பூதம் Profile picture

Mar 26, 2021, 6 tweets

கோவில் நிதியை அரசு எடுத்து வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகிறதா?

இல்லை. அரசுதான் மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் கோவில் புனரமைப்புக்காக வழங்குகிறது!

(Page 119)

இந்து சமய அறநிலையத்துறை நிதி எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம். cms.tn.gov.in/sites/default/…

இந்து சமய அறக்கட்டளைகள் நிர்வாக நிதி என்ற பெயரில் ஒரு fund உருவாக்கப்பட்டு அதில் கோவில்களின் வருமானத்துக்கு ஏற்ப, அதன் வருமானத்தில் இருந்து கீழே குறிப்பிட்ட படி ஒரு பகுதி அந்த நிதியில் வரவு வைக்கப்படும்.

tnhrce.gov.in/resources/docs…

அந்த நிதியில் இருந்துதான் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அளித்த சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை அறநிலையத்துறை அரசுக்கு திருப்பி அளிக்கிறது.

அதை தவிர கோவில் வருமானத்தில் இருந்து ஒரு பைசா கூட அரசிடம் செல்லாது!

tnhrce.gov.in/resources/docs…

இது போக, பொது நல நிதி ஒன்று உருவாக்கப்பட்டு, உபரி நிதி உடைய கோவில்களின் அறங்காவலர் குழு தாமாக முன்வந்து அளிக்கும் நிதி அதில் செலுத்தப்படும்.

இந்த நிதி நலிந்த கோவில்களை புனரமைக்க பயன்படுத்தப்படும்

tnhrce.gov.in/resources/docs…

மிகை நிதி கொண்ட கோவில்கள் அளிக்கும் உபரி நிதியை ஏழை இந்துக்களின் திருமண உதவிக்காகவோ, ஏழைகளுக்கு உணவளிப்பதற்கோ பயன்படுத்தலாம்.

வேறு எதற்கும் பயன் படுத்த முடியாது

tnhrce.gov.in/resources/docs…

இப்படியாக, கோவில்களின் வருமானத்தை எதற்கு பயன்படுத்தலாம் என்ற விதிகள் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது.

ஆகவே, கோவில்களின் வருமானத்தை வேறு எந்த திட்டங்களுக்கும் அரசு பயன்படுத்துவதில்லை. சட்டம் அதை அனுமதிப்பதில்லை.

மாறாக அரசின் வருவாய்தான் கோவில்களுக்கு செலவு செய்யப்படுகிறது.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling