#thread #read_full #Brahminism #brahmin_Govt #BJP_Bramhmin_party #BJP_fails #save_indian_culture
இந்தியாவின் 12000(!) ஆண்டு கால வரலாற்றை முழுமையாக ஆராய (!!) ஒரு வல்லுநர் (!!!) குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. (1/7)
இதில் உறுப்பினர்களாக இடம் பெற்றிருப்பவர்கள் யாரென்று பார்த்தால்
தீட்சித், பிஷ்ட், மணி, சந்தோஷ் சுக்லா, ரமேஷ் குமார் பாண்டே, மக்கன் லால், ஸ்ரீவஸ்தவா, முகுந்த் ஷர்மா, சாஸ்திரி, ஆர்.சி. ஷர்மா, மிஸ்ரா, பலராம் சுக்லா, ஆஸாத் கௌஷிக், எம்.ஆர். ஷர்மா. (2/7)
பெயரில்லாத அந்த 15 மற்றும் 16 வது நபரும் பிராமணர்களாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
இவர்கள் எத்துறை சார்ந்த வல்லுனர்கள் என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால்,
• ஆறு பேர் சமஸ்கிருத கல்வித்துறையில் உள்ளவர்கள்.
• வரலாற்று, (3/7)
தொல்பொருள் ஆய்வு அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் எனக் காட்டப்படும் நான்கைந்து பேரும் வலதுசாரி-சங்கிகளின் குரலைப் பேசுகிறவர்கள்.
• ஒருவர் பிராமண சங்கத் தலைவர்.
• ஒருவர் கனடாவில் வசிக்கும் மருத்துவத்துறை ஆய்வாளர். (4/7)
(ஆனால் புல்வாமா முதல் தில்லி கலவரம் வரை சங்கிகளின் குரலை விஞ்ஞானி என்ற பெயரில் தொலைக்காட்சிகளுக்கு வழங்குபவர்.)
• உறுப்பினர்களில் ஒரு தமிழரும் கிடையாது. தென் மாநிலங்களிலிருந்துகூட யாரும் கிடையாது. ஒரு பெண்ணும் கிடையாது. (5/7)
அத்தனை பேரையும் ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் அனைவரையும் இணைக்கும் ஓர் மெல்லிய இழை உண்டு. ஆம்., இவர்கள் அத்தனை பேரும் பிராமணர்கள்.
எழுதப்பட இருப்பது இந்திய வரலாறா, பிராமணர்களின் வரலாறா? இல்லை சமஸ்கிருத வரலாறா? வரலாற்று அறிஞர்கள், (6/7)
ஆய்வாளர்களில் பிராமணர்களைத் தவிர வேறு யாருமே கிடையாதா?
இந்தியாவில் வேறு மொழி, பண்பாடு, கலாச்சாரமெல்லாம் இல்லவே இல்லை என்று முடிவே செய்து விட்டார்கள். இந்திய வரலாறு-பண்பாடு-கலாச்சாரம் என்றால் சமசுகிருதம்-பிராமணர் மட்டுமே என புதிய வரலாறு எழுத இருக்கிறார்கள். (7/7)
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
