Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Apr 18, 2021, 11 tweets

நம்ம எல்லார்கிட்டையுமே இப்ப Smartphones இருக்கு,சின்ன பையன்ல இருந்து மூத்த வயது உள்ளவங்க வரை,அதிலும் பெருபான்மையான மக்கள் சமூகவலைத்தளங்கள் ஆன Facebook,whatsapp போன்ற தளங்கள Account இல்லாதவங்களே கிடையாது,அப்டினு சொல்லலாம்.அந்தளவுக்கு நம்ம மக்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்திகிட்ட

வராங்க,இதில் எந்தளவுக்கு நன்மை இருக்கோ அதே அளவுக்கு தீமையும் இருக்கு,நன்மை அப்டினு பார்த்தோம்னா உதாரணத்துக்கு ஒரு மனிதருக்கு உடனே இரத்தம் தேவைப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்,அது உடனடியாக Whatsapp அல்லது facebook போன்ற பக்கங்களில் பகிரப்பட்டு அந்த தேவை பூர்த்தி செய்யப்படுகிறது

இது போன்ற எண்ணற்ற உதவிகள் மக்களுக்கு இலகுவாக கிடைக்கிறது.
இது ஒரு புறம் என்றால் மறுபுறம் அதற்கு அப்படியே மாற்றமாக ஒரு பக்கம் இருக்கிறது அதுதான் #Fakenews எதோ ஒரு பக்கத்தினால் ஒரு செய்தி பகிரப்பட்டு அந்த செய்தியின் உண்மைதண்மை அறியாமல் பலரும் அந்த செய்தியை பகிர்கிறார்கள்,அந்த

Fakenews அவ்வளவு விரைவாக பரப்பப்படுகிறது.
உதாரணத்திற்கு நீங்கள் ஏ.டி.ம் நிலையத்தில் பணம் எடுக்கும் பொழுது யாராவது உங்களை மிரட்டி பணம் எடுக்கச் செய்தால், உங்கள் ஏ.டி.ம் ரகசிய எண்ணை தலைகீழாக திருப்பி அழுத்தினால் ஏ.டி.ம் அட்டை மாட்டிக்கொள்ளும், போலீசுக்கும் தகவல் போய்விடும் என்ற

தகவலை நம்மில் பெரும்பாலானோர் பேஸ்புக்கில் பார்த்திருப்போம். 1001, 9999 போன்ற எண்களை தலைகீழாக போட்டாலும் அதே எண்கள்தானே வரும் என்று கூட யோசிக்காமல் நாமும் இந்தத் தகவலை பகிர்ந்திருப்போம். இது போன்ற பல செய்திகளை கடந்து நாம் வந்து இருப்போம்,இது போன்ற செய்திகள் மட்டுமின்றி சில

sensitivana செய்திகளையும் நாம் என்னவென்று கூட அறியாமல் எல்லாரும் பகிர்கிறார்கள் என்று நாமும் பகிர்ந்து இருப்போம்,அதனால் பல பாதிப்புகள் கூட ஏற்பட்டு இருக்கலாம் நம்மை அறியாமல் அந்த செய்தியின் மூலம்,
இது போன்று பகிரப்படும் செய்திகள்

போலி செய்திகளாக இருந்தால் அந்த செய்திகளின் உண்மைத்தன்மையை மக்களுக்கு புரியும் வகையில் எளிய முறையில் அந்த செய்தியை Memes-களாகவோ அல்லது வீடியோ மூலமாகவோ மக்களுக்கு அதனை கொண்டு சேர்க்கின்றனர்,#youturn குழுமத்தினர் இதை ஒரு பிரதான பணியாகவே செய்து வருகின்றனர்,ஒரு செய்தியின்

உண்மைத்தன்மையை அறிய அந்த செய்தியின் துறைசார் நிபுணர்களை அணுகுகின்றது #youturn பிறகு அந்த செய்திகளை மக்களுக்கு கொடுக்கின்றனர்.
நான்கு ஆண்டுகள் பயணத்தை முடித்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து
சிறப்பாக செயல்பட்டு வருகிறது @youturn_in
பணிகள் பற்றி இவர்களின் அறியாதவர்கள்

அவர்களுடைய இணையதளத்திற்கு சென்று பாருங்கள் தமிழிலும்,ஆங்கிலத்திலும் இருக்கிறது.
#youturn
website Link:youturn.in

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling