதீ ஸ்தோத்திரத்தை சொல்ல ஆரம்பித்து என்ன வாங்க சொன்னார்கள் என்பதெல்லாம் மறந்து ஐநூறு ஸ்லோகமும் சொல்லி முடித்தப் பின், ஒரு பத்து கிராமம் தள்ளி வந்து, எங்கே வந்தோம் எதற்கு கிளம்பினோம் என்று புரியாமல்

திரும்ப வந்து கேட்டாராம். அப்படி சின்ன வயதிலேயே மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தின் இனிமையில மயங்கி ஒருவர் சமாதி நிலைக்கு போக முடியும் என்றால் அவர் பிறவியிலேயே மஹான் என்பது தெரிகிறது. சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் இருபது வயசுல பீடத்துக்கு வந்து நாற்பது வயது வரை பூஜை, பயணங்கள் மேற்கொண்டு

மக்களுக்கு தரிசனம் கொடுத்து, நல் உபதேசங்கள் முதலிய அனைத்தும் செய்துவந்துள்ளார். அவருக்கு வால்மீகி இராமாயணத்தில் மிகுந்த விருப்பம். சிறு வயதில் இருந்தே வால்மீகி இராமாயணம் நிறைய பாராயணம் செய்துள்ளார். அருகில் ஒரு பலகை போட்டு அனுமார் கேட்கிறார் என்று அனுமனுக்கு இராமாயாணப் பாராயணம்

செய்து கொண்டே இருப்பாராம். பீடத்துக்கு வந்த பின் அவர் சந்திரமௌலீச்வர பூஜையை முடித்துவிட்டு பல மணி நேரம் இராமாயணம் பிரவசனம் செய்வார். காஞ்சி மகா பெரியவர் சன்யாசிகள் கூட அனுபவிக்கும் ஞானத்தை கொடுக்கக் கூடிய ஒரு கிரந்தம் இராமாயணம் என்று கூறியுள்ளார். சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளுக்கு

நாற்பது வயது ஆன பின் மடத்தினை நிர்வாகம் செய்ய முடியவில்லை. ஜீவன்முக்தராக ஆத்மாராமராக அந்தர்முகமாக போய்விட்டார். ஒரு உத்தம சிஷ்யருக்கு சன்யாசம் கொடுத்து அடுத்த ஆச்சர்யாளாக அமர்த்திவிட்டு அவர் எப்போதுமே தனிமையில் இருந்தார். ஏதோ சில சமயங்களில் சங்கர பாஷ்ய பாடங்களில் கலந்து கொண்டு

இருந்துள்ளார். பண்டிதர்களை வெகு சில சமயங்களே சந்தித்துள்ளார். வெளியில் வந்து மக்களுடன் பழகவில்லை. சதாசிவ ப்ரம்மேந்திரர் போல இடைவிடாது ஒவ்வொரு கணமும் இறையுணர்வில் உன்மத்தம் பிடித்தது போல அவர் வாழ்ந்தது பலரையும் திகைப்படைய வைத்தது. அவரது ஞான நிலையைச் சற்றும் அறியாத அரசாங்கம் உண்மை

நிலையைக் கண்டறிந்து வருமாறு டாக்டர் எம்.வி.கோவிந்தசாமி என்ற மருத்துவரை அனுப்பியது. சிறந்த உளவியல் நிபுணரான அவர் ஒரு வாரம் தங்கியிருந்து தேவையான தகவல்களைச் சேகரித்தார். ஆனால் ஆசார்யரைப் பற்றி என்ன முடிவெடுப்பது என்பது அவருக்கு புலப்படவில்லை. தான் கிளம்ப வேண்டியதற்கு முந்தைய தினம்

ஆசார்யர் ‘அந்தர்முக’ நிலையிலிருந்து வெளி வந்து விட்டார் என்று கேள்விப்பட்டு அவரது தரிசனத்திற்காக வந்து ஆசி பெற வரிசையில் நின்றார். அவரைப் பார்த்த ஆசார்யாள், அதற்குள் ஏன் கிளம்ப வேண்டும்? வ்ந்த வேலையை இன்னும் நீங்கள் முடிக்கவில்லையே! என்று கேட்டார். திகைத்துப் போன டாக்டர்

குழப்பத்துடன் மௌனமாக நின்றார். “என்னை சோதிக்கும் படி கொடுத்த வேலையை முடித்து விட்டீர்களா? என்னுடைய வியாதி உங்களுக்குத் தெரிந்த மருந்துகளினால் குணப் படுத்தக்கூடியதா?” என்று ஆசார்யாள் வினவினார். திடுக்கிட்டுப் போய்விட்டார் மருத்துவர். அடுத்தாற்போல ஆசார்யாள், “என்ன செய்வது! இது என்

பிராரப்தம். இப்படித் தான் இருக்க வேண்டும். இதற்கு உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றார். கண்களில் நீர்மல்க விடை பெற்றுக் கொண்ட மருத்துவர் அரசாங்கத்திற்கு தன் அறிக்கையில், ‘ஆசார்யாளின் நிலை மருத்துவ சோதனைகளுக்கு அப்பாற்பட்ட உயரிய நிலை’ என்று குறிப்பிட்டார். அதுவரை நாத்திகரான

அவர் ஆத்திகராக மாறி விட்டார். அவ்வாறு இறையுணர்வோடு ஒன்றி இருபது வருடங்கள் இருந்துவிட்டு துங்கா நதியில் ஜலசமாதி அடைந்துவிட்டார் ஸ்வாமிகள். அவரின் ஆராதனை தினம் மகாளய அமாவாசை. சுவாமிகள் அவதரித்தது 1892 அக்டோபர் 16. அவர் சந்நியாசம் ஏற்றது 1912 ஏப்ரல் 7. அவர் தன் உடலை உகுத்த நாள் 1954

செப்டம்பர் 26. காஞ்சி சங்கர மடத்தை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிர்வகித்துக் கொண்டிருந்தபோது, பாரதி சுவாமிகள் 42 ஆண்டுகள் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக இருந்தார். இருவருமே தெய்விகமான அருளாளர்கள். ஒரே தருணத்தில் இரண்டு சந்திரசேகரர்கள் இரு வேறு மடங்களின் தலைமையை ஏற்று

நடத்துவது பராசக்தியின் லீலை. இருவருமே ஒரே விஷயத்தில் பார்வையைச் செலுத்தும் இரண்டு கண்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திரன் போன்ற குளிர்ச்சியான இரண்டு முனிவர்களும் அத்வைத ஞானத்தை சூரியன் போல் வெளிச்சமிட்டு உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling