இந்தியாவுக்கு 101 லட்சம்கோடி கடன் கொடுத்தது யாரு.? #உலகவங்கி
உலக வங்கிக்கு நிதிஉதவி அளிப்பது யாரு.?
பலநாடுகளின் கார்ப்ரேட் கம்பெனிகள்.
சரி! அந்த கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு ஏது இவ்வளவு பணம்.?
5ரூ. பொருளை 500 ரூபாய்க்கு விற்று Businessman ரூபத்தில் மக்களை சுரண்டிக்கொழுத்தவர்கள்.
அதாவது ஒரு லட்சம் வெகுஜன மக்களிடம் சேர வேண்டிய பணத்தை ஒற்றை நபர் சுருட்டி கொண்டதால் வந்த பணமிது.
உலக பணக்காரனும் உள்ளூர் பணக்காரனும் அடித்தக்கொள்ளை.
#கடன் கொடுப்பது கழுத்தை நெரிப்பதற்குதான் என்பது இப்போது புரிந்திருக்கும்.
இத்தனை கடனும் மக்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி
செய்வதற்காக வாங்கப்பட்டதா?
இல்லவே இல்லை.
ஆடம்பரசாலை,ஆடம்பர ரயில் போக்குவரத்து, ஆடம்பர விமானநிலையம், ஆடம்பர சேட்லைட் என அத்துனை கடனும் ஆடம்பரத்திற்கான கடன்.
சரி கொடுத்த கடனை எப்படி மீட்டெடுப்பார்கள்.?
EIA 2020 - கனிமவளத்தை கடன் கொடுத்த கார்ப்ரேட் வேட்டை ஆடுவதற்கான ஒப்பந்தம்.
வேளாண் மசோதா 2020
விவசாயநிலத்தை கார்ப்ரேட் கைவசப்படுத்துவதற்கான ஒப்பந்தம்.
ஏன் கைவசப்படுத்த வேண்டும்.
உன் பசியை தீர்க்கவா.?
இல்லை.
பல உலக பணக்காரநாடுகள்
மற்ற எல்லாத்துறையிலும் வென்றுவிட்டது.அதனால் வளர்ச்சி பெயரில்
அந்த நாடுகளின் விவசாயம் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது.
அந்த நாட்டு மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு விவசாயத்தில் செழித்திருக்கும் மற்ற நாட்டின் நிலங்களை, வளங்களை
தன்வசப்படுத்த வேண்டும்.
அந்த நாட்டு மக்களை விவசாய கூலிகளாக மாற்றி மாடு வளர்ப்பதும்
#விவசாயம் செய்வதும் கூட்டுறவு பண்ணைகளின் மூலம் செய்யப்படும்.
அரசே நேரடியாக விவசாயிகளை
அரசின் கூலிகளாக மாற்றும்.
அதாவது தனியாரின் Wine factoryல் உற்பத்தி செய்யப்பட்ட மதுபானத்தை அரசே தன்கையில் எடுத்து அந்த Wineshopஐ தனியாருக்கு ஏலம் விட்டு வெகுஜனத்திடம் விற்றதை போல.
அதுபோல விவசாய நிலம் தனியாரிடம் கொடுக்கப்படும்.
அதெப்படி நான்தான் என் நிலத்திற்கு பத்திரம் பட்டா வைத்துள்ளேனே என்நிலம் எப்படி தனியாரிடம் கொடுக்கப்படும்??
முதலில் மசோதா மூன்றின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கலாம்.
அதாவது விவசாயிகளை கார்ப்ரேட் கடனாளியாக மாற்றும் ஒப்பந்தம்.
அந்த ஒப்பந்தத்தில் அப்படி என்னதான் எழுதப்பட்டிருக்கும்.?
1. இந்தப் பொருளை நீ விளைய வைத்து தா.
2. இவ்வளவு கொள்முதல் தந்தாக வேண்டும்.
3. பொருளுக்கான விலை முன்னரே தந்துவிடுகிறோம்.
4. பிற்கால விலையை பிறகு தீர்மானித்துக்கொள்வோம்.
5. பொருள் விளையும் பருவக்காலம் ஆறுமாதத்திற்கு
இவ்வளவு வட்டிவிகிதம்
கூடுதல் தந்தாக வேண்டும்.
6. பேரிடர், வெள்ளம், நெருப்பு, பூச்சிகள், தண்ணீர் தட்டுப்பாடு, பருவமழை பொய்த்தது என பயிர்எந்த காரணத்தால் அழிந்தாலும் அதற்கு முழுபொறுப்பு நேரடி விவசாயிகளாகிய தாங்கள்தான். அந்த அழிவிற்கு நாங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க மாட்டோம்.
7. ஒப்பந்த அடிப்படையில் விளைந்தப் பொருள் முழுவதுமாக
எங்களிடமே தந்தாக வேண்டும்.
பிறகு அந்தப் பொருள் எங்கள் நிறுவனத்தின் மூலமாக உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என பல சந்தைகளில் விற்கப்படும். தாங்கள் நேரடியாக தங்கள் வீட்டுக்குத்தேவையானப் பொருளை அங்கு வாங்கிக் கொள்ளலாம்.
8. ஒரு வேளை ஒருப்பொருள் விதைக்கும் போது அதன் விலை எதுவோ அந்த விலை தான் ஏற்றுக்கொள்ளப்படுமே தவிர புதியவிலை ஏற்றுகொள்ளப்படமாட்டாது.
9. பொருளின் தேக்கத்தால் விலை குறைந்தால் அதற்கு எங்கள் நிறுவனம் பொறுப்பேற்காது.
10. விளைந்த உங்களது பொருளாக்கான வரியை நீங்களே கட்டியாக வேண்டும்.
11. மேலும் நாங்கள் தரும் விதை மற்றும் மாடு ஆடு போன்ற அனைத்தும் நாங்கள் தருவதையே நீங்கள் பயிரிட வேண்டும்.
12. விதையை பதுக்கினாலோ அல்லது கையாடல் செய்தாலோ விதைபதுக்கல் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து சிறை செல்ல நேரிடும்.
13. பொருள் விளைந்து அந்த பொருளை
எங்களிடம் தரும்வரை உங்கள் நிலத்தின் பத்திரம் எங்களிடமே பத்திரமாக இருக்கும்.
14. இந்த வரையறைகளை மீறி செயல்ப்பட்டாலோ அல்லது நிலத்தை தரிசாக போட்டாலோ,கடன் தொகையை வட்டியோடு திரும்ப தரமறுத்தாலோ நிலம் எங்கள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்படும்.
இந்த மசோதாதான் #பீசப்பி யின் விவசாய மசோதா.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
