#interviewtips
#InterviewProcess
இன்டர்வியூ பத்தி எனக்கு தெரிஞ்ச கொஞ்சத்த நான் இங்க எழுதுறேன். தப்பா இருந்தாலோ அல்லது உங்க பக்கத்துவாதம் இருந்தாலோ தாராளமா சொல்லி திருத்தலாம். 🙏🏽🙂
வாங்க த்ரெட்குள்ள போலாம்.!
இன்டர்வியூ பற்றி திடீர்னு எழுத காரணம். சொல்லப்போனா இத ஒரு மாதத்திற்கு
முன்பாகவே எழுதி இருக்கணும்.
கடந்த ஒரு வாரமாக எனக்கும் நண்பர்கள் சிலர்க்கும் இன்டர்வியூ க்காக வந்த கால் மெயில் காரணம் இந்த ஒரு பெரிய த்ரெட். ஒரு வாரத்துல 10+ ஃபோன் கால் கொஞ்சம் மெயில். மெக்கானிக்கல் ஃபீல்டுல இருக்குற நண்பருக்கும் ITல இருக்குற எங்களுக்கும்.
எப்போவுமே வேலை தேடவும்
இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணவும் சரியான காலம் ஏப்ரல் முதல் ஜூன் வரை (ஜூலை அடிஷனல்). பிறகு நவம்பர் டிசம்பர் (ஜனவரி அடிஷனல்). இந்த ரெண்டு காலகட்டம் தான்.
எப்படி விதைவிதைப்புல தைப்பட்டம் ஆடிப்பட்டம் ரெண்டும் ரொம்ப முக்கியமோ அந்தமாதிரி வேலை தேடுறதுல இந்தரெண்டு காலமும் ரொம்ப முக்கியம்.
இந்த காலகட்டத்துல உங்களோட Naukri LinkedIn Profile எல்லாம் பக்காவா டெய்லியும் Updated Today Status ல வக்கிறிங்களோ அப்போ கண்டிப்பா இன்டர்வியூ கால் வரும் உங்களுக்கு.
ஆனா, இந்த வருடம் அதையும் தாண்டி Updateல இல்லாத profile க்கு எல்லாம் தேடித்தேடி Job vaccancy இருக்குன்னு கால் வருது.
இதுக்கு கொரோனா காரணமா இல்ல. வேற எதாவது காரணம் இருக்கானு தெரியல. ஆனா, Already experienceஅ கைல வச்சிகிட்டு எதாவது ஒரு காரணத்துக்காக Job change பண்ணனும்னு AIM இருக்குறவங்களுக்கு இது ஒரு நல்ல டைம். இப்போ try பண்ணா கண்டிப்பா வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம். கியாரண்டி தரமுடியாது. ஆனா,!
அப்படி 1 Year, 3Year இந்தமாதிரி Experience வச்சிக்கிட்டு தன்னோட முதல் கம்பனில இருந்து வேற கம்பனிக்கு மாறணும்னு நினைக்கிறவங்க இனிவர்றத படிங்க கண்டிப்பாக.
1. ஆகச்சிறந்த பொய்களை சுமந்து வர்ற ரெண்டு லெட்டர் எதுன்னா ஒன்னு படிக்கும்போது குடுக்குற லீவ் லெட்டர் இன்னொன்னு வேலை தேடும்போது
கொடுக்குற ரெஸ்யூம் லெட்டர்.
2. நம்பலோட ரெஸ்யூம்ல 100ல 60% பொய்கள் தான் இருக்கும் கண்டிப்பா. அந்த பொய்களை எப்படி திரித்து வெண்ணையா மாத்தி இன்டர்வியூ ல பேசுறோம் அப்டின்றதுல இருக்கு நம்பலோட வெற்றி.
3. ரெஸ்யூம் குறைந்தது மூனு பக்கமும் அதிபட்சமா 5 அல்லது 6 பக்கமும் இருக்கலாம். நாம்
நமக்கு 10, 15 வருடத்துக்கு மேல experience இருக்கு, 8, 9 கம்பெனிக்கு மேல மாறி இருக்கோம் அப்டின்ற பட்சத்துல 6 பக்கத்துக்கு மேல போகலாம்.
4.90% ரெஸ்யூம்ல இருக்குறத வச்சுதான் கேள்விகள் கேட்பாங்க. So எவ்வளவுதான் பொய் சொன்னாலும் அதுல உண்மைகள் கலந்து இருக்கணும் அவங்க நம்பும்படியாக.
ரெஸ்யூம்ல முதல் இரண்டு பக்கத்துல உங்களோட கரெண்ட் Job பத்தின விவரங்கள் கொஞ்சம் உங்களோட அடிஷனல் Knowledge கலந்து இருந்தா இன்னும் நல்லது. மீதி இருக்குற பக்கங்கள் பழைய Job ரோல் கம்பெனி விவரங்கள் இருக்கலாம் சப்போஸ் ஒர்க் பண்ணிருந்தால்.?!
5. இன்டர்வியூல ரெண்டு விசயம் தான் கவனிப்பாங்க.
அதுல 1. உங்களோட இங்கிலீஷ் Knowledge, தைரியமா பேசும்திறன், எவ்வளவு ஈசியா ஃபுளோல பேசுறீங்க அப்டின்னு பாப்பாங்க. இதுல பொய்கள் கவனிக்கப்படாது. 2.உங்களோட டெக்னிகல் Knowledge. இதுல நீங்க பேசும்போது கவனமா இருக்கணும். எங்கயும் நீங்க சொல்றபொய் அவங்க கவனிக்க கூடாது. பொய்ல உண்மை இருக்கணும்.
6. அவங்க கேக்குற கேள்விக்கு பதில் தெரியல அப்டின்னா Straightforward ல தைரியமா I don't know about this. I didn't remember this. I have to go through About this. இந்த மாதிரி எதாவது சொல்லி அந்த கேள்வில இருந்து வெளில வந்துடனும். தப்பிதவறி கூட 12மார்க் questionsக்கு கதை அடிக்கிற மாதிரி
அங்க எதுவும் ஒலரிட கூடாது. ஒரு கேள்விக்கு பதில் தெறியலனா உடனே அவங்கள அடுத்த கேள்வி கேக்க வைக்கணும்.
7. ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்போது அடுத்த கேள்விக்கான Hint நாம்பலே கொடுக்க கூடாது. எந்த ஒரு பதிலையும் கமா(,) போட்டு முடிக்காமா புள்ஸ்டாப் வச்சி முடிக்கணும். உங்களோட பதில்கள்ள
இருந்து அடுத்த கேள்வி அவங்க எடுக்க கூடாது.
8. பதில் சொல்லும்போது அவங்களை மட்டுமே பாக்கணும். இது முக்கியமான ஒன்னு.
9. நாம்ப அட்டெண்ட் பண்ற இன்டர்வியூ 5நிமிடம், அரை மணி நேரத்துல முடியிறதுக்கும், 1 மணி நேரம் எடுக்குறதும் நம்பகைல தான் இருக்கு.
10. ஆப்போசிட்ல இருக்குற நம்மை போல!
இன்டர்வியூ எடுக்குறவர் கேக்குற கேள்விக்கு எல்லாம்! அவருக்கும் பதில் தெரிஞ்சிருக்கணும்னு எந்த ஒரு அவசியமும் இல்ல. ஒன்னுமே தெரியாம with 0% Knowledge ல கேள்விகளை பேப்பர்ல அல்லது சிஸ்டம்ல Notepadல எழுதிவச்சிகிட்டு கேட்ட இன்டர்வியூ எல்லாம் நானும் நண்பர்களும் அட்டெண்ட் பண்ணிருக்கோம்.
So, தப்பா சொன்னாலோ தெறியலன்னு சொன்னாலோ அவன் என்ன நினைப்பானோ அப்டின்னு தயங்காம பதில் சொல்லணும். கேக்குறவருக்கு கண்டிப்பா உங்களவிட knowledge கம்மியா தான் இருக்கும் அப்டின்ற மைண்ட்செட் வரணும் உங்களுக்கு. அதுதான் உண்மையும் கூட.
~👉🏽 இப்போ Salary டிஸ்கஷன்க்கு வருவோம்.
ஆல்ரெடி உங்களோட
சாலரி ஒரு மதிப்பா 2L இருக்கு உங்களுக்கு ஒரு 2+ Year experience இருக்கு அப்டின்னா கண்டிப்பா நீங்க தயங்காம 110% சாலரி Hike கேக்கலாம். கூடவே Negotiable னு சொல்லலாம். அப்போ தான் 80% Salary Hike உங்களுக்கு கைக்கு மாத சம்பளமா வரும். நீங்க என்ன பேசினாலும் அதுல confidentஆ இருக்கணும்.
அவங்க 30% Hike தான் தருவோம்னு சொல்லுவாங்க. 2L Salary இருக்குற நீங்க 4.5L குடுத்தா வர்றேன் அப்டின்னு தைரியமா சொல்லலாம். குடுத்தா குடுக்குறான் குடுக்கலனா போறான் அப்டின்ற Confidentல பேசணும். உங்களோட Salary 10L வர்ற வரைக்கும் தைரியமா 100% Hike கேக்கலாம்.
அதுக்கு மேல போக போக % கம்மி
ஆகும் Experience அதிகமாகும். 5L Salary இருக்கு அப்டின்னா தாராளமா 10L கேட்டு 9 அல்லது 8.5L ல வந்து நிக்கலாம்.
அவங்க சொல்ற 30% எந்த ஒரு கம்பனியும், புதுசா ஒரு Candidateஅ எடுக்கும்போது கொடுக்குற Default Basic Hike As per the IT Rules and Policies. அதுக்கு மேல நம்பலோட Knowledge and
Experienceஅ பேஸ் பண்ணி நாம்பதான் Demand பண்ணனும்.
10L க்குக்கு அப்புறமா மூனுல ஒரு பங்கு Hike கணக்கு பண்ணிக்கலாம்..
அதனால Salary டிஸ்கஷன்ல நம்பலோட மனம் மூளையின் சம்மந்தம் இல்லாம எப்போவும் கம்பரமைஸ் ஆககூடாது..
எப்போவும் Salary டிஸ்கஷன்ல CTC எவ்வளவு வேணும்னு தான் கேப்பாங்க. ஆனா,
மாதம் இவ்வளவு சம்பளமா என் அக்கவுண்ட்க்கு வரணும்னு தான் நாம்ப அவங்க கிட்ட கேக்கணும். அத Yearலையும் கால்குலேட் பண்ணி வச்சுக்கணும்.
காரணம், மாதிப்பா CTC 6L வேணும்னு நீங்க கேட்டு, அவங்களும் அதுக்கு சரின்னு சொல்லி. அத Monthly ல கணக்கு பண்ணா 50k. அதுல Tax ஒரு 3k போக 47k உங்களுக்கு
வரும்னு நீங்கநெனச்சா. அவங்கஒரு பிளான்போட்டு லொட்டுலொசுக்குன்னு எல்லாம் லிஸ்ட்போட்டு annexureல 40-43k Per Monthல கொண்டுவந்து நிறுத்துவாங்க.
அதனால இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணும்போதும் ஆஃபர் வாங்குறதுக்கு முன்னாடியும் இதஎல்லாம் தெளிபடுத்துகிறது நல்லது.
~🙌🏽👍🏽 இன்னும் மீதியை அடுத்த
பதிவுல பாக்கலாம்.
இத படிக்கிற யாராவது இருந்தா அவங்களுக்கு வாழ்த்துக்கள்.💐 படிக்கிறவங்க தேவைப்படுபவர்களுக்கு பகிரவும்.
சரியான தருணம் இது. காலவிரையம் பண்ணாம வேலை தேட ஆரம்பிங்க. இந்த கொரோனால Walk-in டிரைவ் தவிர்ப்பதுநல்லது.
எதாவது தவறுன்னா என்னை திருத்துங்கள். நன்றி. 🙏🏽🙌🏽
🎉😃
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.