SundaR KamaL Profile picture
விவசாயி மகன்🌾 கமல் பக்தன்❤️ மக்கள் நீதி மய்யம்🔦 ஜாதி, மதம் இல்லை👊 சிம்பு, ஹாரிஸ், கெளதம் மேனன், ராஷ்மிகா🎥 சச்சின், பொல்லார்ட், மும்பை இந்தியன்ஸ்🏏

Apr 22, 2021, 25 tweets

ஒரு நடிகரின் நடிப்பை இயக்குனர்கள் புகழ்ந்து பேசுவது இயல்பு, ஆனால் ஒரு நடிகர் "இயக்கிய" "எழுதிய" படங்களை பார்த்து தான் நான் "இயக்குனர்" ஆனேன், அந்த படங்கள் தான் நான் படம் எடுக்க இன்ஸ்பிரேஷன் என சொல்வது #கமலுக்கு மட்டுமே சாத்தியம் அதை பற்றிய திரெட்👇(26 இயக்குனர்கள்)

#KamalHaasan

1) #கெளதம்மேனன் "#தேவர்மகன் ரொம்ப புடிச்சு படம், முக்கியமா அதோட எழுத்து, எடுக்கப்பட்ட விதம் எல்லாத்தையும் சேர்த்து கொடுத்த ஃபர்பாமன்ஸ், ஒரு பக்கா கமர்ஷியல் படத்த கலைநயமாகவும் அழகாவும் எடுத்திருப்பாங்க, ஒரு ஒரு சினிமா மாணவணும் எழுத்துக்காக பாக்குற படம்"👏

2) #லோகேஷ்கனகராஜ் "என்னோட வாழ்க்கையில இப்பிடி நடுங்குனதே இல்ல, சுத்தமா பேச்சே வரல, நான் சினிமாவுக்கு வர ஒரே காரணம் #கமல் சார் மட்டும் தான், நான் யார்கிட்டயும் அசிஸ்டென்டா வேலை செய்யல, சினிமா எங்கேயும் கத்துகல, இவரோட படங்களை பாத்தே இயக்குனர் ஆனேன்"👏

3) #மிஷ்கின் "இந்திய சினிமாவில் #தேவர்மகன் போல ஒரு மிக சிறந்த கதை இதுவரை ஏழுதப்படவில்லை, ரயில்ல இருந்து இறங்கி ஆடிட்டு வர சக்திவேல் கடைசில அதே ரயிலில் ஊரை காப்பத்திட்டு அமைதியா போவான், நான் எந்த கதை எழுதுனாலும் தேவர் மகன் நினைவில் இருக்கும்"👏

#மிஷ்கின் "#குணா பாத்துட்டு ரொம்ப மூவ் ஆயிட்டன், #மகாநதி பாத்துட்டு என் வாழ்க்கையே ஷாக் ஆயிடுச்சு, இன்னும் ஞாபகம் இருக்கு மகாநதி பாத்துட்டு அந்த தாக்கம் போக கூடாதுன்னு நானும் என் நண்பனும் ஆளுக்கு ஒரு நடைபாதையில போனோம்"👏

4) #சேரன் "#குணா படம் பாத்துட்டு என்னால சீட்ட விட்டு எந்திரிக்க முடியல, இப்படி ஒரு படைப்பு..இப்படி ஒரு படமான்னு பிரமிப்பு, மூனு ஷோ தொடர்ந்து பாக்குறன் பாத்துட்டு 15 நாள் எனக்கு தூக்கம் வரல, எப்பிடியாவது கமல் சார்ட வேலை செய்யனும்னு மகாநதில சேர்ந்தேன்"👏

5) #எஸ்ஜேசூர்யா‌ "#தேவர்மகன் போல ஒரு திரைக்கதை, கதாபாத்திரங்கள் சினிமா ரெக்கார்டுல அப்பவும் இல்ல இப்பவும் இல்ல"👏

6) #லிங்குசாமி "ஒரு படம்'னா #தேவர்மகன் மாதிரி தான் இருக்கனும்னு என்னோட அசிஸ்டன்ட் டரைக்டர்ஸ்'ட திரும்ப திரும்ப சொல்லிட்டே இருப்பன், லேப்ட்டு‌ - ரைட்டு கரெட்டா எழுதுன‌ ஒரு படம், வசனம், காட்சியமைப்புகள் அப்படி இருக்கும்"👏

7) #பிரித்விராஜ் "நான் இயக்குனர் கமலின் தீவிர ரசிகன், இந்தியா சினிமாவின் மிக திறமையான இயக்குனர் அவர்"👏

8) #பாலா "#விருமாண்டி'ல'ல வர மாட விளக்க பாட்ட கேட்டா எனக்கு மூனு கதை கிடைக்கிது படம் எடுக்க", நான் கடவுள் எடுக்க எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தது #அன்பேசிவம்"👏

9) #கார்த்திக்நரேன் "சிறந்த திரைக்கதை என்றால் #விருமாண்டி தான், தமிழ்சினிமாவில் எனக்கு பிடித்த திரைக்கதையும் அதான்..வன்முறை எவ்வளவு கொடூரமானது அது இருக்கு கூடாது என்பதற்காக வன்முறையை வெளிப்படையா காட்டிருப்பார்"👏

10) #அல்போன்ஸ்புத்திரன் "#குணா ரொம்ப புடிக்கும் அதுனால தான் #பிரேமம் படத்துல ஒரு சீன்ல குணா டிவில ஓடும், மகாநதி, விருமாண்டி" போல எடுக்க யாராலும் முடியாது, அவர் நினைச்சா நாளைக்கே டெனட் எடுப்பாரு"👏

11) #ராம் ""Bird Man"னு ஒரு படம் வந்துச்சு ஆஸ்கார்'லாம் வாங்குச்சு, அந்த படத்தை ரொம்ப புகழ்ந்தாங்க..அதுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத படம் #உத்தமவில்லன், ஒரு சினிமா லவ்வரா, சினிமாவின் மாணவனா எனக்கு ரொம்ப புடிச்ச படம்"👏

12) "எனக்கு ரொம்ப பிடிச்ச படம் #குணா 97 தடவ பாத்திருப்பன், சினிமா கதைல அது ஒரு "பைபிள்", ஒரு ஒரு தடவ பார்க்கும் போதும் வேற வேற பரிமாணம் கொடுக்குது, குணா ஒரே தடவ பார்க்க வேண்டிய படம் இல்ல ஒரே தடவ பார்த்து முடிக்க கூடிய படமும் இல்ல"👏

13) K13 #பரத்நீலகண்டன் "நான் இயக்குனர் கமல் சாரின் தீவிர ரசிகன், அவர இயக்குனரா அதிகம் பார்க்க எனக்கு ஆசை, நான் சினிமாவிற்கு வர ஒரு முக்கிய காரணம் அவர் தான்"👏

14) சர்வர் சுந்தரம் #ஆனந்த்பால்கி "சர்வர் சுந்தரம் படத்துலயே அவரோட படங்கள் தாக்கம் நிறையா இருக்கும், எனக்கு தெரியாமலே எனக்குள்ள கமல் சார் இன்பில்ட் ஆயிட்டாரு அதனால அவரோட ஒரு ஒரு கதாபாத்திரமும் வெளிய வரும், எல்லா கமல் சார் படங்களும் 7,8 தடவை பாப்பேன்"👏

15) Telugu HIT film #சைலேஷ்கொலனு "அவரோட #ஹேராம் தான் நான் இயக்குனர் ஆக காரணம், 50 தடவைக்கு மேல ஹேராம் பாத்திருக்கன் அதிலிருந்து படம் எப்பிடி எடுக்கனும்னு அவ்ளோ கத்துக்கிட்டன்"👏

16) ஹாலிவுட் இயக்குநர் #குயேண்டின்தரண்டினோ "என்னோட 'கில் பில்' படத்தின் அனிமேஷன் காட்சிகளுக்கு, கமல்ஹாசனின் #ஆளவந்தான் படம் தான் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்"👏

17) #அலிஅப்பாஸ்ஸாஃபர்‌ டைகர் ஜிந்தா ஹை படத்தை இயக்க கமல் சாரின் #விஸ்வரூபம் படம் உதவியாக இருந்துச்சு"👏

18) #வெற்றிமாறன்

19) உறியடி #விஜயகுமார் "#விருமாண்டி போல ஒரு படம் எடுக்க முடியாது"👏

20) 8 தோட்டாக்கள் #கணேஷ் "காமெடி சப்ஜெக்ட், பீரியட் சப்ஜெக்ட் எல்லாமே எழுதியிருக்காரு அவர் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர்"

21) #அருண்வைத்யநாதன்‌ "கல்யாண சமையல் சாதம் படத்தை எடுக்க இன்ஸ்பிரேஷனா இருந்தது மைக்கேல் மதன காம ராஜன் படம் தான்"👏

22) #கார்த்திக்சுப்புராஜ் "கமல் சார் இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர், 34 வயசுல தேவர் மகன் 35 வயசுல குணா அதலாம் பாத்த பிறகு நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு தோணுச்சு"👏

23) #ரஞ்சித் "எனக்கு ரொம்ப பிடிச்ச படம் விருமாண்டி, விருமாண்டி போல ஒரு படம் யாராலும் எடுக்கவே முடியாது, அந்த படத்துல வர சொல் வழக்க பயன்படுத்தி சினிமா எடுக்க முடியும்னு நிகழ்த்தி காட்டினது தமிழ் சினிமாவில் கமல் சார் மட்டும் தான்"👏

24) #ரத்னகுமார் "நான் சினிமாவுக்கு வர ஆசைய தூண்டுன படம் #மகாநதி, மகாநதி கிளைமாக்ஸ்க்கு இணையா இப்பவரைக்கும் நான் பாக்கல, அந்த பொண்ணு தன் வலிய தூக்கதுல ஒரு முணு முணுத்தல்ல சொன்ன விதம், மகாநதிய இப்ப நினைச்சாலும் வலியா இருக்கு - இயக்👏

25) மதயானை கூட்டம் #விக்ரம்சுகுமாறன் "என்னோட சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கமல் சாரோட வெறித்தனமான ரசிகன் #தேவர்மகன் படம் பார்த்துட்டு வந்த தைரியத்துல தான் துணிஞ்சு நம்மளும் படம் எடுக்கலாம்னு சென்னைக்கு வந்தேன்"👏

26) #ஆர்எஸ்பிரசன்னா "ஹிந்தி இயக்குனர் ஆனந்த் எல் ராய் சார்ட்ட என் தலைவன் படம் #குணா எப்பிடி பண்ணியிருக்காரு பாருகன்னு காமிச்சன் அவர் பாத்துட்டு "என்னயா இப்பிடி ஒரு படம் அப்பவே பண்ணியிருக்காரு நாமலாம் இப்ப என்ன பண்ணிட்டு இருக்கோம்னு" சொன்னாரு"👏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling