🌺Bhartha Varsham and Sanathana Dharmam🌺
#BharathVruksh
🌿வைஸ்ய தர்மம் 🌿
வைஸ்யர்கள் என்பவர்கள் வாணிபம் செய்பவர்கள் என்பதைப் பார்த்தோம். இவர்களது வாழ்க்கைக்கான தர்மமும் வரைமுறைப் படுத்தப்பட்டதே.
வைஸ்யர்கள் அநேகமாக ஒரே இடத்தில் கூட்டமாக வாழ்ந்தனர். இவ்வர்ணத்தில் வாணிபம் செய்வோர், விவசாயிகள், பண்ணைகள் வைத்து ஆநிரை வளர்ப்போர், குதிரை, ஆடு, எருமை போன்றவை வளர்த்து விற்கும் வியாபாரிகள், கலைவாணர்கள் போன்றோர் அடங்குவர்.
இவர்கள் அரசன் மற்றும் மக்களுக்குத் தேவையான பொருட்களை
வியாபாரம் செய்வதற்காக, அனைவரும் எளிதில் வந்து செல்ல வசதியாகவும், பொருட்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதற்காகவும், இவர்களது வாணிபத் தலங்களை ஊரின் மத்தியில் வைத்தனர். வெளியிலிருந்து கொண்டு வரும் பொருட்களைப் பாதுகாப்பாக ஒரே இடத்தில் வைக்க, கிடங்கினை ஏற்படுத்தினார்கள்.
அங்கிருந்து எளிதில் கடைகளுக்கு பொருட்களைக் கொண்டு செல்வதற்காகவும், இவர்கள் வாணிபத்துக்காக ஊர்விட்டுச் செல்கையில் இவர்களது குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்கவும், இவர்களது வசிப்பிடமும் நகரம் மற்றும் ஊரின் மத்தியிலேயே அமைந்திருந்தது.
இவர்களது வாழ்வியல் தர்மத்தைப் பொறுத்தவரை,
1) இவர்களுக்கும் குறுசிகை வைத்தலும், முப்புரிநூல் அணிதலும் கண்டிப்பான ஒன்றாக இருந்தது. இவர்களும் மூன்று வேளை நீராடி இறைவனை வணங்க வேண்டும்.
2) இவர்களுக்கும் பலதார அனுமதி இருந்தது. இவர்கள் வெளியூர் சென்று திரும்ப பல வாரங்களோ மாதங்களோ ஆகும்.
பயணத்தின் போது ஆணுக்கு ஏதேனும் நேர்ந்தால், மேலும் அவர்களது குடும்பத்தைப் பாதுகாக்க, அவர்களின் உறவு முறைகளிலேயே யாரேனும் ஒருவர் அப்பெண்ணை மணக்க வேண்டும். இதுவும் இவர்களின் தொழில் காக்கும் நிமித்தமே ஏற்படுத்தப்பட்டது.
3) இவர்களுக்கும் சிறுவயதில் குருகுல கல்வி உண்டு.
எல்லோரும் போல் வாழ்க்கைக்கான பொதுக்கல்வியும் வைஸ்ய தர்மங்களும் மட்டும் போதிக்கப்படும்.
4)அத்துடன் வியாபாரத்திற்கான தர்மங்கள், எந்தெந்த இடங்கள் எங்கே உள்ளன, அதன் வரை படங்கள், செல்வதற்கான வழிகள், எவ்விடங்களில் எவற்றை வியாபாரம் செய்யலாம்,
எந்தெந்த பொருட்களை எவ்வாறு பாதுகாத்துக் கொண்டுசெல்ல வேண்டும், இவற்றுக்கு எத்தனை நாட்களாகும், வழியில் வரக்கூடிய ஆபத்துகள் என்ன, ஏதேனும் உடல் ப்ரச்சனைகள் வந்தால் அவற்றுக்கான மருத்துவத் தீர்வென்ன போன்ற அனைத்தும் இவர்களுக்கு கற்றுத் தரப்படும்.
5) இவர்கள் இசையிலும் நடணத்திலும் சிறந்து விளங்கினார்கள்.
6) இவர்களின் உடைகளிலும் இவர்களின் வேலை வசதிக்காகவே, ஆண்களின் முழங்கால் வரை கச்சமும், பெண்களுக்கு கணுக்காலுக்கு மேலாக இருக்கும்படி புடவையும் அணிவது கொண்டு வரப்பட்டது.
7) இவர்கள் எப்போதும் சுமைகள் அதிகம் தூக்குவதால்,
தலையில் கண்டிப்பாக தலைப்பாகை கட்ட வேண்டும்.
8) பழங்காலங்களில் மார்பை மறைக்கும் வழக்கம் கண்டிப்பாக பெண்களிடம் இருந்தது. ஆனால், அரசகுல மகளிர் மட்டும் மார்பகத்தை சட்டை போல கை, கழுத்து, இடைமேல் வரை அணிந்து, அதன்மேல் புடவை உடுத்தினர்.
பிறர் கச்சம் மட்டும் அணிந்து, புடவைத் தலைப்பினால் மார்பகத்தை இடையோடு மறைத்தனர். இடுப்பில் செருகும் புடவையில் முதுகுப் பாகத்தின் வழிவரும் முந்தானையின் ஒரு புறத்தை இழுத்து வலது தோளை மூடிக் கொள்வர்.
(இது இன்றும் மடிசார் கட்டும் பெண்கள் பலரிடம் வழக்கத்தில் உள்ளது.)
9) வியாபாரத்திற்காகச் சென்று திரும்பி வந்ததும் முதலில் அரசவைத் தலையாரியிடம் தாங்கள் சென்று வந்த ஊரின் விபரங்களை விளக்கமாகத் தரவேண்டும்.
பின் அங்கு வியாபாரம் செய்த பொருட்களுக்காக பெற்ற தாணியங்கள், பொருட்கள் போன்றவற்றின் கணக்கைத் தர வேண்டும்.
பின்னர், அரசில், இவர்களிடம் பெற வேண்டிய வரியை மக்களுக்குத் தேவையானவையாகப் பெற்றுக் கொண்டு, அவர்களின் பொருட்களை விற்க அதற்கான விலைகளையும் நிர்ணயித்துச் சொல்லுவார்கள். அதன்படிதான் வியாபாரம் செய்ய வேண்டும் என்பது தர்மமாக்கப்பட்டது.
10) ஊரில் நடக்கும் இறைவனுக்கான பணிகளுக்குத் தேவையான அனைத்தும் இவர்கள் தான் தேர்ந்து அளிக்க வேண்டும். அதே போல, இறைவனுக்கான சிறு சந்நிதிகளை உருவாக்கவும் இவர்கள் உதவ வேண்டும்.
11) ஊரில் நடக்கும் யக்ஞங்கள், இறைவழிபாடு போன்றவற்றிற்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு முக்கிய அதிகாரியாக,
வைஸ்ய வர்ணத்திலிருந்தே ஒருவர் நிர்ணயிக்கப்படுவார். அவரது செயல் வழிப்படுத்தலின் மூலம் மட்டுமே பிறர் நடக்க வேண்டும். அரசன் அதற்காகத் தரும் நிதியின்மீது செலவழிக்கும் கணக்குகளை மன்னரிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே, இவர்களுக்கு அதற்கான மரியாதை இருந்தது.
12) குருதட்சினையின் போது, குருவிற்கும் குருகுலத்திற்கும் தேவையான அனைத்துப் பொருட்களையும், தட்சினையாகத் தரவேண்டும்.
13) இவர்களில் ஆண்களின் வாழ்வுமுறை இடத்துக்கு இடம் மாறுவதாகவே இருந்தது. ஆனாலும், அவர்களின் வியாபாரக் கணக்குகள், சொந்த நாட்டு அரசனையே சார்ந்து இருந்தது.
இவர்கள் வாழ்க்கை முறை, தங்களுக்கான வணிகப்பொருட்களை விளைவித்து, அல்லது செய்து தரும் ஸூத்ர வர்ணத்தைச் சார்ந்தே இருந்தது. எனவே, தங்களுக்குப் பொருட்களும் தாண்யங்களும் தரும் ஸூத்ர வர்ணத்தினருடன் மிகவும் இணக்கமாக இருந்து வந்துள்ளனர். அங்கே இருந்தது நட்பின் இணக்கமே தவிர வர்ண பேதமில்லை.
இதுவே வைஸ்யர்களின் வாழ்க்கை முறையானது. அதையே வைஸ்ய தர்மம் என்றனர்.
நீங்கள் கவனித்துக் கொண்டு வரலாம், இவ்வாழ்க்கை முறைகளின் தர்மங்களின் படிப்படியாகத் தளர்வுகள் வருகின்றன என்பதை. ப்ராமண வர்ணத்தை விட க்ஷத்ரிய தர்மத்தில் சிறிது தளர்வுகள் அவர்களின் வாழ்கை முறையில் வந்தது,
இப்போது வைஸ்யர்களுக்கு அதைவிடத் தளர்வுகள் தரப்பட்டுள்ளது. இது ஸூத்ர தர்மத்தில் இன்னும் அதிகமாகும்.
☘️தொடரும்....☘️
🍁வாஸவி நாராயணன்🍁
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
