தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் பதிவு....
பேருந்து, ரயில், விமானம் பிடித்து ஊருக்கு போய் சனநாயகக கடமை ஆற்றப்போகிற நண்பர்களே, இந்த தேர்தலோடு அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடுமென நம்பி அடுத்த 5 வருடத்தை கடக்காதீர்கள். எந்த ஒரு ஆட்சியும் நம் கோரிக்கையை ஏற்கவேண்டுமெனில்
நாம் தான் போராட வேண்டும். தேர்தல் மட்டுமே நாம் பங்கேற்கும்-பங்களிக்கும் களமல்ல. தேர்தலுக்கு பின்பே நமக்கான பொறுப்பு அதிகரிக்கிறது. கேள்வி கேட்கப்படாத எதுவும் நமக்கானதாக மாறிவிடாது. அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் மக்களால் கண்காணிக்கப்படுகிறார்கள் எனும்நிலை வரும்போதே
சமநிலை அடையமுடியும். இல்லையெனில் 5வருடம் கழிந்து யாருக்கு ஓட்டு போடக்கூடது என்று நாங்களும், வேறு யாருக்கு போடலாம் என நீங்களும் கேள்விகளோடு சந்திக்கும் நிலை வந்து விடக்கூடாதென விரும்பினால் வரும் நாட்களில் கோரிக்கை போராட்டங்களில் எங்களோடு கைகோர்க்க வாருங்கள்.
பங்கேற்பு இல்லாத அரசியல் மோசமான அதிகார குவியலுக்கு வழிவகுக்கும் அரசை, அதிகாரத்தை கேள்விகேட்க துணிச்சல் இல்லாத மக்களால் நேர்மையான, நம்மை நேசிக்கும் அரசை உருவாக்க முடியாது. ஓட்டு போடுவதோடு நம் சனநாயக கடமை முடிந்துவிடாது. அரசியல் வீதிகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
நாம் வீதிக்கு வரவில்லையெனில், எடப்பாடி ஆட்சி போல கார்பரேட் அறைகளில் அது முடிவாகும்.
#may17movement @thiruja
@pkcomrade @U2Brutus_off @kanniyarii @PrabhuVijayan1 @Priya06916530 @kondalsamy14 @kovaijiiva @kalai8940 @Prabha78385180
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.