#வேளாண்மசோதா #FarmBill2020 #மூங்கில்_துரோகம் 2006 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்கள் குவிவதை பார்த்திருப்பீர்கள். 2006ல் UPA அரசு மன்மோகன் சிங்க் பிரதமர். கமல்நாத் சைனா சென்று ஓர் ஒப்பந்தம் போட்டு குடிசை தொழில்களை அழித்தார். அதாவது சீன அரசு ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு ஒரு கோடி
ருபாய் நன்கொடையாக தந்த பத்து நாட்களில் கமல்நாத் சைனா சென்றார். (சந்தேகம்: வெறும் ஒரு கோடி ருபாய் தந்ததற்காக இவ்வளவு பெரிய உதவியை சைனாவுக்கு காங்கிரஸ் செய்திருக்குமா அல்லது அதை விட அதிகமாக வெளிநாட்டில் உள்ள கணக்குகள் எதற்கேனும் பணம் அனுப்பப்பட்டதா என்று விசாரிக்கவேண்டும்). பீகார்
உத்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மேகாலயாவில் எல்லாம் மூங்கில் என்பது புல் வகையாகவே கருதப்பட்டது. மூங்கிலை வளர்த்து அறுத்து நாற்காலிகள், ஊதுபத்திகள் இன்னும் பிற விஷயங்கள் செய்யும் ஆட்களுக்கு விற்பார்கள் அவர்கள். சைனாவும் மூங்கிலை சகட்டு மேனிக்கு வளர்த்தது. மூங்கில்
இறக்குமதிக்கு இருக்கும் தடையை நீக்கியது காங்கிரஸ் அரசு. உள்ளூர் மூங்கிலை மரம் வகையராக்குள் கொண்டு வந்து, வெளிநாட்டு மூங்கிலை இறக்குமதி செய்தார்கள் காங்கிரஸ். இனி மூங்கிலை வெட்டுவதாக இருந்தால் வனத்துறை மற்றும் சில துறைகளிடம் உத்தரவு பெறவேண்டும் என்ற நிலை வந்தது. தற்கொலை முடிவு
என்பார்கள். ஆனால் இது திட்டமிட்ட கொலை முடிவு. மூங்கில் விவசாயிகளை கொன்று, தொடர்புள்ள தொழில்களை கொன்று, பொம்மைகள், ஊதுபத்திகள் செய்யும் தொழிலாளர்களை கொன்று அவர்கள் வாழ்வாதாரத்தை அழித்தார்கள். அதன் பிறகு சீன மூங்கிலில்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்ற நிலை. 2014 பாஜக அரசு வந்த
பின்னர் இதை மாற்றி, மூங்கிலை மறுபடியும் புல் என்ற வகைக்குள் கொண்டு வந்தது அரசு. மூங்கிலை அறுக்க யார் அனுமதியும் வேண்டாம் என்று முழு சுதந்திரம் தந்தது மோடி அரசு. சைனா ஒப்பந்தத்தை உடனே முழுமையாக ரத்து செய்ய முடியாது என்பதால் கொண்டு வந்து கொட்டுவதற்கு தடை விதித்தார் மோடி.
பின்னர் இங்கு மூங்கில் விவசாயம் வளர்ந்தது. சைனாவை எப்படி கையாள வேண்டுமென்று இன்று #காங்கிரஸ் பாஜகவுக்கு பாடம் எடுக்கிறது. விவசாய மசோதாவால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஷரத் பவார் கூட்டமும், #அகாலி_தள் சுக்பிர் சிங் கூட்டங்களே. சுக்பிருக்கு ஆண்டுக்கு 5000 கோடி வருமானம். உணவு
கார்பரேஷனுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் அவர் தான் தரகர். ஆண்டுக்கு ஒரு வேலையும் செய்யாமல் 2.5% கமிஷன் சம்பாதிப்பார். எல்லா கோடவுன்களும் அவருக்கே சொந்தம். ஒரு டன் கோதுமை கூட இவர் உத்தரவின்றி விற்க முடியாது. அது போச்சு! ஷரத் பவாருக்கு 10000 கோடி காலி. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது
ஏன் என்று புரிகிறதா? கோபப்படாமல் என்ன செய்வார்கள் எதிர் கட்சிகள்? விவசாயிகளுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் வேளாண் மசோதாவை வரவேற்போம், எதிர்க்கட்சிகளின் பொய்களை உதாசீனப்படுத்துவோம்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
