Avvai 🇮🇳 Profile picture
Retweets & Likes are not Endorsements

Sep 22, 2020, 10 tweets

விபூதியின் மகிமைகள்:

விபூதியை பூசிக்கொள்வது வேறு இட்டுக்கொள்வது வேறு. விபூதி பவித்ரமானது. தேவர்கள் அனைவரும், விபூதியை அணிவதன் மூலமே மேன்மை பெறுகின்றனர். விபூதியை பூசுவதால் கிடைக்கும் மகிமையை பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும்.

விபூதி என்றால் ஐஸ்வர்யம். அதனால் தான் விபூதியை, திரு நீறு என்கிறோம். விபூதியை பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக, விபூதி என்பது சக்தியை வழங்குவதற்கு ஏதுவான சாதனம். உடலின் சக்தி ஓட்டத்தை வழிநடத்தவும், கட்டுப்படுத்தவும் விபூதி பயன்படுகிறது.

நமது உடல் நிலையற்றது என நினைவூட்டுவதற்கு விபூதி சாம்பலை அணிகிறோம். இந்த உடல் என்பது கடைசியில் சாம்பல் தான். யோகிகள் எப்போதும் சுடுகாட்டிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைத் தான் பயன்படுத்துவார்கள்.

திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் "முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்" என்று பாடினார்.விபூதியைத் தேகம் முழுவதும் பூசிக்கொள்ள வேண்டும்.விபூதியைத் தரித்துக் கொள்வதினால் ஸகல ஐஸ்வரியங்களையும் அடையலாம்.

பூத, பிரேத, பைசாச சேஷ்டைகளிலிருந்து காப்பாற்றும் பெரிய ரக்ஷையாக இருப்பது விபூதியே.
திருநீற்றை இட்டுக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது.
மன்னனும் மாசறக் கற்றோனும் பிடி சாம்பலாகி விடுகிறார்கள். நாம் கடைசியில் சாம்பலாகத்தான் போகிறோம்.

இந்த வாழ்க்கை மாயமானது சாம்பல் மயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. மண்ணிலே பிறந்த நாம் மண்ணிலேதான் மடியப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் கடைசியில் மக்கி அதே மண்ணோடு மண்ணாகத்தானே ஆகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப்போகிற தத்துவம் அதுதான்.

இந்த உடலைச் சுத்தப்படுத்தி, இதனுள் உள்ள ஆத்மாவையும் பரிசுத்தப்படுத்த வல்லது பஸ்மமாகிய திருநீறு.
காலையில் வெளியே கிளம்பு முன், விபூதியை உடலின் குறிப்பிட்ட சிலபாகங்களில் பூசிக் கொண்டால், நம்மைச் சுற்றி இருக்கும் தெய்வீக சக்தியை, உள்வாங்க பெரிதும் உதவும்.

விபூதியை எடுக்க மோதிர விரலையும் கட்டைவிரலையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.உடலில் உண்மையிலேயே மிக முக்கியமான பகுதி மோதிர விரல்தான்.
அதிகபட்ச நன்மைகளைப் பெற, விபூதியை உங்கள் உடலில் இட்டுக் கொள்ள வேண்டிய இடங்கள், புருவ மத்தி, தொண்டைக்குழி, விலா எலும்புகள் சேரும் மார்புப் பகுதி.

இவைகள் மேல் தான் விபூதி அணியவேண்டும் என காலம் காலமாக நமது முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள்.
இதனால் இவ்விடங்களின் உள்வாங்கும் திறன் அதிகரிக்கும். நம் இந்தியக் கலாச்சாரத்தில், ஆன்மீக பண்பாட்டில், ஒரு மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு விபூதி ஒரு இன்றியமையாத உபகரணம்.

பஞ்சாக்ஷர மந்திரம் ஜபித்து வேல் வைத்து அளிக்கப்பட்ட விபூதி பல வியாதிகளை குணப்படுத்தி இருக்கிறது.
பக்தி நம்பிக்கையால் தான் வளர்கிறது. மஹான்களிடம், ஆச்சார்யர்களிடமிருந்து பெறப்படும் விபூதி சொல்லமுடியாத சக்தி பெற்றது.

திருச்சிற்றம்பலம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling