#Mandela ♥️📽️
உண்மையிலேயே தரமான #படம் அதும் இந்த எலக்சன் டைம்ல தரமான #சம்பவம்.
முதல்பாதில வசனங்களும் காட்சி அமைப்புகளும் அருமையா இருக்கு.
நான் ஜெய்ச்சா இதெல்லாம் பண்ணுவன்னு வேட்பாளர் சொல்லும்போது பக்கத்துல மொபைல் ல ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா பாட்டு ஓடும்போது நான் விழுந்து விழுந்து
சிரிச்சேன். அந்த அளவுக்கு காமெடிலையும் கலக்கி இருக்கு திரைக்கதை.
என்னதான் கதைல வர விசயங்கள் நிஜத்துல நடக்காது அப்டின்னாலும் திரைக்கதைய சுவாரஸ்யமா கொண்டு போயிருப்பாங்க.
கதைக்கருவ வச்சி பெரிய லெவல்படம் எடுத்திருக்கலாம். ஆனா இந்த மாதிரியான ஒருமாற்றம் ஊராட்சி மன்ற எலெக்ஷன்ல இருந்து
இருந்து ஆரம்பிச்சா தான் உண்மையான மாற்றம் வரும் அப்டின்னு கதைய ஊராட்சி மன்ற எலக்சன் ah மையமா வச்சி எடுத்திருக்காங்க.
எப்படி நம்ப எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு கடந்த 2, 3 வருசமா கிராம சபை நடந்தா ஆட்சில என்ன மாற்றங்கள் வரும்னு புரிஞ்சிக்கிட்டு, நடக்க விடாம தடுத்து ஆட்சி பண்ணிட்டு
இருக்கோ, அது மாதிரி தான் இந்த ஊராட்சி மன்ற தேர்தல் வெற்றியும்.
கிராமங்களில் நடக்குற கிராம சபை கூட்டமும், அங்க நடக்குற ஒரு ஊராட்சி மன்ற தேர்தலும் சரியா நடந்து சரியா ஆட்கள் தேர்வு செய்யபட்டா அதுக்கு கிராமமும் ஒத்துழைப்பு தந்தா கண்டிப்பா ஒரு மாற்றம் வரும் அப்டின்றத இந்த படம்
சொல்லாம சொல்லிருக்கு.. யோகிபாபு, அவர் கூட இருக்குற பையன், ஹீரோயின் அப்டின்னு எல்லாரும் அருமையா நடிச்சிருந்தாங்க. ஒரு சிங்கிள் ஓட்டு என்னெல்லாம் பண்ண முடியும் அப்டின்னு காமெடி கலந்து அருமையான ஒரு மெஸேஜ் இந்த படத்துல..
டோட்டல் படம் அருமையா இருந்தது. 😍❤️
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.