#Thread
TCS on Goods அக்டோபர் 1 முதல்
இந்த புதிய சட்டம் சமீபத்தில் நிதி அமைச்சக அறிவிக்கை மூலம் அமலாக்கப் படுகிறது
வரும் அக்டோபர் 1 முதல் நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கு வாங்கும் தொகையில் இருந்து TCS பிடிக்க வேண்டும்
அதை பற்றி சுருக்கமாக விளக்க முயற்சிக்கிறேன்
உங்க கிட்ட பொருள் வாங்கும் கஸ்டமர்.. போன வருஷம் உங்க கிட்டே இருந்து ₹50 லட்சத்துக்கு அதிகமா பொருட்கள் வாங்கி இருந்தாலோ, இந்த வருஷம் எப்ரல் மாதத்தில் இருந்து உங்களிடம் வாங்கிய பொருட்களின் மதிப்பு ₹50 லட்சத்தை தாண்டினாலோ நீங்கள் அவரிடமிருந்து இந்த TCS பிடிச்சு அரசுக்கு கட்டணும்
எல்லா விதமான பொருட்களுக்கும் இது பொருந்தும்
விற்பனைக்கு கிடைக்கும் தொகையில் 0.075% பிடிக்கணும். இது மார்ச் 2021 வரை தான். அதன் பின் 0.1% பிடிக்கணும்
உங்களிடம் பொருள் வாங்குபவர் தனது PAN / Aadhaar எண்ணை உங்களுக்கு தரலை என்றால் 1% TCS பிடிச்சு அரசுக்கு கட்ட வேண்டும்
நீங்கள் கொடுக்கும் பில்லிலேயே இந்த TCS 0.075% சேர்த்து அவரிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். விற்பனை செய்பவருக்கு அந்த நஷ்டமும் இல்லை.
வாங்குபவரும் இந்த TCS ஐ தனது IT ரிட்டர்ன்ஸ் மூலம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும்.
இது ஒரு கணக்கெடுப்பு காரணமாக கொண்டு வரப்பட்டது
இதில் வழக்கம் போல சில குழப்பங்கள் இருக்கின்றன.
குழப்பம் 1: TCS மொத்த விற்பனை விலையில் கணக்கு செய்யணுமா? வரிக்கு முந்தய பொருளின் விலைக்கு மட்டும் கணக்கு செய்யணுமா?
குழப்பம் 2: விற்பனை செய்யும் போதே பிடிக்கணுமா? விற்பனை தொகை வசூல் ஆகும்போது பிடிக்கனுமா?
இதை அரசு தெளிவு படுத்தல
பொதுவான கருத்தாக முழு பில் தொகைக்கும் பிடிக்கலாம் முடியும்.. பில்லிலெயே சேர்த்து வசூலிக்கலாம் என்றும் பலரும் முடிவு செய்து இருக்காங்க
இதில் நமக்கு என்ன பாதிப்பு?
நாம் ₹50 லட்சத்துக்கு பொருள் வாங்குவதாக இருந்தால் PAN/Aadhaar கொடுத்தால் குறைந்த TCS பிடித்தம்.
இந்த ₹50 லட்சம் கணக்கும் ஒரே முறையில் செய்யணும் என்று இல்லை. ஒரு வருஷத்தில் பலமுறை கொஞ்சம் கொஞ்சமா பொருள் வாங்கினாலும் எப்போது அதன் மொத்த தொகை ₹50 லட்சத்தை தாண்டுதோ அப்போ முதல் TCS பிடிக்கணும்
விற்பனை செய்பவர் எல்லா வாடிக்கையாளரின் விவரத்தையும் கவனிச்சிட்டே வரணும்
மொத்த விற்பனையாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர் போன்றோர் அவர்களிடம் பொருட்கள் வாங்கி போறவங்க கணக்கை தனியா கவனிச்சிட்டு வரணும். எப்போ ₹50 லட்சம் தான்டுதோ அப்போ TCS பிடிக்கணும்
அதே போல நமக்கு பல கடைகள் இருந்தால் (வசந்த் அண்ட் கோ மாதிரி) ஒரே வாடிக்கையாளர் வெவ்வேறு கடையில் வாங்கினாலும்..
அதன் மொத்த விற்பனை தொகை ₹50 லட்சத்தை தாண்டினால் TCS பிடிக்கணும்
அதனால் வாடிக்கையாளர் database ரெடி செய்து எல்லா கடைகளின் விற்பனையை கவனிச்சு முடிவு எடுக்கணும்
இன்னும் 2 நாள் தான் இருக்கு என்பதால் நிறைய பேர் இன்னும் தங்கள் சிஸ்டம் ரெடி செய்திருக்க மாட்டார்கள்
Extend ஆனா நல்லது
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
