Sakthivel@NTK Profile picture
Rally Rider Racer - தீவிர தமிழ் தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா

Sep 19, 2020, 7 tweets

#உறவுகளுக்கு_வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻

#இரங்கல்_செய்தி

தமிழ்தேசிய அரசியல் களத்தின் முன்னோடியும், தலைவர் பிரபாகரன் அவர்களின் மீது அளப்பரிய பற்றாளர், அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் உற்ற துணையாக உடன் நின்ற மாமா #சாகுல்_அமீது அவர்கள் இன்று (19/09/2020) உடல்நலம் குறைவின் காரணமாக - 1/6

தவறிவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

1974 - 82 ஆண்டு காலக்கட்டத்தில் திருவாரூரில் வணிக நிறுவனம் நடத்தி அங்கேயே வளர்ந்தவரான நமது சாகுல் அமீது ஐயா அவர்கள் அந்த காலகட்டத்தில் #தமிழினம் சார்ந்து வெளிவந்த மிகசொற்ப இதழ்களில் ஒன்றான *'தமிழ் முழக்கம் - 2/6

வெல்லும்'* இதழை நடத்தியவராவார்.

2002ம் ஆண்டு, தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் உலகச் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். ஈழத்தின் மீதும் #தலைவர்_பிரபாகரன் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட #மாமா_சாகுல்_அமீது, தலைவரின் நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னை ஆனந்தா - 3/6

திரையரங்கில் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டு 17 மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர், #பழ_நெடுமாறன் எழுதிய, தமிழீழம் சிவக்கிறது எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத் துரோக - 4/6

வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார்.

ஐயா சாகுல் அமீது
நாகை மாவட்டத்தின் மண்ணின் மகன், 25 ஆண்டுகால அரசியல் கள போராளி, #தமிழ்_முழக்கம்_சாகுல்_அமீது அவர்களின் பேரிழப்பு நாம் தமிழர் கட்சியின் ஈடுசெய்ய முடியாத ஒன்று. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் - 5/6

தமிழ்தேசிய சக உணர்வாளர்களுக்கும், புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் உணர்வான உறவுகளின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

செய்தி பகிர்வு
வே.திருமுருகன்
மாநில செய்தி தொடர்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி - 6/6

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling