"சீமான் அண்ணன் ஏற்ற #தமிழ்த்தேசியதத்துவம் எனும் நம் மண்ணில் கலந்திருக்கும் ஆயிரமாண்டு கால பழமையான பெருமைமிகு தத்துவமே, பலரை நாதக'வில் பயணிக்க வைத்தது என்பதே யதார்த்த உண்மை".
குறிப்பாக அண்ணனின் 2009க்கு முந்தைய பேச்சுக்களை தொடர்ந்து கேட்டவர்களுக்கு இது நன்கு விளங்கும். 1/n
2009க்கு முன்பு அவர் திராவிட மேடைகளில் பேசிய தமிழ், தமிழர் சார்ந்த கருத்தை அவர் ஒரு போதும் மாற்றிக் கொண்டதில்லை. அவர் அன்று பேசிய தேசிய இன விடுதலை, சமத்துவ சமூகம் கருத்தை தான், இன்றும் பேசுகிறார். அன்றிருந்த அதே கருத்து, அதில் இருந்து எந்த பின் வாங்கலும் இல்லை. 2/n
அப்படியிருக்க, அன்று அவர் திராவிட இயக்க மேடைகளில் முழங்கிய போது சேராத பெருங்கூட்டம், பின்பு தமிழ் தேசிய அரசியல் பேசும் போது அவரை நோக்கி ஏன் வந்தது, இப்போதும் வருகிறது!?
உண்மையிலேயே அவர் பேச்சை, முன்வைத்த கருத்தை மட்டுமே கேட்டு உள்வாங்கிக் கொண்டு வருவதாக இருந்தால், 3/n
அண்ணன் அங்கிருக்கும் போதே இந்த கூட்டம் அவருக்கு பின்னால் கூடியிருக்க வேண்டுமல்லவா!
அப்போ எது தான் இதற்கு காரணம்!?
காரணம்,
பேசுவது அதே நபர்-சீமான் அண்ணன், பேசும் கருத்து-அதே தமிழின மீட்சி, சமத்துவ சமூகம் என்றாலும்,
அவர் அன்று ஏற்றிருந்த 'தத்துவம்'-திராவிட தத்துவம், 4/n
ஆனால், 2009க்கு பிறகு அண்ணன் தெளிந்து ஏற்றது "தமிழ்தேசிய தத்துவம்" எனும் தமிழனின் மரபணு தத்துவம். எனவே அதே நபரான சீமான் அண்ணன் பேசும், அதே கருத்துக்கு பின்னால், இத்தனை தமிழ் பிள்ளைகள் வந்து நிற்க காரணமானக அமைந்தது அவர் ஏற்று நிற்கும் "தமிழ்த்தேசிய தத்துவம்"
எனும் ஆணிவேரும், 5/n
ஏற்ற தலைவர் "மேதகு. வே. பிரபாகரன்" எனும் வரலாற்று நாயகனும் தான். இதை ஒரு காலத்திலும் சீமான் அண்ணனே மறுக்க மாட்டார்.
இதற்கு, இந்த விளக்கமே போதுமானது என்று நினைக்கிறேன். மேலும் இந்த புரிதல் இருக்கும் எவராலும் தனிமனித துதிபாடலை ஏற்க முடியாது. 6/n
ஆனால் இந்த பாதையில் தனது குரலை ஆயுதமாக்கி தொண்டை புண்ணாகி போகும் அளவு முழங்கி, பம்பரமாய் சுழன்று, தமிழனின் இரத்தத்தில் கலந்திறுக்கும் தமிழ்தேசிய உணர்வை வெளிக் கொணர்ந்தார் என்பதை இங்கு எவராலும் மறுக்க இயலாது. அதை தனித்துவ ஆற்றலோடு வேகமாக பட்டி தொட்டியெங்கும் சேர்க்க உதவியது, 7/n
'இணையம்' எனும் நவீன யுகத்தின் போர் கருவியும், அதை உளமாற பயன்படுத்தி உதவிய தம்பி/தங்கைகளும் என்பதை கடந்து இந்த வளர்ச்சியை பேசி விட முடியாது.
எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணன்மார்களின் பேச்சுக்களை வெறும் பேச்சாக உள்வாங்காமல், பேச்சில் இருந்த தத்துவத்தை புரிந்து ஏற்றுக் கொண்டு, 8/n
அந்த தத்துவத்தை தனது சொந்த முயற்சியால் கடும் உழைப்பை போட்டு மக்களிடையே சென்று நிறுவி, நிலைநிறுத்தி, மக்களை திரும்பி பார்க்க செய்த "களப்போராளிகள் எனும் மாவீரர்களின்" குருதியிலும், வியர்வையிலும், தியாகத்திலும் தான், இவ்வளவு வளர்ந்தோம் என்பதே நிதர்சனமான சத்திய உண்மை. 9/n
எனவே இனியும் துதிபாடி, ஒப்பீடு எனும் போர்வையில் அவரை வரலாற்று நாயகனோடு ஒப்பிட்டு, திட்டமிட்டு சீமான் அண்ணன் மீது வெறுப்பை விதைப்போர்கள், செய்யும் இந்த அரசியல் சுழ்ச்சிகளை சரியாக சுட்டிக்காட்டி வீழ்த்துவதோடு, சீமான் அண்ணின் கரங்களை வலுப்படுத்தி, நமக்கான அரசியல் வெற்றியை..10/n
அடைந்தே தீருவோம் என உறுதியேற்போம்.💪
தத்துவமே நம்மை வெல்ல வைக்கும்-#சீமான்
#நாம்தமிழர்கட்சி
தவறை சுட்டிக்காட்டாம கடந்து போங்க என அறிவுரை கூறும் அன்பு உறவுகளுக்காகவே இந்த பதிவை எழுதினேன். இதை வாசித்தும் கடந்து செல்லுங்கள் என்று சொல்ல முடிந்தால், வாழ்த்துக்கள் 🙏 11/11
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
