𒆜மான்𒆜 Profile picture
அறிவியல் கடலில் ஆனந்த குளியல் போடும் ஆராய்ச்சியாளன்..! ꧁𓊈𒆜🅱🅴🅻🅾🅽🅶🆂 🆃🅾 🆃🅷🅴 🅳🆁🅰🆅🅸🅳🅸🅰🅽 🆂🆃🅾🅲🅺𒆜𓊉꧂

Oct 2, 2020, 10 tweets

#thread #read_full
இந்திரனால் கல்லான #அகலிகை கேட்கிறாள் நீதி. (இந்திரன் இவர் மேல் ஆசை கொண்டு, வன்புணர்வு செய்திட, அதனை அறிந்த கௌதமர் அகலிகையை கல்லாக மாற சாபமிட்டார். (1/9)

இவ்வாறு கல்லாக மாறிய அகலியை ராமனின் கால் பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக புராணக் கதை)

தருமனால் பணயம் வைக்கப்பட்டு, துச்சாதனனால் சேலை உருவப்பட்ட #பாஞ்சாலி கேட்கிறாள் நீதி.

பீஷ்மணால் வாழ்விழந்து, தற்கொலை செய்து கொண்ட #அம்பை கேட்கிறாள் நீதி. (2/9)

விசித்திர வீரியனின் மனைவியான #அம்பாலிகா வேதவியாசருடன் கூடிப் பிள்ளை பெறுமாறு பணிக்கப்பட்டு, விருப்பமின்றி, பயந்து போய் "கூடியதால்" பாண்டு என்னும் வெளிறிய நோஞ்சான் பிள்ளையை பெற்ற அம்பாலிகா கேட்கிறாள் நீதி.

சூரியனால் கர்ப்பமாகி கர்ணனை பெற்ற #குந்தி கேட்கிறாள் நீதி. (3/9)

சந்தேகப்பட்டு ராமனால் நெருப்பில் தள்ளப்பட்ட #சீதை கேட்கிறாள் நீதி.

லட்சுமணனால் மூக்கறுபட்ட #சூர்ப்பனகை கேட்கிறாள் நீதி.

முலைவரிக்கு பதில் முலையையே அறுத்து தந்த #நாஞ்செலி கேட்கிறாள் நீதி.

2000 ஆண்டுகளாக பார்ப்பனர்களாலும், (4/9)

உயர் சாதி ஆண்களாலும் வன்புணர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான #தேவதாசிகள் கேட்கிறார்கள் நீதி.

கோயிலுக்குள் இருந்தே #ஆசீஃபா கதறுகிறாள் நீதி கேட்டு.

காவல்நிலையத்தில் காவலர்களால் குதறிப் போடப்பட்ட ஏராளமான #பத்மினிகள் கேட்கிறார்கள் நீதி.

காதலனாலும், (5/9)

அவன் நண்பர்களாலும் வன்புணர்வுக்குள்ளாகி மரணித்த #நந்தினி கேட்கிறாள் நீதி.

இந்திய ராணுவத்தால் சீரழிக்கப்பட்ட காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, ஜார்க்கண்ட் போன்ற மாநில சகோதரிகள் கேட்கிறார்கள் நீதி.

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் வனத்துறையும், (6/9)

அதிரடிப்படையும் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்ட பெண்கள் கேட்கிறார்கள் நீதி.

ஈழத்தில் இந்திய அமைதிப்படை நாசமாக்கிய தமிழீழப் பெண்கள் கேட்கிறார்கள் நீதி.

மத சடங்குகளால், (7/9)

சொத்து பிரிக்கப்படக்கூடாது என்பதால் வட இந்தியாவின் சில பகுதிகளில் இன்றைக்கும் பலதார மணமுறைக்கு ஆளாகும் பெண்கள் கேட்கிறார்கள் நீதி.

விருப்பமற்ற திருமணங்களால் கடமைக்கு, sex toy களாக வாழும் பல பெண்கள் மனதுக்குள் கேட்கிறார்கள் நீதி.

(8/9)

எனவே பெண்கள் மானபங்கம்-பாலியல் வல்லுறவு மற்றும் நமது புராண-இதிகாச-பண்பாட்டு-கலாச்சாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

(9/9) #பகுத்தறிவை_பரப்புவோம்..!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling