பேருந்து, ரயில், விமானம் பிடித்து ஊருக்கு போய் சனநாயகக கடமை ஆற்றப்போகிற நண்பர்களே, இந்த தேர்தலோடு அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடுமென நம்பி அடுத்த 5 வருடத்தை கடக்காதீர்கள். எந்த ஒரு ஆட்சியும் நம் கோரிக்கையை ஏற்கவேண்டுமெனில்
நாம் தான் போராட வேண்டும். தேர்தல் மட்டுமே நாம் பங்கேற்கும்-பங்களிக்கும் களமல்ல. தேர்தலுக்கு பின்பே நமக்கான பொறுப்பு அதிகரிக்கிறது. கேள்வி கேட்கப்படாத எதுவும் நமக்கானதாக மாறிவிடாது. அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் மக்களால் கண்காணிக்கப்படுகிறார்கள் எனும்நிலை வரும்போதே
சமநிலை அடையமுடியும். இல்லையெனில் 5வருடம் கழிந்து யாருக்கு ஓட்டு போடக்கூடது என்று நாங்களும், வேறு யாருக்கு போடலாம் என நீங்களும் கேள்விகளோடு சந்திக்கும் நிலை வந்து விடக்கூடாதென விரும்பினால் வரும் நாட்களில் கோரிக்கை போராட்டங்களில் எங்களோடு கைகோர்க்க வாருங்கள்.
பங்கேற்பு இல்லாத அரசியல் மோசமான அதிகார குவியலுக்கு வழிவகுக்கும் அரசை, அதிகாரத்தை கேள்விகேட்க துணிச்சல் இல்லாத மக்களால் நேர்மையான, நம்மை நேசிக்கும் அரசை உருவாக்க முடியாது. ஓட்டு போடுவதோடு நம் சனநாயக கடமை முடிந்துவிடாது. அரசியல் வீதிகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
நாம் வீதிக்கு வரவில்லையெனில், எடப்பாடி ஆட்சி போல கார்பரேட் அறைகளில் அது முடிவாகும். #may17movement@thiruja
ஒரு முழம் உயரமுள்ள குழவிக் கல்லுக்கு நமது நாட்டில் எத்தனை கோடி ரூபாய்கள் சொத்தும் எவ்வளவு வருமானமும் இருக்கின்றன?
இப்படி எத்தனை ஆயிரக் கணக்கான குழவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத்தோடு, யானை, குதிரை, ஒட்டகம், பல்லக்கு, இரதம், தேர் முதலிய வாகனங்களோடு பல பெண்டாட்டிகளோடு,
பல கல்யாணங்களோடு வாழ்கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் நமது நாடு தரித்திரநாடு என்று சொல்ல வருவானா?
இதை எந்த பொருளாதார நிபுணராவது கவனித்து நமது நாடு தரித்திரம் உள்ள நாடு என்று சொல்கின்றானா?
நமது நிலைக்கு காரணம் என்ன?
நமது தரித்திரத்திற்கு யார் காரணம்?
நமது செல்வமும், பாடும் என்ன ஆகின்றன? என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்டாள்தனமே நமது இன்றைய இழிவுநிலைக்குக் காரணம். #மதத்தையாவது#சாதியையாவது#கடவுளையாவது உண்மை என்று நம்பி அவைகளை காப்பாற்ற முயற்சிக்கும்