#goofybooks
'காசி ஆனந்தன் நறுக்குகள்'
ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன் தமிழீழத்திலும் , தமிழ்நாட்டிலும் வாழ்ந்த காலப்பகுதியில் உலகின் பொய்மைகளுக்கும், திமிர் வெறிக்கும், தமிழர் வாழ்வின் கண்ணீருக்கும் போராட்டங்களுக்கும் இடையே நெருப்பினை தழுவி அழுது துடித்து பொங்கி எழுதியவை.
ஒவ்வொரு நறுக்கும் நெருப்பு தெரிக்கிறது, முகத்தில் அறைகிறது, யோசிக்க வைக்கிறது. புத்தகத்தில் இருந்து சில நறுக்குகள்,
01. மானம்
உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?
அவன்
கைகளை
வெட்டு.
கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே.
அம்மணமாகவே
போராடு.
02.மாடு
ஆயிரம்
ஆயிரம்
ஆண்டுகள்
வண்டி
இழுக்கிறது...
கொம்பை
மறந்த
மாடு
03. பெண்
ஏடுகளில்
முன் பக்கத்தில்
அட்டையில்
வீடுகளில்
பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்
04. மனிதன்
இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்
'பசு பால் தரும்'
என்கிறான்.
காகம்
இவன் வடையை
எடுத்தால்
'காகம்
வடையைத் திருடிற்று'
என்கிறான்.
இப்படியாக மனிதன்.
05. குப்பைத் தொட்டி
அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது...
குப்பைத்தொட்டி
குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது...
அலுவலகம்.
06. தாயகம்
'வளமுண்டா
உன்
மண்ணில்?
வாழ்வாயா
தனித்து?'
என்கிறாய்...
என்
நாட்டின்
துயரங்கள்
பற்றி
என்னிடம்
பேசாதே.
பாலைவனத்தின்
இனிமை
பற்றி
ஒட்டகத்திடம்
கேள்.
07. மந்தை
மேடை
'தமிழா!
ஆடாய்
மாடாய்
ஆனாயடா..
நீ'
என்றேன்
கை
தட்டினான்.
08. கண்ணோட்டம்
செருப்பை
பார்க்கையில்
நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்
பார்க்கிறீர்கள்.
நான்
செய்தவனின்
கையைப்
பாடக்கிறேன்.
09. கொலை
ஒரு நாள்
வாழ்க்கை
பூவுக்கு....
விரியுமுன்பே
பறித்து
இறைவனுக்கு
அர்ச்சனை
செய்கிறான்
நூறாண்டு
வாழ்க்கை
வேண்டி
தனக்கு.
10. உடைப்பு
சொல்கிறார்கள்
'கிளியின் கூண்டைத்
திறந்து விடு'
முரண்படுகிறேன்.
உடைத்து விடு.
11. தேர்தல்
மாலை
வளையல்
மூக்குத்தி
பொன்னான
எதுவுமே
இல்லை
எங்கள்
குடிசையில்
அவன்
சொல்கிறான் -
இருக்கிறதாம்
எங்களிடம்...
பொன்னான
வாக்குகள்.
12. வெறி
எரியவில்லை
அடுப்பு
சேரியில்
போராடினோம்...
எரிந்தது
அடுப்பல்ல...
சேரி.
13. விடுதலை
சாகடிக்கப்படலாம்...
நாங்கள்-
தோற்கடிக்கப்படமாட்டோம்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
